மதுரையை மிரட்டும் வெடிகுண்டுவழக்குகளில் அவிழ்கிறது மர்மமுடிச்சு!
வெடிகுண்டு வைக்க உளவுத்துறை போலிஸுக்கு பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆவணம் கோர்ட்டில் தாக்கல்!
மதுரையை சுற்றி கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வந்த வெடிகுண்டு வழக்குகளை விசாரித்து வந்த ஆய்வாளர். மாடசாமி என்பவர் தீடிரென்று அதிரடியாக பணிஇடமாற்றம் செய்யப்பட்டார்.
அப்போது உளவுத்துறைக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை பல பத்திரிக்கைகள் வெளியிட்டன. அதில் உளவுத்துறை அதிகாரிகளுக்கு வெடிகுண்டு வைக்க பணம் வழங்கப்பட்ட செய்தியும், பல கொலை வழக்கில் தில்லுமுல்லு செய்ய பணம் வழங்கப்பட்ட செய்தியும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்குகளை CBI விசாரணைக்கு மாற்றக்கோரி SDPI வழக்கறிஞரணி தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் நேற்று மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் பீட்டர் ரமேஷ் குமார் அவர்கள் வெடிகுண்டு வைக்க உளவுத்துறை அதிகாரிக்கு பணப்பட்டுவாடா நடந்த வங்கி ரசீதை தாக்கல் செய்து வாதாடினார். தன்னுடைய வாதத்தில் அவர் கடந்த 2008ம் வருடம் கோவை உளவுத்துறை உதவிஆணையாளர் ரத்தினசபாபதி, கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்தி அதில் அப்பாவி முஸ்லீம்களை கைது செய்ததையும், பின்னர் இவ்வழக்கு நேர்மையான காவல் அதிகாரி பாலனால் உண்மை கண்டுபிடிக்கப்பட்டு,போலிஸே குண்டுவைத்தது நிரூபணம் ஆனதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இதே போன்றுதான் தற்போது மதுரையிலும் போலிஸே குண்டு வைத்துவிட்டு, முஸ்லீம்களை எப்பொழுதும் தீவிராதிகளாகவே பொதுசமூகத்திற்கு காட்ட உளவுத்துறை திட்டம்தீட்டி வெடிகுண்டு நாடகங்களை அறங்கேற்றி வருவதாகவும் கூறினார். மேலும் உளவுத்துறையின் பாசிஸ போக்கையும் ஆதார ஆவணங்களுடன் சுட்டிக்காட்டி இதனால் அரசு தரப்பு இவ்வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும் பீட்டர் வாதிட்டார். கூடுதல் வாதங்களை வரும் திங்களன்று கேட்பதாக நீதியரசர் சுப்பையா அவர்கள் கூறி வழக்கை ஒத்திவைத்தார். இச்செய்தி முக்கிய நாளிதழ்கள் அனைத்திலும் இன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதை இப்பதிவுடன் இனைத்துள்ளேன்.இறைவன் நாடினால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்! எதிர்பார்ப்போம் ப்ரார்த்தனைகளுடன்……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக