Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

நான் எழுதியிருப்பது சீரியஸான கேள்விகள். இங்கே பகடிகளும், நக்கலும் செய்து இதன் முக்கியத்துவத்தை நீர்த்துவிட வேண்டாம் - நரேன் ராஜகோபால்...

இஸ்லாமியர்களுக்கு ஏன் குஜராத்திலும், உ.பியிலும் பாஜக சார்பாக போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை ? இத்தனைக்கும் குஜராத்தில் 10%-ம், உ.பியில் 17%-ம் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் கூட தரப்படாமல் இருட்டடிப்பு செய்வதின் பின்னிருக்கும் அரசியலென்ன ? அல்லது இப்படி தான் இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர்களை மாநிலங்கள் வாரியாக பாஜக ஒதுக்கி, ஒடுக்க முற்படுகிறதா ?
Ab ki baar Modi Sarkar
திங்கள் கிழமை தேர்தல் அறிக்கை வருமென்று பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது. திங்களன்று தேர்தலை சந்திக்கும் அஸ்ஸாமின் 5 தொகுதிகளுக்கும், திரிபுராவின் ஒரு தொகுதிக்கும் பாஜக என்ன செய்ய விழைகிறது என்று கூட தெரியாமல், மக்கள் வாக்கு சாவடிக்கு
போகிறார்கள். இப்படி வடகிழக்கினை மதிக்காமல் ஒதுக்குவது நியாயமா ? அல்லது அங்கே பாஜகவுக்கு வாக்கு வங்கியே இல்லை அதனால் அவர்கள் எக்கேடு கெட்டு போகட்டும் என்கிற அகம்பாவம் தான் காரணமா ?
Ab ki baar Modi Sarkar
இம்ரான் மஸூத் பேசியதற்கு பொங்கியெழுந்து இது வெறும் பேச்சா என்று அறைகூவல் விட்டவர்கள் “மானத்தை காக்க பழிவாங்கியே தீர வேண்டும்” என்று சொன்ன மோடியின் வலதுகரமான அமித் ஷாவின் பேச்சினை எப்படிப் பார்க்கிறார்கள் ? இம்ரானின் பேச்சினை ராகுல் காந்தி, இது காங்கிரஸின் நோக்கம் அல்ல என்று பொதுவெளியில் சொல்லிவிட்டார். முசாபர்நகர் கலவரத்துக்கு பழிவாங்கியே தீருவது என்பது பாஜகவின் நோக்கமா ? ஏன் இன்று வரை அதற்கு எதிராக மோடி எதுவுமே சொல்லவில்லை ?
Ab ki baar Modi Sarkar
பழைய கேள்வி தான் ஆனால் மீண்டும். ஒரு அரசியல் கட்சியை விட, ஒரு தனிநபருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு போக்கில், ஜனநாயகதன்மை மலரும், நல்லாட்சி பிறக்கும், இந்தியா முன்னேறும் என்று எப்படி முட்டாள்தனமாக நம்புகிறீர்கள் ? சாதாரணமாய் யோசித்து பார்த்தாலே கூட இதிலுள்ள அபாயம் தெரிகிறதே. வலது சாரிகள், புத்திசாலிகள் என்று நீங்களே சொல்லிக் கொள்கிறீர்களே, புத்திசாலிதனம் கூட காவியில் selective intelligentsia தானா ?
Ab ki baar Modi Sarkar
1992 பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு நேரடி அரசியலில், visible-ஆக ஈடுபடாத ஆர். எஸ். எஸ் இந்த முறை எல்லா மாநிலங்களிலும் தங்களுடைய கர் சேவக்குகளை மோடிக்காக பிரசாரம் செய்ய சொல்லியிருக்கிறது. தேர்தல் அரசியல் எங்களுடைய வழி முறை இல்லை, நாங்கள் இந்து மத ஒழுக்கத்தின் காவலர்கள் என்று சொல்லும் ஆர். எஸ். எஸ் ஏன் இத்தனை ஆவேசத்தோடு மோடியை முன்னெடுக்கிறது ? மோடியும் போகுமிடமெல்லாம் தானொரு ஆர். எஸ். எஸ் தொண்டன் என்று முன்வைக்கிறார். இதை எப்படி பாஜகவை ஆதரிக்கும் நடுநிலையாளர்கள் பார்க்கிறீர்கள் ?
Ab ki baar Modi Sarkar
பி.கு: நம்முடைய மோடிக்கு எதிரான போராட்டத்தில் ஏற்கனவே உ.பியில் பாஜக ஒரு இஸ்லாமிய வேட்பாளரை கூட நிறுத்தவில்லை என்று ஆதாரங்கள் வைத்திருந்தோம். அருகிலிருப்பது உ.பியின் இஸ்லாமியர்களிடமிருந்து நேரடி ரிப்போர்ட்.
நான் இஸ்லாமிய ஆதரவை முன்னிறுத்தி, வளர்ச்சியை தடுக்கிறேன், எதிர்காலத்தை நினைக்காமல் மத துவேஷத்தை மட்டுமே பரப்புகிறேன் என்று குற்றம் சாட்டப்படுகிறேன். வளர்ச்சியும், எதிர்காலமும் இந்திய குடிமக்கள் எல்லோருக்கும் பொதுதானே. Inclusive Growth என்று அப்போது எதை தான் சொல்லி திரிகிறீர்கள். மதரீதியான ஒடுக்குமுறையோடு செயல்படுகிறது என்கிற என் குற்றசாட்டுக்கு என்ன பதில் ?
Modi Sarkar nahi nahi; Janta Sarkar abhi abhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக