யா அல்லாஹ் நீ தான் எங்களை காப்பாற்றுவாயாக...
நமதூர் மக்கள் அனைவரும் தங்கள் தாய், தந்தை,மனைவி, மற்றும் பிள்ளைகள் என அனைவரையும் விட்டு விட்டு பொலப்புக்காக வெறும் பணத்துக்காக துபாய் சென்று அவர்கள் வாழும் துன்பத்தை பார்த்தால் எப்படி சொல்வது என்று சொல்ல இயலாது...நான் ஒரே ஒரு விஷயம் மட்டும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்....
துபாயில் நமதூர் மக்கள் அதிகமாக வாழும் டேரா துபாய் என்னும் இடத்தில் விபச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுருப்பதை துபாயில் உள்ள நமக்கு எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்..அதுவும் நமதூர் மக்கள் காலம் காலமாக தங்கி இருக்கும் பர்க்கத் ரூம் என்று சொல்லப்படும் ரூமுக்கு முன்பு போக வருகின்ற நமது சகோதரர்களை விபச்சாரிகள் கையை பிடித்து இழுத்து விபச்சாரத்துக்கு அழைப்பது அங்கு வாடிக்கை ஆகிவிட்டது....
விபச்சாரத்தை பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது..
விபச்சாரத்தின் பக்கம் கூட நெருங்காதீர்கள் அது மானக்கேடான பாவம் என்று குர்ஆன் சொல்கிறது.
விபச்சாரம் என்பதை அவ்வளவு ஒரு பெரிய பாவமாக,வழிகேட்டில் இழுத்து செல்லும் செயலாக இஸ்லாம் சொல்கிறது.
விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (அல்குர்ஆன் 24:2)
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது அஸ்லம்' குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்து நான் விபசாரம் செய்துவிட்டேன்'' என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) நான்கு தடவை ஒப்புதல் வாக்குமூலம் அவர் தந்தார் . ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து,உனக்கு என்ன பைத்தியமா?'' என்று கேட்டார்கள். பின்னர்,உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?' என்று கேட்டார்கள். அவர் ஆம்'' என்றார். எனவே, அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.) அவர் மீது கற்கள் விழுந்த போது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். இறுதியில் (மதீனாவின் புறநகர்ப் பகுதியில்) பாறைகள் நிறைந்த அல்ஹர்ரா' எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டார்
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி 5270
யா அல்லாஹ் நீதான் எங்கள் அனைவரையும் விபசாரத்தில் இருந்து காப்பாற்றுவயாக என்று இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் துவா செய்வோம்....
அமீரகத்தில் உள்ள நமது சிறப்பு செய்தியாளர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக