தமிழக முஸ்லிம்களின் வாழ்வு முன்னேற்றம் அடையும்...! இன்ஷா அல்லாஹ் .....!
இஸ்லாமிய வங்கி (Islamic Bank)அதன் வளர்ச்சி அதில் குவிந்து வரும் வேலை வாய்புகள் இஸ்லாமிய வங்கியியல் துறைக்கு நாம் ஆற்ற வேண்டிய அறிவு மற்றும் ஆய்வு ரீதியான பங்களிப்புகள்..... இவை குறித்து தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டு காலமாக முஸ்லிம்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளோம்.
Gulf News நாளிதழில் நேற்று வந்த செய்தி நம்முடைய பணியை மெய்ப்பித்து உள்ளத்தில் எதிர்பார்ப்பு கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அல்ஹம்ந்து லில்லாஹ்...
இன்னும் வேகமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உணர்த்தியது.
" UAE யில் அபாரமாக வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கியியல் துறையில் மேலும் 125 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளன.இதனால் அடுத்த ஆண்டு புதிதாக 8 ஆயிரம் இஸ்லாமிய வங்கியியல் படித்த பட்டதாரிகள்
UAE க்கு மாத்திரம் தேவை. வளைகுடா நாடுகளுக்கு ( GCC ) அடுத்த ஆண்டு 50 ஆயிரம் பட்டதாரிகள் தேவை "
- GULF NEWS
நமது பிள்ளைகளை B.Com | BA Economics | BBA | போன்ற படிப்புகளை... New College | Jamal | Islamiya College | போன்ற நமது கல்லூரிகளில் சேர்த்து.... இளங்கலை ( UG ) மொழி பாடத்தில் இரண்டாவது மொழியாக அரபியை தேர்வு செய்ய வேண்டும்.
(கல்லூரிக்கு சரியாக போய் படிகின்றார்களா இல்லை சத்தியம் தியேட்டர் வாசலில் நிற்கின்றார்களா என்று கண்காணிப்பது பெற்றோர்களின் முக்கிய கடமை)
மேற்படிப்பில் (PG)
இஸ்லாமிய வங்கியியல் குறித்து
Malaysia | UAE |Bahrain | Jordan | UK போன்ற நாடுகளில் படிப்பது உலகளாவிய வாய்ப்புகளை பெற்றுத் தரும். ( செலவு அதிகம் வராது.அப்படியே ஆனாலும் இதற்கு செலவு செய்வது வீணாகாது )
கேரளாவில் இஸ்லாமிய வங்கியியல் பட்டப்படிப்பு சில இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன.
தோழர்களே...! அரசியல் குறித்து முக நூலில் அலசுவதை சில நாட்களுக்கு குறைத்து... இந்தக் கருத்துக்களை அலசி..... மக்களிடம் கொண்டு போய் சேர்த்தால்....
தமிழக முஸ்லிம்களின் வாழ்வு முன்னேற்றம் அடையும்...!
நன்றி : Cmn Saleem
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக