Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 14 ஏப்ரல், 2014

11 விதமான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் கலெக்டர் தகவல்!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக் காளர்கள் கடவுசீட்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 11 விதமான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக்காண்பித்து வாக்களிக்கலாம்என்று தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் தரேஸ்அஹமது தெரி வித்துள்ளார்.
11 ஆவணங்கள்
இதுகுறித்து அவர் தெரி வித்துள்ளதாவது:-
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர் வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப் பதற்கான வாக்காளர் புகைப் பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர் கள் அவர்களின் அடையா ளத்தை மெய்ப்பிப்பதற்காக கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்டு), ஓட்டுநர் உரிமம், மத்திய- மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், வரைய றுக்கப்பட்ட பொது நிறு வனங்களால், தொழிலாளர்க ளுக்கு வழங்கப்பட்ட புகைப் படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள் , புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், நிரந்தர கணக்கு எண் அட்டை, ஆதார் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் மற்றும் , தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதி அளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு ஆகிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்க வேண்டும்.
எழுத்துப்பிழைகள்
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையால் வாக்காளரின் அடையாளம் மெய்ப்பிக்கப்படுகின்றபோது, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையிலுள்ள அச்சுப்பிழைகள், எழுத்துப் பிழைகள் முதலியவற்றை பொருட்படுத்த தேவை யில்லை.
மற்றொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப் பட்டுள்ள வாக்காளர் புகைப் பட அடையாள அட்டையை, வாக்காளர் அளிப்பாராயின், அந்த வாக்காளர் வாக்களிப் பதற்காக வந்துள்ள வாக்குச் சாவடியின் வாக்காளர் பட்டி யலில் அவரின் பெயர் இடம் பெற்றிருக்குமாயின், அத் தகைய வாக் காளர் புகைப்பட அட்டைகளையும் ஏற்றுக் கொள்ளலாம். புகைப்படம் பொருந் தாததால் வாக் காளரின் அடையாளத்தை மெய்ப்பிக்க இயலாத சமயத் தில், வாக்காளர் மேலே குறிப் பிட்டுள்ள மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக