Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 5 பிப்ரவரி, 2014

சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாய்.....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


இன்று (04-02-2014) பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு ஜெய்லானித் தெருவை சேர்ந்தவரும் என் நெருக்கத்துக்குரிய சகோதருமான ஜனாப்.அப்துல் ஸத்தார் (ஸத்தார் பாய்) அவர்கள் அதிகாலை 4 மணியளவில் வஃபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

திறந்து கிடக்கும் நன்மைகள்


ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான அடியான் உளு செய்து தனது முகத்தை கழுவினால் அவர் கண்ணினால் செய்த எல்லா பாவங்களும் முகத்திலிருந்து வெளியாகும் முதல் தண்ணீரோடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தனது இரு கைகளையும் கழுவினால் இரு கைகளினால் செய்த பாவங்கள் கைகளிலிருந்து வெளியாகும் (முதல்)

நோ ஆஃபீஸ் டென்ஷன் ப்ளீஸ்! – மனஅழுத்தத்தைக் குறைக்கும் எளிதான வழிகள்!

அலுவலகத்திற்கு செல்லும் பலருக்கும் அதிகப்படியான வேலைப்பளுவினால் உண்டாகும் டென்ஷனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.இத்தகைய மன அழுத்தத்தினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு வருவதோடு, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் தவிப்பார்கள்.
வேலைக்கு செல்வது என்று முடிவெடித்துவிட்டால், நிச்சயம் சில சமயங்களில் அங்கு அதிகப்படியான வேலையை செய்ய வேண்டி வரும். அப்படி அதிகப்படியான வேலையைச் செய்யும் போது, மனமானது சோர்ந்து விடுவதோடு, உடல்நலத்தையும் பாதிக்கும்.

பத்திரிகைத்துறை ஒரு பார்வை

அன்றாடம் மக்களின் அசைவுகள் நகரத் தொடங்குவதே பத்திரிகைகளிலிருந்துதான். ஒரு சாதாரண இந்திய குடிமகனிலிருந்து (Citizen), நாட்டின் தலைவர் (President) வரைக்கும் பத்திரிகை இல்லாமல், அன்று அவர்களுடைய வாழ்க்கை தொடங்காது.

திங்கள், 3 பிப்ரவரி, 2014

“உறவுகள் மேம்பட… சமுதாயம் சீரடைய…!” – நெல்லை ஏர்வாடி முஸ்லிம் அறக்கட்டளை நடத்திய கட்டுரைப் போட்டியில் 3ம் பரிசு பெற்ற கட்டுரை!

இது நெல்லை ஏர்வாடி முஸ்லிம் அறக்கட்டளை நடத்திய கட்டுரைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கட்டுரை. அபூதபியில் வசிக்கும் ஃபரினா அல்தாஃப் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.
“உறவுகள் மேம்பட… சமுதாயம் சீரடைய…!”
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும்.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

படித்ததில் பிடித்தது...

மனைவிகளுக்கு சில உபதேசங்கள்.... 

1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. உங்கள் கணவன் வீட்டினுள் நுழைந்தது முதல் அந்த வாசனையை உணரச் செய்யுங்கள். 

2. கணவன் ஓய்வெடுக்கக்கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்போதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயற்படுங்கள். 

3. கணவனுடனான தொடர்ச்சியான உரையாடலை, கலந்துரையாடலை பேணிக் கொள்ளுங்கள். வாதாட்டம், தனது கருத்தில் பிடிவாதம் என்பவற்றிலிருந் து தவிர்ந்து கொள்ளுங்கள். 

இறப்பு செய்தி 02.02.2014

பழைய வாட்டர் டேங் பின்புறம் துருகம் முஹம்மது சுல்தான் அவர்களின் மனைவியும் பாபு என்கிற ரபி பாபு , அப்துல் ஹாதி மற்றும் அன்வர் பாஷா இவர்களின் தாயாருமாகிய ஹலீமா பீவி அவர்கள் இன்று 02.02.2014 அதிகாலை 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்.

இரும்பு ஓர் உதாரணம்!

இரும்பு என்றால் அது மிகவும் வலிமையானது, உறுதியானது என்று அறிவோம். வலிமையான உடல்களை கொண்ட நபர்களை இரும்பு மனிதன் என்று உதாரணம் கூறுவார்கள். ஆனால் அந்த இரும்பு எப்படி உருவாக்கப்பட்டது என்று யாரும் அறிந்ததில்லை.

இரும்பு என்பது அல்லாஹ்வினால் படைக்கப்பட்டதும் அவனால் இந்த பூமிக்கு அனுப்பட்டதும் என்று கீழ்க்காணும் வசனம் உணர்த்துகிறது:

நாம் நம்முடைய தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்துகொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். இரும்பையும் நாமே படைத்தோம். நாமே இறக்கினோம். அதில் பெரும் சக்தி இருக்கின்றது.

சனி, 1 பிப்ரவரி, 2014

புனித ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பங்கள் வரவேற்பு! – தமிழக அரசு அறிவிப்பு

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடைசி தேதி : மார்ச் 15
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஹஜ் 2014–ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதிமுறைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, மும்பை இந்திய ஹஜ் குழு சார்பில் ஹஜ் விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.

வியாழன், 30 ஜனவரி, 2014

நினைவுச்சின்னமாக மாறிய நமதூர் தபால் பெட்டி!

நினைவுச்சின்னமாக மாறிய நமதூர் தபால் பெட்டி!
நான் அந்த முந்தைய சமுதாயத்தினரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் திர்ஹங்களைவிட, தீனார்களைவிட நேரத்திற்கு அதிக மதிப்பும், அதிக முக்கியத்துவமும் கொடுத்தனர். அதன் விசயத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்தனர்.
 ஹஸன் அல் பஸரீ (ரஹ்)

நாட்கள் வெகு தூரம் கடந்து செல்லவில்லை. ஆனால் நினைவுளும் நிம்மதியான நிகழ்வுகளும் நம்மை வெகு தூரம் அழைத்து செல்வதைபோல் தோன்றுகிறது.


ஆம் நம் குடும்பத்தார்கள் துபையில் வந்திரங்கிய காலமுதல் தொன்று

அந்த 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூர் அருகே பெண் ஆசிரியரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் 3 பேருக்கு பெரம்பலூர் கோர்ட்டில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

வழிப்பறி வழக்கு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அத்தியூரை சேர்ந்தவர் பவுலின் மேரி. லப்பைக்குடிகாடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

நமதூரில் காணப்பட்ட சுவரொட்டி

மரணம் முடிவல்ல !       மறுமையின் ஆரம்பம்!!!

மரனத்தை கன்டு அஞ்சுபவன் நிச்சயம் ஒரு முஸ்லீமாக இருக்கமாட்டான் சகோதரா...


வக்ஃபு பற்றி கருத்து கூறியதினால் வெளியேற்றப்பட்டார்.

 டெல்லி: தேசிய வக்ஃபு வளர்ச்சிக் கழக துவக்க விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்த்து கேள்வி கேட்ட நபர் விழா அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
டெல்லியில் தேசிய வக்ஃபு வளர்ச்சிக் கழக துவக்க விழா பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது.

நமதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விருது...

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த ஆரம்ப சுகாதார நிலையமாக லெப்பைக்குடிக்காடு ஆரம்ப சுகாதார நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

புதன், 29 ஜனவரி, 2014

“தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு” – நூல் விமர்சனம்


நூலின் பெயர் : “தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாறு”
ஆசிரியர்: எஸ்.எம். ரஃபீக் அஹமது
வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம்
பக்கங்கள்: 72
விலை: 45/-

செவ்வாய், 28 ஜனவரி, 2014

இரவு பகல் பாராமல் நடைபெற்ற ஆயத்த பணிகள்...



நமதூரில் இருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஜனவரி 28 சிறை செல்லும்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்- திருச்சியில் பரபரப்பு கிளப்பிய போஸ்டர்கள்

திருச்சி: சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹித் ஜமாத் அமைப்பினரை  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என  போஸ்டர்கள்  ஒட்டப்பட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

இட ஒதுக்கீடு: தமிழகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்! -

சென்னை: மத்திய, மாநில அரசுகளிடம் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தரக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.


திங்கள், 27 ஜனவரி, 2014

வரவேற்கத்தக்கது....

தமிழகத்தில் 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் : SDPI கோரிக்கை....!! 

தமிழகத்தில் 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று SDPI கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு...

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

சென்னை ராயபுரத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்: சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் V.H.P.!!

சென்னை ராயபுரம் பகுதியில் முஸ்லிம்கள் மீது வி.ஹெச்.பி அமைப்பினரின் தாக்குதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவிவருகிறது.
சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேல் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இங்கு வாழும் மக்களுடன் பரஸ்பரம் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் சமீப காலமாக இந்த பகுதியில், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் வாழும் பகுதியில்

புதிய குடும்ப அட்டை பெற பிப். 1, 15-ல் சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் சேர்த்தல், திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப். 1 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், குடும்ப அட்டை தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், பிப். 1-ல் பெரம்பலூர், வேப்பூர் வட்டங்களுக்கும், பிப். 15-ல் ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களுக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மாபெரும் இரத்ததான முகாம்...




இன்ஷா அல்லாஹ்,,,லப்பைகுடிக்காடு தமுமுக நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் 26/01/2014 லப்பைகுடிக்காடு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் நடைப்பெரவுள்ளது.

சனி, 25 ஜனவரி, 2014

கலை என்பது எதைக் குறிக்கிறது?

(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள். (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க் கற்பனை செய்கின்றீர்களா?” அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 10: 59,60)

ஜனவரி =28 சிறைச் செல்லும் போராட்டம் சம்பந்தமாக ஒரு மாற்று மத சகோதரன் சொல்வதை கேளுங்கள்..

ஜனவரி =28 சிறைச் செல்லும் போராட்டம் சம்பந்தமாக ஒரு மாற்று மத சகோதரன் சொல்வதை கேளுங்கள்..

சற்றே நீண்ட பதிவு.. முழுமையாக படியுங்கள்..அதிகமா பகிருங்கள்..உங்கள் மேல் உங்களுக்கே அக்கறை இருந்தால்...

ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயம் தன் கையை ஊன்றி தானே எழுந்து நிற்பது எப்படி என்பதை நாடார் சமுதாயத்திடம் தான் கற்க வேண்டும்..

"பள்ளனை தொட்டா தீட்டு..பனையேறிய பாத்தாலே தீட்டு" என்று விஷம் கக்கியவர்கள் இன்று நாடார் பள்ளிகளிலும்,கோவில்களிலும் தான் வழிபாடும்,கல்வியும் செய்து கொண்டு இருக்கிறார்கள்..

இதற்கு காரணம் என்ன??

தவ்ஹீத் (இஸ்லாம்) ஏற்படுத்திய மாற்றம்....

ஹன்ஸா (ரலி) என்ற பெண்ணைப் போன்று இன்றைய முஸ்லிம் பெண்ணும் இருக்க வேண்டும். ஹன்ஸா இஸ்லாத்தை தழுவுவதற்கு முன் நடந்த ஒரு சம்பவத்தில் அவரது சகோதரர் சஹ்ர் இறந்து விட்டார். அப்போது, ஹன்ஸா ஒப்பாரி வைத்து அழுதது உலகத்தையே உருக்குவதாக அமைந்திருந்தது. அவரது சகோதரர் சஹ்ருக்காக அவர் பாடிய இரங்கற் பாக்கள் அரபு இலக்கிய வரலாற்றில் புகழ் பெற்றவை.

தமுமுக வின் சமுதாய பணி...



தமுமுக லப்பைகுடிக்காடு நகரம் சார்பாக{மேற்க்கு ஜாமியா பள்ளிவாசல்} முஸப்பர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வசூல் செய்யப்பட்டது.

வியாழன், 23 ஜனவரி, 2014

இதில் இருந்து எதாவது புரிதா?

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசம் என்ற நிலையில் இருந்து படு மோசம் என்ற நிலைக்கு போய்விட்டது. இது உடனடியாக சரிசெய்ய பட வேண்டும் 
- நமது இணையதளம் 

இந்த நவீன நூற்றாண்டு மக்களை பரவலாக ஒரு நோய் பீடித்திருக்கிறது. கடமைகளை செய்யும் முன் உரிமைகளுக்காக குரல் எழுப்புவதே அந்த நோய் ஆகும்.
ஒவ்வெருவரும் “என் மீது உள்ள கடமை என்ன?” என்று கேட்கும் முன்,

புதன், 22 ஜனவரி, 2014

சமுதாய கட்சிகளுக்கு ஒரு சாதாரண முஸ்லீம்களின் கேள்வி!


அஸ்ஸலாமு அழைக்கும் ....

ஒரு சாதாரண முஸ்லிமின் கேள்வி....

ஒரு முஸ்லிம் அமைப்பு (TNTJ ) இட ஒதிகீடுக்காக மாபெரும் போராட்டம் நடத்த உள்ளனர் அது ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்காக அனால் இவர்களுக்கு நமது சகோதர முஸ்லிம் அமைப்புகளை அழைக்க மறுக்கின்றனர்....

திங்கள், 20 ஜனவரி, 2014

மரணத்தை நோக்கிய பயணம்!

சில மாதங்களுக்கு முன்பு, நான் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். மஸ்ஜிதில் வைத்து நடைபெற்ற அந்தத் திருமண நிகழ்ச்சியில், மவ்லவி குத்பா உரை நிகழ்த்தினார். திருமணம் சம்பந்தமான குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், மணமகனுக்கும், மணமகளுக்கும் பயன்படக்கூடிய உபதேசங்கள், அறிவுரைகள் என்று சொல்லிக் கொண்டே வரும் போது முக்கியமான ஒரு விஷயத்தைக் கூறினார்:

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

எறும்பிடம் கற்க வேண்டிய பாடங்கள்!

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி), ”எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும், அவருடைய சேனைகளும் அவர்கள் அறியாமல் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)” என்று கூறிற்று. (அல்குர்ஆன் 27)
இந்த வசனத்தில் எறும்புக் கூட்டத்தின் தலைமை எறும்பு கீழுள்ள எறும்புகளுக்கு, “சுலைமான் நபியின் படை வருகின்றது. நாம் அனைவரும் புதருக்குள் சென்று விடுவோம்” என்று கூறியது. உடனே அனைத்து எறும்புகளும் புதருக்குள் சென்று விட்டன.

வெள்ளி, 17 ஜனவரி, 2014

அலட்சியப் படுத்தப்படும் அண்ணலாரின் நடைமுறைகள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் வாழ்க்கைதான் உலக மக்கள் அனைவரும் பின் பற்றி வாழ்வதற்கு சரியானதும் தகுதியனதுமாகும் இன்று மனிதர்கள் பேஷன் என்ற அடிப்படையில் கண்ட கண்ட செயல்களில் ஈடுபட்டுக் கொடிருக்கின்றர்கள் அதனால் அவர்களுக்கு நோயும் ,கண்ணியக்குறைவும் ஏற்படுகின்றது நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந் நடைமுறைகள் மனிதனுக்கு அணைத்து விதத்திலும் ஆரோக்கியத்தையும் கண்ணியத்தையும் கொடுக்கின்றது ஏனெனில் அல்லாஹ் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கும் அருள் கொடையாக அனுப்பியுள்ளான் .

செவ்வாய், 14 ஜனவரி, 2014

ஏமாற்றுபவன் என்னை சார்ந்தவன் அல்ல - நபி மொழி

நமதூர் மருத்துவர்க்கு ஏற்பட்ட நம்மிக்கை மேசடி


குப்பனுக்கும், சுப்பனுக்கும் வரி இல்லை! உனக்கோ வேறு வழி இல்லை! சம்மந்தமில்லாமல், திருச்சியில் உள்ள ஒரு பல் மருத்துவமனை விளம்பரத்துக்கு இப்போது என்ன அவசியம் வந்தது? நம் கேள்வியிலும், செய்தியிலும் அர்த்தம் இல்லாமலில்லை! எல்லாம் நம் ஊர் ஜமாஅத்

திங்கள், 13 ஜனவரி, 2014

பொது அறிவிப்பு....

 தற்காலியமாக நமதூர் கிளை நூலகம் சந்தை திடல் அருகில் உள்ள அரசு நடு நிலைப்பள்ளியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வியாழன், 9 ஜனவரி, 2014

யார் இந்த மர்ம நபர்.....?

மண்டபத்தை மர்மமான முறையில் புகைப்படம் எடுத்த மர்ம நபர் யார்?

இன்று நமதூரில் மேற்கு மஹல்லாவிற்கு உட்பட்ட மண்டபம் கட்டுமான இடத்தில் இரண்டு மர்ம நபர் புகைப்படம் எடுத்தனர்.

அவர்களிடம் ஒரு சிலர் விசாரித்தவரை தாங்கள்

ஊடகவியலாளர்களின் கருத்துரிமைக்கு அச்சுறுத்தல் கூடாது:வீரபாண்டியன் மீதான நடவடிக்கையை கண்டித்து சமூக, அரசியல், மனித உரிமை ஆர்வலர்கள் அறிக்கை!

சன் டி.வியில் அரசியல் விமர்சகராக பணியாற்றி வரும் திரு.வீரபாண்டியன் அவர்களை அத்தொலைக்காட்சி பணியில் இருந்து நீக்கக்கோரி மதவாத சக்திகள் வலியுறுத்தி வரும் சூழலில் அதனை கண்டித்து அரசியல் மற்றும் சமூக தலைவர்கள், மனித உரிமை மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்,எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அமீரகத்தில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத்....

அமீரகத்தில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத்....

செவ்வாய், 7 ஜனவரி, 2014

சண்டையில் முடிந்த பேரூராட்சி கூட்டம்..

கை கலுவிய மேற்கு ஜமாத்தும்

பரபரப்பு ஏற்படுத்திய பேரூராட்சி கூட்டம். கடந்த சில மாதங்கலாகவே நமதூர் வார்டு உறுப்பினர்கள் ஒரு மித மாக து.தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்ச்சித்தனர். ஒரு சில காரணங்களால் இவை தற்காலியமாக நிருத்தி வைக்க பட்டுயிருந்தது.

தமுமுக சார்பாக முஸாபர் நகர் மக்களுக்காக நிதி வசூல் செய்யப்படுகிறது!



முஸாபர் நகர் மக்களுக்காக நீதி வசூல் செய்யப்படுகிறது.. கோவை மக்களுக்கு வாரிக்கொடுத்த சொந்தங்களே... குஜராத் மக்களுக்கு வாரிக்கொடுத்த சொந்தங்களே... வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரிசா மக்களுக்கும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கும்

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

முஸஃபர் நகர்:நடுங்கவைக்கும் நினைவுகளை மறக்க குழந்தைகளுக்கு கையெழுத்துக் கலை பயிற்சி!

உ.பி மாநிலம் முஸஃபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு போர்வை, உடைகள், உணவுடன் கையெழுத்துக்கலை (calligraphy) பயிற்சியும் அளிக்கப்படுகிறது.ஷாபூர் ஜதில் ஜோகியா கேரா முகாமில் அப்துல் வாஜித் காஸ்மி என்ற முஸ்லிம் மார்க்க அறிஞர்  குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்துவதற்காக உருதுகையெழுத்துக் கலையை கற்றுக்கொண்டுக்கிறார். இவர் விக்ரானா கிராமத்தில் உருது ஆசிரியர் ஆவார்.முகாமின் ஒரு பகுதியில் பாறைகளுக்கு அப்பால் காஸ்மியின்

புத்தக மதிப்புரை போட்டிக்காக! - யாஸ்மின் பின்த் முஹம்மத் அலீ


இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) கூறிய வகையில் நேரத்தை எவ்வாறு ஈருலக வாழ்விற்கும் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்று கூறுவதே இப்புத்தகத்தின் நோக்கம். 


நேர நிர்வாகம் குறித்து ஆங்கிலத்தில் பல புத்தகம் வெளி வந்து இருந்தாலும் தமிழில் வெளி வந்த முதல் இஸ்லாமிய நூலாக கருதப்படுவது இப்புத்தகத்தையும், எழுதியவரையும் மென்மேலும் சிறப்பிக்கிறது.