Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 2 ஏப்ரல், 2014

கோயிலில் இருந்து வேட்டை ஆரம்பம்

கோயிலில் இருந்து வேட்டை ஆரம்பம்
நமதூரில் கடந்த காலங்களில் இவர்கள் செய்த பிரச்சாரத்திற்கும் தற்போழுது இவர்கள் இருக்கும் நிலைமைக்கும் சம்மந்தமில்லை என்றுதான் தோன்றுகிறது.
அரசியல் இலாபத்திற்காக மட்டும் இப்படிப்பட்ட ஓட்டு தேவையா உங்களுக்கு. நீங்கள் ஒரு இஸ்லாமிய MP என்று பெருமிதம் கொள்வீர்களேயானால் இனியும் இது போல் ஒரு விலம்பரத்தை ஓட்டுக்காக தேடாதீர்கள் அது உங்களுக்கும் நன்மையில்லை! உங்களை சார்ந்த அமைப்புக்கும் இது நன்மையில்லை.

இதைஎல்லாம் மிஞசும் அளவிற்கு இவர்கள் பேசிய அயோக்கிதனமான பேச்சு அனைத்து இமாம்கள் மத்தியிலும் முகம் சுழிக்கு வண்ணம் அமைந்துள்ளது. காரணம் இஸ்லாத்தின் முக்கிய கடமையான ஹஜ் செய்வது மற்றும் நோன்பு நோற்பது எவ்வாறு கடமையோ அது போல் இவர்கள் கூட்டனியில் இருக்கும் ஜனனாயக கூட்டனிக்கு ஆதவு அளிப்பது ஒவ்வெறு முஸ்லிமின் கடமை என்று அறிவிப்பு கொடுத்துள்ளனர்.

இதில் இருந்து இவரைபோல் பலரை இப்படிப்பட்ட சிந்தனையில் இருந்து மீட்டெடுக்கும் பொருப்பு இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு கடமை.

இந்த கடமை செய்யாமல் இவர்கள் அலட்சியப்படுத்துவார்களேயானால் 
தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கும் கத்தியானது இவர்களையே காவு கொடுத்துவடும். எதிர்காலத்தில் இது போன்ற கட்சி இருந்ததது என்று வரலாறு கூட நம் தலைமுறைக்கு காட்ட மறுத்து விடும்.

இட்டுக்கட்டி பேசுபவர்களை கொட்டம் அடிக்க விட்டு விடக்கூடாது. இதுதான் நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத்தந்த பாடம்.

நமது நிருபர்.


9 கருத்துகள்:

  1. இந்தியா டுடே பத்திரிக்கை
    நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற
    உறுப்பினர்களின்
    செயல்பாடுகளை ஆய்வு செய்து
    மதிப்பீடு வெளியிட்டுள்ளது.
    இதில் இந்திய அளவில் சிறப்பாக
    செயல்பட்ட 20 எம்
    பிக்களை தேர்வு செய்து தமிழகத்தை சேர்ந்த
    எம்பியான இந்தியன் யூனியன் முஸ்லிம்
    லீக்கை சேர்ந்த அப்துல் ரஹ்மானுக்கு 6
    வது இடத்தை இந்திய டுடே வழங்கியுள்ளது.
    இவர் வேலூர்
    தொகுதியிலிருந்து எம்பியாக
    தேர்ந்தெடுக்கபட்டார் தற்போது மீண்டும்
    அங்கு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்என்னசெய்தார்? இவர்என்னசெய்தார்? என்று கேட்டவர்களுக்கு இந்தியடுடே எடுத்த சர்வேயை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 542 எம்பிக்களில் 6ம் இடத்தைபிடுதுள்ளார் "மாஷாஅல்லாஹ்"( எல்லாப்புகழும் இறைவனுக்கே.) மீண்டும் அவர் வெற்றிபெற்று மக்கள்பணியாற்ற இறைவனை பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. அரசியலுக்காக இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை தகர்க்கும் இவர்களுக்கு இம்மையிலும் இழிவுதான் மறுமையிலும் இழிவுதான். உண்மையை தோலுரித்து காட்டிய LBK நியூஸ் பாராட்டுக்குரியது. A. Syed Mushtafa

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த அமைப்பை பற்றி கூரினால் LBK நியூஸ்கு பாரட்டுவீர் tntj வை பற்றி எழுதிநாள் வசைபாடுவீர்.

      நீக்கு
    2. @ least this news is published. But there are many news about your brother Mr.P.J. Which is not published. Even if the news are published there are idots they will never belive that and explain( Copy Paste from OnLINEPJ Website) that we have so many hidden reason for supporting our enemy.

      நீக்கு
  3. அரசியலில் இறகிவிட்டால் இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.தனது சுயலாபத்திற்காகவம்,சுயநலத்திற்காகும் செயல்படுகிறார்கள்.இதில் அப்துல் ரஹ்மான்,ஐவாஈருல்லா,ஜய்னுலாப்தீன் யாரும் விதிவிலக்கல்ல..

    பதிலளிநீக்கு
  4. இவர்என்னசெய்தார்? இவர்என்னசெய்தார்? என்று கேட்டவர்களுக்கு இந்தியடுடே எடுத்த சர்வேயை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 542 எம்பிக்களில் 6ம் இடத்தைபிடுதுள்ளார் "மாஷாஅல்லாஹ்"( எல்லாப்புகழும் இறைவனுக்கே.) மீண்டும் அவர் வெற்றிபெற்று மக்கள்பணியாற்ற இறைவனை பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  5. ஒரு அமைப்பு செய்யும் தவறுகலை சுட்டிகாட்டுவது தவறல்ல.அதேசமயம் அவர்கள் செய்யும் நல்ல விசயங்களை பாராட்டவும் வேண்டும்.

    பதிலளிநீக்கு