Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 24 ஏப்ரல், 2014

வாக்குப்பதிவை வெப்சைட்டில் மக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு

தமிழகத்தில் நாளை 39 தொகுதிகளில் நடக்கும் வாக்குப்பதிவை வெப்சைட்டில் பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்து 817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 17 ஆயிரத்து 684 வாக்கு சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக public.gelsws.in என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவை வீடியோவில் பார்வையிட விரும்புவோர், முதலில் வெப்சைட்டில் பெயர், தொலைபேசி எண்களை வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு அவர்களுக்கு பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கப்படும். அதன்மூலம் வெப்சைட்டில் வாக்குப்பதிவை பார்வையிடலாம். இந்த வசதி இன்று காலை 7 மணி முதல் கிடைக்கும். மேலும், ஒரு பார்வையாளர் 10 நிமிடங்களுக்கு மட்டும் வாக்குப்பதிவை பார்வையிட முடியும். அதன்பிறகு இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் பார்வையிட புதிதாக லாக் இன் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 கருத்து:

  1. தற்போது தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம்!!




    தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு:

    தொகுதி காலை 9 மணி 11 மணி மதியம்
    திருவள்ளூர் (தனி) 10% 34.4%
    வட சென்னை 12.62% 27.4%
    தென் சென்னை 10% 2 6.3%
    மத்திய சென்னை 11% 25.4%
    ஸ்ரீபெரும்புதூர் 11% 30.6%
    காஞ்சிபுரம் (தனி) 15% 36.4%
    அரக்கோணம் 8% 37.8%
    வேலூர் 16.05% 34.3%
    கிருஷ்ணகிரி 8.67% 38.9%
    தருமபுரி 9% 42.9%
    திருவண்ணாமலை 15% 39.1%
    ஆரணி 14.2% 41%
    விழுப்புரம் (தனி) 9% 3 7.1%
    கள்ளக்குறிச்சி 11% 38.7%
    சேலம் 14.6% 34.92%
    நாமக்கல் 14% 37.8%
    ஈரோடு 18% 37.8%
    திருப்பூர் 17.13% 35.8%
    நீலகிரி (தனி) 11% 32.3%
    கோயமுத்தூர் 15% 2.7%
    பொள்ளாச்சி 16% 33.4%
    திண்டுக்கல் 16% 39.8%
    கரூர் 18.64% 39.6%
    திருச்சி 16% 34.6%
    பெரம்பலூர் 17.71% 39%
    கடலூர் 17.4% 38%
    சிதம்பரம் (தனி) 17.6% 37.6%
    மயிலாடுதுறை 15.89% 34.5%
    நாகப்பட்டினம் (தனி) 17.13% 37.3%
    தஞ்சாவூர் 17.32% 39.5%
    சிவகங்கை 16.09% 36.3%
    மதுரை 15.94% 31%
    தேனி 17.9% 36.9%
    விருதுநகர் 16.66% 36.9%
    ராமநாதபுரம் 15% 33.37%
    தூத்துக்குடி 15.4% 33.28%
    தென்காசி (தனி) 16.7% 35.68%
    திருநெல்வேலி 14% 33.6%
    கன்னியாகுமரி 15% 31
    மொத்தம் 14.31% 35.28%
    ஆலந்தூர் இடைத் தேர்தல் 11% 27.6%

    பதிலளிநீக்கு