Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

புற்று நோயைக் குணப்படுத்தும் ஒட்டகம்! – ஆரூர் யூசுப்தீன்

(நபியே) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா – அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று? (அல்குர்ஆன் 88:17)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் உண்மை தூதர் என்பது மீண்டும் நிருபணம் ஆகியிருக்கிறது. அவர்களின் சொல்லை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற ஆய்வில் புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒட்டகத்தின் பால் மற்றும் சிறுநீரில் மருத்துவ குணம் உள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பாலின் மருத்துவ குணம் ஓரளவு சிந்தனைக்கு எட்டும் விஷயமாகும். சிறுநீரில் நோய்களை உருவாக்கும் கிருமிகள்தான் இருக்கும் அதில் எப்படி நோயை குணப்படுத்தும் மருத்துவ குணம் இருக்க முடியும்.
இப்படி சிந்தித்தார் சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் அமைந்துள்ள கிங் அப்துல் அஜீஸ் பல்கலைகழகத்தில் பணியாற்றும் பாதன் குர்ஷித் என்ற பேராசிரியை. அதே சமயம் அந்த வார்த்தை சாதரண மனிதனின் உதடுகள் உதிர்த்த வார்த்தையல்ல; இறைவனின் தூதுத்துவத்தை சுமந்து நிற்கும் முஹம்மது நபியின் (ஸல்) உதடுகளில் இருந்து புறப்பட்டு வந்த வார்த்தைகள்.
அப்படியானால் அந்த வார்த்தைக்குள் ஏதோ இரகசியம் புதையுண்டு கிடக்கிறது. அதை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என எண்ணிய அந்த பேராசிரியை 30 ஆண்டுகளுக்கு முன்பு அன்றிருந்த வசதிகளை கொண்டு ஒட்டகத்தின் சிறுநீர் பற்றிய தனது ஆய்வை தொடங்கினார். பல கட்டமாக சவுதியிலும் சவுதிக்கு வெளியே வளர்ந்த நாடுகளின் அதிநவீன ஆய்வு கூடங்களிலும் தனது ஆய்வை தொடர்ந்த அந்த மருத்துவ பேராசிரியை ஆய்வின் முடிவில் உலகையே அதிசயிக்க வைக்கும் நம்மை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் உலகின் மருத்து வவிஞ்ஞானத்தையே திகைப்பில் ஆழ்த்தும் ஒரு அற்புதமான உண்மையை கண்டறிந்தார்.
ஆம்! ஒட்டகத்தின் சிறுநீரில் புற்று நோயை குணபடுத்தும் மூலக்கூறுகள் உள்ளன; அதிலிருந்து புற்று நோயை குணபடுத்துவதற்கான மருந்துகளை தயாரிக்க முடியும் என்பதைத்தான் அந்த பேராசிரியை கண்டறிந்தார்.
அதை பல்வேறு விதங்களில் சோதித்து பார்த்த அவர் இறுதியில் புற்று நோயால் பாதிக்கபட்ட சிலருக்கு அவர் தயாரித்த அந்த மாத்திரைகளை கொடுத்தபோது பாதிக்கபட்டவர்கள் அந்த நோயில் இருந்து குணமடைவதை கண்டிறிந்தார்.
அவரது ஆய்வு ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உள்ளது என்ற நபிகள் நாயகத்தின் கருத்தை 100 சதவீதம் உறுதி செய்தது.
30 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு அந்த பேராசிரியை கண்டறிந்த அந்த முடிவிற்கான அடிப்படையை சாதரண வார்த்தைகளில் நபிகள் நாயகத்தால் (ஸல்) எப்படி சொல்ல முடிந்தது.
விஞ்ஞானத்தின் விழிகள் இறுக கட்டப்பட்டிருந்த காலத்தில் வாழ்ந்த நபிகள் நாயகத்தால் (ஸல்) அதுவும் எழுதவும் படிக்கவும் தெரியாத நபிகள் நாயகத்திற்கு ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உள்ளது என்ற உண்மை எப்படி தெரிந்தது?
அவர்கள் சராசரி மனிதனாக இருந்து கொண்டு இதை சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. எல்லாவற்றையும் அறிந்துள்ள இறைவனின் துதராக அவர்கள் இருந்ததால் அவகள்டம் இருந்து புறப்பட்டு வந்த வார்த்தை இறைவனின் வார்த்தையாக இருந்ததால் இது சாத்தியமானது.
எனவே இந்த நபிமொழியும் நபிகள் நாயகத்தின் துதுத்துவத்தை அறுதியிட்டு உறுதி கூறும் அற்புத சான்றுகளில் ஒன்றாக அமைகிறது. இனி அந்த நபிமெழியைதருகிறேன்
வெளியூரில் இருந்து நபிகள் நாயகத்தை (ஸல்) காண வந்த சில மனிதர்கள் நோயுற்று இருந்தார்கள். அவர்களை பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) தனது ஒட்டக மேய்ப்பாளரிடம் அந்த ஒட்டகத்தின் பாலையும், சிறுநீரையும் பெற்று அருந்துமாறு கூறினார்கள். அவ்வாறே அந்த மனிதர்கள் செய்தனர். முழுமையாக ஆரோக்கியம் பெற்றனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: புகாரி
இப்படிப்பட்ட நபியின் வார்த்தைகளை இஸ்லாம் அல்லாதவர்கள் ஆய்வு செய்து அதை நடைமுறை செய்கின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உண்மைத் தூதர் என்று நம்பிக்கை கொண்டும் அவர்களின் சுன்னத்தை நம் வாழ்வில் என்றாவது முழுமையாக நடைமுறைப்படுத்தியிருக்கிறோமா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆரூர் யூசுப்தீன்
(Yousufdeen35@gmail.com)
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக