Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 10 ஏப்ரல், 2014

பிடிவாதமா அல்லது பிரிவிணை வாதமா?

அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நமதூருக்கென பல சிறப்புகள் உண்டு. வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஊர் என்பது அந்த சிறப்புக்களுக்கு மகுடமாக அமையும் என்றால் அது மிகையல்ல. சுற்றுபுரத்தில் இருந்து நமதூருக்கு வரும் மக்கள் ,நாம் எண்ணிக்கையில் மிகைத்திருந்தாலும்
அனைத்து சமுக மக்களையும் அரவனைத்து வாழ்வதை நமதூர்ல்லாத வேறு எங்கும் காண்பது அரிதே! நமதூர் அருமை பெருமைகளை பற்றி இவ்வாறெல்லாம் மார்தட்டி சொல்லித் திரியும் அதே வேளை....

கடந்த சில நாட்களாகவே நமதூரில் நடைபெறும் நிகழ்வுகள் இந்த சிறப்பினை சீர்குலைக்கும் வகையில் நிகழ்ந்து வருகின்றன. நமதூர் மேற்கு ஜமாத் பகுதியில் உள்ள குளம் அருகில் ஒரு கல்யாண மண்டபம் கட்ட மேற்கு ஜமாத்தால் முடிவெடுக்கப்பட்டு வேலை நடைபெற்றன.( துபாயில் உள்ள தீன் இயக்கம் இதற்கு எதிப்பு தெரிவித்தன என்பது வேறு விசயம்) ஒரு ஜமாத்தின் அன்றாட செயல்பாடுகளை ஸ்தம்பிக்கச் செய்யும் அளவுக்கு இன்னும் ஒரு படி மேலேபோய் நிரந்தர எதிரியாக வித்திட்டிருப்பது வியப்பிற்குரியதே!

ஜிப்பா தரித்து மதரஸாக்களுக்கு செல்லும் சிறார்கள் அன்றாடம் கண்ணியத்திற்கு உரிய இமாம்கள் கற்றுக்கொடுத்த கலிமா இன்னமும் படித்தவர்கள் நெஞ்சில் பசுமரத்தாணியாய் பதிந்திருக்கும். ஆனால் இன்று அந்த கலிமா சடங்குகளாக ஆகிவிட்டனவா ?


கொடுவா தூக்கி வருபவனை பார்த்து கொன்டை  கோழி ஒருபோதும் கொரவளையை காட்டாது என்பது போல்.....

ஒரு ஜமாத் அதன் வளர்ச்சியின் கட்டங்களில் நிர்வாக வசதிக்காக உள்கட்டமைப்புகளை விரிவு படுத்திக் கொள்வது அல்லது பிரித்துக்கொள்வது என்பது நியாயமான ஒன்று. இதில் தனிப்பட்ட எந்த காரணிகளையும் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது. மாறாக அந்த ஊரில் வாழும் அனைவரின் நன்மையும், ஊரின் முன்னேற்றமும் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். ஆனால் கிழக்கு , மேற்கு , பிராந்திய வாதங்களின் பெயராலோ அல்லது ஒரு சிலரின் பதவி சுகத்திற்காகவே தங்களின் பின்புலத்தில் ஏற்படும் பிரிவுகள் ஊரின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் குந்தகமாகவே அமையும்.

நமதூரின் தந்தை , தொலைநோக்கு பார்வையில் நமதூருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கொண்டு வந்த பாதாள சாக்கை  திட்டம். ஆனால் இது போன்ற பல நல்ல விசயங்களை கொண்டு வந்த மரியாதைக்குரிய ஜனாப் ஜமாலியா சாஹிப் அவர்களை இழிவு படுத்தியது இந்த ஜமாத்தான் என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கின்றது.

நாம் இணக்கமாக இயங்குவதற்கென நம்மால் உருவாக்கப்பட்டது தான் ஜமாத்துக்கள். ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னாலும் திசையின் பெயரால், வாகிரா பெயரால் ஏற்படும் பிளவுகளுக்கு சரி செய்ய இயலவில்லை. காரணம் முஸ்லிம்கள் அனைவரும் எனது சகோதரர்கள் என்று உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டாலும் உண்மையான ஒற்றுமை, சகோதரத்துவம் உள்ளத்தில் முகிழ வில்லை என்பதே உண்மை. இதை பார்க்கும் போது உண்மை செருப்பு மாட்டுவதற்கு முன் பொய் ஊர் சுற்றி வந்துவிடுமாம் அது போலதான் உள்ளது நம்முடைய நிகழ்வுகள்.

இரண்டு ஜமாத்துக்கிடையில் உள்ள பிரச்சனைகளை பற்றி  பேசப்படும் போதெல்லாம் அது பேரூராட்சி தலைவருடன் முடிச்சி போடப்படுகின்றது. பேரூராட்சி தலைவர் ஆசை கொண்டவர்களின் தூண்டுதலே இதன் பின்னணி என காரணங்கள் கற்பிக்கப்படுவதுண்டு. அவைகள் மட்டுமே காரணங்கள் அல்ல. எப்போதெல்லாம் நம்முடைய ஜமாத், மக்கள் விரோதபோக்குடன் , தன்னிச்சையாக செயல்படுகின்தோ அப்போதெல்லாம் இது போன்ற பிரிவினை வாதங்கள் உயர்ந்திருக்கின்றது என்பதை நமதூர் வரலாற்றை தெரிந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

சுருங்கச் சொன்னால் கிழக்கு , மேற்கு பிரிவினைபார்காமல் இருக்கும் வரை இது போன்ற பிரிவினை வாதங்களுக்கு தீர்வு காணமுடியாது என்பதுதான் பிரிந்து கிடக்கும் ஜமாத்தால் கூட மறுக்கமுடியாத உண்மை.


நமது நிருபர்.

5 கருத்துகள்:

  1. அல்லாவின் திருப்பெயரால்...
    இந்த மண்டபம் கட்டுவதால் பயனடைய போவது யார்.தனி நபரா?பொது மக்களா?மேலும் தனி நபரை காப்பாற்றுவதற்காக இல்லாத பூங்காவை கானோம்(கிணற்றை கானோம்)என்று சொல்லி பல லட்சம் செலவு செய்து தடுப்பது முதலில் சரியா?தவறா?

    பதிலளிநீக்கு
  2. இது முழுக்க முழுக்க கிழக்கு ஜமாத் நிர்வாகிகளின் பிடிவாதமும் பிரிவினை வாதமுமே..!!!

    மண்டபம் என்பது ஊர் மக்கள் அனைவருக்குமே.. மேற்கு ஜமாத்தினற்கு மட்டுமல்ல என்பதை ஏனோ இந்த மடையர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
  3. Hello Mr. Arivalli Mohi... If the marriage all is for both the Jamath then why can't you use the one which is available in east Jumma masjid marriage hall? Why do you want to build a new one? Don't just talk like rubbish..... Think your self and then write.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hello Mr. பெயரில்லா அறிவாளி..!!

      You are the one who is really talking RUBBBBISHH..!!!

      உங்கள் கருத்துப்படி பார்த்தால், மேற்கே ஒரு பள்ளி இருக்கும்போது கிழக்கே எதற்கு ஒரு பள்ளி. மேற்கே ஒரு ஜமாஅத் இருக்கும்போது கிழக்கே எதற்கு ஒரு ஜமாஅத்.

      ஒரு ஊரில் இரண்டு மண்டபம் இருப்பது மக்களின் வசதியை அதிகரிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு திருமணங்கள் நடத்தலாம். 25 - 30 வருடம் முன்பு இருந்த மக்கள்தொகை அல்ல இப்போது நமதூரில் உள்ளது.

      எனது ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் தயவு செய்து நீங்கள் பதில் சொல்லுங்கள்.. மேற்கு ஜமாத்திற்கு சொந்தமான, நீண்டகாலமாகவே அவர்கள் பராமரிப்பில் உள்ள இடத்தில் கட்டிடம் கட்டுவதால் கிழக்கு ஜமாத்தினற்கு ஏன் வயித்தெரிச்சல்?

      Please answer..!!

      நீக்கு
    2. THE MARRIAGE HALL FOR BOTH MEANS :-

      மணமகன் மேற்கு மஹல்லாவை சேர்ந்தவராக இருந்தால் மணமகள் கிழக்கு மஹல்லாவை சேர்ந்தவராக இருப்பார். அதே போல் கிழக்கு மண்டபத்தில் மணமகன் கிழக்கும் மணமகள் மேற்கும் மஹல்லாவை சேர்ந்தவராக இருப்பார்.

      ப்ளீஸ்..!! Think and understand yourself before you write reply for any comments.

      நீக்கு