வளர்ச்சி என்ற வாய் ஜாலம் முடிவுக்கு வந்தது!
தாங்கள் பேசும் வளர்ச்சி என்பது வன்முறையின் வளர்ச்சி, வேற்றுமையின் வளர்ச்சி, வன்மங்களின் வளர்ச்சி! எங்களின் ஒரே இலக்கு இந்துத்துவாவினை மட்டும் ஏற்கும் இந்தியா என்பதை மீண்டுமொரு நிரூபித்திருக்கிறது RSS (பாஜக).
என்ன ஒரு அருமையான நாடகம்!
பிரம்மாண்டமான அவதூறுகளுக்கும், வன்மங்களுக்கும் பெயர் போன RSS (பாஜக) இப்படி நடந்து கொள்வதில் ஆச்சரியமொன்றும் இல்லைதான்.
பிரதமர் வேட்பாளர் என்ற ‘இல்லாத’ ஒன்றை எப்படி ஊடகத்தின் உதவியைக்கொண்டு உருவாக்கியதோ அதே வழியில் இருக்கும் ஒன்றான தேர்தல் அறிக்கையினை இல்லாமல் ஆக்கியிருக்கிறது பாஜக.
தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகளை சொல்லி ஓட்டு கேட்புகள் நடக்கும் கலாச்சாரத்தினை மாற்றி அமைத்திருக்கிறது பாஜக.
அது வெறும் சம்பிரதாயமே! எங்களது ஓரே நோக்கம் நரமோடியை பிரதமராக்குவது மட்டுமே என்பதுதான் அது. (ஏனென்றால் 2002ல் RSS என்ற வில்லிலிருந்து பாய்ந்த சிறப்பான அம்பாக இருப்பதனால்).
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே உருவாக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி, அதன் அறிக்கையை வெளியிடுவதற்கு தேர்தல் தொடங்கும் நாள்தான் கிடைத்திருக்கிறது. அதுவும் மார்ச் 26 ஆம் தேதியே அதன் தலைவர் கையொப்பமிட்டுவிட்ட பிறகும் இதுவரை இழுத்தடித்ததற்கு நோக்கங்களும், சூழ்ச்சிகளும் இல்லாமல் இல்லை.
தன்னுடைய கோர முகத்தினை மறைத்து, வளர்ச்சி என்ற வேஷத்தினை நன்கு விதைத்து, அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாத பதவி மோகத்தினை நன்கு பயன்படுத்தி கூட்டணி என்ற கூட்டல் கழித்தல்களை பரிபூரணமாக நிறைவு செய்த பிறகு வெளியிடப்பட்டிருக்கிறது தேர்தைல் அறிக்கை.
தேர்தல் தொடங்கிவிட்டதாலும் பாஜகவின் உண்மை முகம் மறுபடியும் வெளிவந்துவிட்டதாலும் இனி அந்தக் காரணத்தினைக் காட்டி எந்தக் கட்சியுமே அவர்களை விட்டு வெளிவர முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.
இனி கூட்டணி கட்சிகளும் பாஜகவின் இந்துத்துவ முழக்கத்தினை நியாயபடுத்த தம்மால் இயன்றவரை மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பார்கள்.
தேர்தல் அறிக்கை வெளியிடுவதிலேயே இவ்வளவு சூழ்ச்சிகள் இருக்கிறதென்றால் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் எப்படி இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
இந்தியா தன்னகத்தே கொண்டிருக்கும் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற சிறப்பினை சின்னாபின்னமாக்கும் நச்சுக் கருத்துகளை விதைத்திருக்கும் தேர்தல் அறிக்கை நம் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.
எது எப்படியோ “வளர்ச்சி” என்ற வேஷம் கலைந்து “விஷம்” என்ற கோர முகம் இப்போதாவது வெளிவந்துவிட்டதே என்பதை நினைவில் கொண்டு தேர்தலில் விழிப்போடு வாக்களித்து இந்திய ஒருமைப்பாட்டினை காப்போம்.
நரமோடி என்ற அம்பினை எய்தும் RSS என்ற வில்லின் சூழ்ச்சிகளை தோற்கடிப்போம்.
ஃபைஜுர் ஹாதி AMB
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக