Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

திமுக வின் ஆதரவும் எதிர்ப்பும்- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

திமுக வின் ஆதரவும் எதிர்ப்பும்- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற்க்குழு இன்று திருச்சியில் மாலை 3 மணிக்கு கூடியது. அதிமுகவுக்கான ஆதரவினை வாபஸ் பெற்றதனை தொடர்ந்து அடுத்தது யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதனை
முடிவு செய்ய இச்செயற்க்குழு கூடியது.

செயற்க்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் சில தொகுதிகளில் காங்கிரஸை ஆதரிப்பது என்றும் மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொகுதிகள் ஆதரவு விபரம்.
சிதம்பரம்,திருவள்ளூர் தொகுதிகள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி
தென்காசி தொகுதி – புதிய தமிழகம் கட்சி
மயிலாடுதுறை , தேனி, மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் – காங்கிரஸ் கட்சி
மற்ற தொகுதிகளில் திமுக வுக்கு நிபந்தனையுடன் ஆதரவு.
நன்றி 
tntj.net

5 கருத்துகள்:

  1. எல்லாம் சரி...!! ஹைதர் அலிக்கு வாக்களிப்பதால் என்ன குறைந்து விடப்போகிறீர்கள். JM ஹாரூன் ஐ ஆதரித்த நீங்கள் இவரையும் முஸ்லிம் வேட்பாளர் என்ற முறையில் ஆதரித்திருக்கலாம்..!!

    பதிலளிநீக்கு
  2. ORU MUSLIM ENAI VAIPAVANAI VETA NEICHAYAM MALANAVARTHAN . ETHU YAIPATI P J IKU THERIYAMA POICHU

    பதிலளிநீக்கு
  3. மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு (தமுமுக அரசியல் பிரிவு) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவை அளித்திருக்கலாமே என்று சமூக அக்கறையுடன் கேட்பவர்களுக்கு மட்டுமே இந்த விளக்கம்.

    ததஜ அதிமுக வுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியதும்
    காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டு வந்தது.
    திமுக ஆதரவு கேட்டு வந்தது.
    கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கேட்டு வந்தது.
    திருமாவளவன் விசி கட்சிக்கு ஆதரவு கேட்டு வந்தார்கள்.
    ஆம் ஆத்மி ஆதரவு கேட்டு வந்தது.
    அதிமுக கட்சியின் இரண்டாம கட்ட தலைவர்கள் கூட வாபஸ் முடிவை மறுபரிசீலனை செய்ய சொல்லி வந்தார்கள்.

    ஆனால் #மமக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஆதரவு கேட்டு #வந்ததா?

    இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு தலைவர் அப்போலோ ஹனிபா அவர்கள் ததஜ தலைமைக்கு வந்து மயிலாடுதுறையில் மமகவுக்கு ஆதரவு தர வேண்டுமென்று மாநில நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார்.

    ஹனீபாவுடைய கோரிக்கைக்கு ததஜ தரப்பில்

    -> தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலை அபகரிக்க முயன்றது,

    -> ஜனசாக்களை நபி வழியில் அடக்க விடாமல் தடுத்தது,

    -> தவ்ஹீத்வாதிகளுக்கு இடையூறு செய்தது,

    -> தவ்ஹீத்வாதிகளை ஊர் நீக்கம் செய்வதற்கு துணை போனது

    போன்ற அநீதிகளுக்கு #வருத்தம் தெரிவித்தும் மீண்டும் இது போன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என்றும் வாக்குறுதி கடிதம் தமுமுக- மமக தரப்பில் எங்களிடம் கொடுத்தால் நாங்கள் எங்கள் செயற்குழுவில் எடுத்து வைக்கிறோம் என்ற பதில் கொடுக்கப்பட்டது.

    ததஜவின் நிர்வாகிகளிடத்தில் அப்போலோ ஹனிபா இதோ மமகவிடம் அத்தகைய கடிதம் வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிட்டு, ததஜ அலுவலகத்தில் இருந்து கொண்டு தமுமுக தலைவர் ரிபாயி அவர்களுக்கு போன் செய்தார். ஆனால் ரிபாயி அவர்கள் அப்படியெல்லாம் கடிதம் கொடுக்க முடியாது, வேண்டுமென்றால் ஆதரவு கேட்டு கடிதம் கொடுக்கிறோம் என்று ஹனீபா அவர்களுக்கு பதில் கொடுத்தார்.

    தமுமுக இதுவரைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் அதனுடைய தொண்டர்கள் விஷயத்தில் செய்த அநீதிகள் எல்லாம் சரிதான் என்பது போல் நடந்து கொண்டார்கள்.

    விசிக தலைவர் திருமாவளவனும் ததஜ அலுவலகம் வந்து மமகவுக்கு ஆதரவு தரலாமே என்று கேட்டார். அவரிடமும் இதே நிபந்தனையை ததஜ சொல்ல, தான் சென்று அவர்களிடம் தகவல்களை எடுத்து சொல்லி விட்டு தொடர்பு கொள்கிறேன் என்று சென்றார். ஆனால் மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை.

    சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட உண்மையான சகோதர சகோதரிகளே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனக்கும் தன்னுடைய தொண்டர்களுக்கும் ஏற்பட்ட அநீதிகளை எல்லாம் மறந்து தமுமுக- மமகவை ஆதரிக்கிறோம், ஆனால் அவர்கள் உறுதி மொழி கொடுக்க வேண்டும் என்று கூறியது.

    இந்த உறுதிமொழியையும், வருத்தத்தையும் தமுமுக - மமக கொடுக்க மறுக்கிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? இனிவரும் காலங்களிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அநீதி செய்து கொண்டேயிருப்பேன் என்பது தானே இதன் பொருள்.இதற்கு பிறகும் எப்படி நாங்கள் இவர்களை ஆதரிக்க முடியும்?

    எங்களை இதன் தொடர்பில் விமர்சனம் செய்பவர்களே, அல்லாஹ்விற்கு பயந்து உங்களுடைய விமர்சனங்களை வைக்கவும். உங்களுடைய முகநூல் பக்கங்களிலும் இந்த உண்மையை எடுத்து சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தான் உங்கள் தலைமை உடைய கருத்து என்றால்? நாம் அவைவரும் பாடுபடவேண்டியது முஸ்லிம் அனைவரும் தான்? உங்கள் தலைமை ஏன் இப்படி ஒருதலை பட்ச்சமாக முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை, நோக்கம் தொலைநோக்கு பார்வையாக இருக்கவேண்டும். ஒரு செலருக்கு அநீதி இலக்பட்டாதாள் அனைவரையுன் சம்மதபட்டுதுவது சரி இல்லை

      நீக்கு
    2. அன்புள்ள சகோதரர்களே :

      இதில் நாம் பார்க்கவேண்டியது என்னவென்றால்?
      காங்கிரஸ்,திமுக,கம்யூனிஸ்ட்,திருமாவளவன் விசி,மற்றும் ஆம் ஆத்மி இவைகள் எல்லாம் எப்படி ஒரு அரசியல் கட்சியோ அதேபோல்
      மமக ஒரு அரசியல் கட்சி என்பதில் நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை ட்தான்
      மமக வந்து ததஜ விடம் ஆதரவு கேட்பதில் என்ன தயக்கம் இருக்கிறது.

      காங்கிரஸ்,திமுக,கம்யூனிஸ்ட்,திருமாவளவன் விசி,மற்றும் ஆம் ஆத்மி பொன்றகட்சியின் தலைவர்கள் நேரில் வந்து அதரவு கேட்டது போல் இவர்கலுக்கு என்ன தயக்கம் உண்மையிம் மமக வெற்றி பெற்று தனக்கு (மமக) ஆதாயம் தேடாமல் மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய கட்சியாக இருந்தால் (ததஜ) விடம் அதரவு கேட்பதில் என்ன வெக்கம் இருக்கிறது.

      மமக கொடுக்க மறுக்கிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? இனிவரும் காலங்களிலும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இஸ்லாமிய பொதுமக்களுக்கும் அநீதி செய்து கொண்டேயிருப்பேன் என்பது தானே இதன் பொருள்.இதற்கு பிறகும் எப்படிஆதரவு தருவார்கள்..

      இன்ஸாஅல்லாஹ்
      அல்லாஹ் (மமக) விற்க்கு தக்க பதில் அடி தருவான்.

      இவண்
      Abusaaliha

      நீக்கு