Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 31 டிசம்பர், 2012

"மதாயின் சாலிஹ்" சுற்றுலா பயணிகளுக்கு "சவூதி அரசு" திறந்து விடுகிறது!


சவூதி அரேபியாவின் தொல்பொருள் ஆராய்ச்சிக்கழகம் "மதாயின் சாலிஹ்" பழமைச்சின்னத்தை பார்வையிட விதித்திருந்த தடையை நீக்கிவிட்டதாக, தொல்பொருள் ஆராய்ச்சிக்கழகம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவை கூட்டாக அறிவித்துள்ளன.
சவூதி அரேபியாவின் தொல்பொருள் ஆராய்ச்சிக்கழக டைரக்டர் "அப்துல்லாஹ் அல்ஜரீஃபானீ" செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.

சனி, 29 டிசம்பர், 2012

அடுத்த தலைமுறையை காப்பாற்றுங்கள்...


அடுத்த தலைமுறையை காப்பாற்றுங்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
LBK சகோதர சகோதிரிகளே...
அல்லாஹ் நம்மை இவ்வுலகில் தன்னுடைய கலீபாவாக (பிரதிநிதியாக) அனுப்பியுள்ளான். படைப்புகளில் மனிதனாக,முஸ்லிமாக,நபி(ஸல்) அவர்களின் உம்மத்தாக,உடல் ஆரோக்கியத்தோடும்,செல்வத்தோடும் வைத்துள்ளான்.வாழ வேண்டிய வழி முறையையும்,வாழ்ந்து காட்ட நபி(ஸல்) அவர்களையும் அனுப்பி வைத்தான்.
அந்த உயர்வான,உண்மையான,வாழ்க்கை முறையை மற்ற மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்புள்ள நாம் நாமே வாழ வழி தெரியாமல், தடுமாறிக் கொண்டுள்ளோம் என்றால் அது தான் உண்மை.மனிதன் யாராக இருந்தாலும் பசி,தாகம்,சோர்வு,உறக்கம் தவிர்த்து வாழ இயலாது.இது இயற்க்கையானது.அது போலவே 

விடிவு காலம் எப்போது ?



வியாழன், 27 டிசம்பர், 2012

நமதூரில் ஆட்டோவை ஆட்டம் கண்ட வைத்த பேரூராட்(சீ)சி

நமதூரில் ஆட்டோவை ஆட்டம் கண்ட வைத்த பேரூராட்(சீ)சி.

நமதூரில் கடந்த சில நாட்களாக ஆட்டோகளுக்கு கட்டுபாடு விதித்து, ஆட்டோ நிருத்தத்தை பேருந்து நிலையம் உள்வளாகத்தில் நிருத்த வேண்டும் என பேரூராட்சி நிபந்தனை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் நமதூரில் ஆட்டோக்கள் அனைத்தும் கடந்த இரண்டு நாட்கள் பேருந்து நிலையம் உள் வளாகத்தில் நிருத்தம் கண்டது. இதன் மூலம் வாடிக்கையாலர்கள் சவாரி சற்று குறைவாக காணப்பட்பதால், மீண்டும் பழைய இடத்திற்கே ஆட்டோ ஓட்டுநர்கள் நிருத்தினர்.

சுகாதாரமற்ற நிலையில் கிடக்கும் பேருந்து நிலையம்.

சுகாதாரமற்ற நிலையில் கிடக்கும் பேருந்து நிலையம்.

நமதூரில் பல காங்களாக பேருந்து நிலையம் உள் செல்லும் வழியில் பராமறிப்பு இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு இருக்கும் வகையில் சாக்கடை கழிவு நீர் ஆற்றுக்கு செல்லும் வழி பழுது பார்காமல் இருக்கிறது. இதன் விளைவாக அங்கே இருக்கும் வனிகர்களுக்கும் மற்றும்

நமதூரில் குளிர் காற்று வீசியது.

நமதூரில் குளிர் காற்று வீசியது.

காலங்களை தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருக்கும் இறைவன் தன்னை மக்கள் நினைவுகூறும் விதமாக இன்று நமதூரில் குளிர்ந்த காற்று வீசியது. இன்று காலை முதல் சூரியன் தென்படவில்லை. வானம் சற்று

நமதூரில் நாய்களின் தொல்லை அதிகமாகி உள்ளது....

ஜமாத் ஆதரவோடு வெற்றி பெற்ற பேரூராட்சி தலைவர் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுப்பாரா?

நமது நிருபர்

நமதூரில் காணப்பட்ட சுவர்ரெட்டிகள்....



அடைய முடியாததல்ல I A S பணிகள்....

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது முதலிடம் !


தமிழக முதல்வர் தலைமையில் கடந்த 19 -ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில், 2012 -ம் ஆண்டில் முதல்வரின் தனிப் பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொண்டதற்கு முதலிடத்துக்கான கேடயத்தையும், 2012 -ம் ஆண்டில் சுகாதாரத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்கான சான்றிதழ் மற்றும்

புதன், 26 டிசம்பர், 2012

25-12-12 ல் மாநாடு கூட்டமான சொற்பொழிவு கூட்டம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

25-12-2012 அன்று நமது தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல் வளாகத்தில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி செய்திட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சி சிறியதாக இருக்கையில், பல விமரிசங்களுக்கிடையிலும், பல தடைகளுக்கிடையிலும் நடத்த ஏற்பாடு செய்துள்ளபடியால், அல்லாஹ்வின் அருளால் நாடியவர்களாக நமது ஜமாஅத்தார்கள் நெஞ்சுருகி கையேந்தி கேட்ட துஆக்களின் பலனாக, நிகழ்ச்சியை, பெரிய மாநாடு கூட்டம் பொல ஆக்கித்தந்த அல்லாஹுவுக்கே எல்லாப் புகழும்.

பெண்களை அதிக அளவில் தாக்கும் கற்பவாய் புற்றுநோய் (cervical cancer)- அதிர்ச்சி தகவல்



புற்றுநோய் ஒரு மோசமான நோய், அது மனிதனின் உடலில் உள்ள செல்களை, உறுப்புகளை மற்றும் இரத்தத்தை சிதைத்துவிடும் கொடிய பண்புள்ளதாகும். அதில் அதிக அளவில் பெண்களை பாதிக்கும் புற்றுநோயாக மார்பகப் புற்று நோய் இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் மும்பையில் Vashi Fortis Hiranandani என்ற மருத்துவமனை தனது 50 மறுத்துவர்களை கொண்டு மும்பையில் 800 பெண்களை ஆய்வு செய்ததில் 95 சதவீதம் பேருக்கு இந்த வகை கற்பவாய் புற்றுநோய் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

செவ்வாய், 25 டிசம்பர், 2012

புழக்கத்தில் உள்ள ரேசன்கார்டுகளை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கும் வகையில் உள்தாள் இணைக்க உத்தரவு!!


தமிழ்நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேசன்கார்டுகளை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கும் வகையில் உள்தாள் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் தற்போது உடற்கூறு (பயோமெட்ரிக்) முறையிலான தேசிய மக்கள் தொகை தகவல் தொகுப்பின் அடிப்படையில் ரேஷன் கார்டு வழங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா வெளியிட்ட அறிவிப்பு:

பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்!!!


பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்!!!

அஸ்ஸலாமு அலைக்கும்  ரஹ்மத்துல்லாஹி  பரக்காத்துஹூ

ஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க. 
ஒருவர் முஸ்லீமல்லாதவர். இன்னொருவர் முஸ்லீம். 
இருவரும் கட்டுகோப்பான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். விளையாட்டு போட்டிக்காக வெளியூர்செல்ல அனுமதி வேண்டி வீட்டில் கேட்க, வீட்டினர் மறுக்கிறார்கள். பெண் குழந்தையை எப்படிதுணை இல்லாமல் வெளியூர்க்கு அனுப்புவது என்ற கவலை இரு குடும்பத்தினருக்கும்!

குஜராத் தேர்தலில் பெய்ட் நியூஸ் அதிகம்! – பிரஸ் கவுன்சில்!


குஜராத் தேர்தலில் கையூட்டு வாங்கிவிட்டு செய்தியை வெளியிடும் பெய்ட் நியூஸ் அதிகம் நடந்துள்ளதாக ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா(பி.சி.ஐ)வின் உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்துள்ளது.இந்த அறிக்கை அதிர்ச்சி அடையச் செய்வதாகவும், ஊடகங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாலே இதனை தடுக்க முடியும் எனவும் ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மன் மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். பி.சி.ஐ உறுப்பினர் ராஜீவ் ரஞ்சன் நாகின் தலைமையிலான குழு ஒன்று, குஜராத்தில் பெய்ட் நியூஸ் சம்பந்தமான புகார்களின் விசாரணைக்கு நியமிக்கப்பட்டது. பத்திரிகைகளில் மட்டுமல்ல, சானல்களிலும் பெய்ட் நியூஸ் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

திங்கள், 24 டிசம்பர், 2012

வெளி நாட்டு வாழ்க்கை - சுயநலமா? குடும்ப நலமா?-


வெளி நாட்டு வாழ்க்கை - சுயநலமாகுடும்ப நலமா?-

//
இங்குள்ள பெற்றோர்களை அவர்களுக்கு வயதாகும் போது கூட இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால்அது நாள் வரை நல்லதொரு சூழ்நிலையில் எந்த வசதி குறைவும் இன்றி மேலை நாடுகளில் வளர்ந்து வந்த நம் குழந்தைகளுக்கு நிச்சயம் அசவுகரியத்தை கொடுக்கிறது.//

வெளி நாடு வாழ் இந்தியர்கள் ஒரு கட்டத்தில் இந்தியா திரும்ப பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இது தான் எனக்கு தெரிந்து யாரும் எதிர் வாதம் செய்ய முடியாத முக்கிய காரணம். அது நெருங்கிய குடும்ப உறவுகளின் மறைவு மற்றும் துக்கங்களில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை.

சுவர்க்கமும் நரகமும் செய்த தர்க்கவாதம்


சுவர்க்கமும் நரகமும் ஒரு முறை தர்க்கவாதத்தில்இறங்கின.
நரகம் நவின்றது: “உன்னத தலைவர்களும் பிரபல பிரமுகர்களும் வீற்றிருப்பது என்னிடம்தான்!”
தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களின் சமூக அந்தஸ்தைக் கண்டு அகங்கரித்து நரகம் இவ்வாறு சொன்னது. சக்கரவரத்திகளும், பிரபுக்களும், தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.
தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களை நோக்கியது சுவர்க்கம். அறிமுகமில்லாதவர்களும், ஊரில் இருக்கிற இடமே தெரியாதவர்களும், ஊரில் அவர்களைக் காணவில்லையென்றால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கேட்கப்படாதவர்களும், ஊரில் இருந்தால் கூட ஒரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படாதவர்களும்தான் சுவர்க்கத்தில் இருந்தனர்.

புதுடெல்லி: தலைமையோ, முன்னேற்பாடுகளோ இல்லாமல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய போராட்டம்!


தலைவர்கள் இல்லை! முன்னேற்பாடுகளும் இல்லை! இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய கொடியவர்கள் மீதான நெஞ்சங்களின் பற்றிய கோபத்தின் நெருப்பு, அரசு மற்றும் போலீசார் மீதான கடுமையான எதிர்ப்பாக மாறி இந்தியா கேட்டில் ஒன்று சேர்ந்த மாபெரும் அக்னியாக நேற்று ஜொலித்தது.
அரசும், போலீசும் மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி அடையும் அளவுக்கு மாபெரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் அணி திரள சில மணிநேரங்களே தேவைப்பட்டது. ஓடிக்கொண்டிருந்த பேருந்தில்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

குஜராத் எதில் சாதித்துதிருக்கின்றது தெரியுமா? மோடியின் வண்டவாளத் தண்டவாளத்தில் ஏற்றும் கட்சு!


இந்தியாவிலேயே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மாநிலம் குஜராத். அதுவும் மோடியின்தலைமையில்.மோடியை அப்படியே தூக்கி பிரதமர் பதவியில்அமர்த்திவிட்டால் இந்தியாஒரேயடியாக முன்னேறிவிடும் என்றொரு மாயை உருவாக்கப்பட்டு வருகின்றது. இது குறித்துகுஜராத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு உண்மையை உடைத்து இருக்கிறார் பிரஸ்கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவர் மார்கண்டேய கட்ஜு.
அவர் தனது அறிக்கையில் குறிப்பிடுகையில்,

ஓடிப்போவது ஏன்? எதற்காக?



அப்பப்பா......விடிந்துவிட்டால் போதும்! எங்கோயாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள்.  அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்அட அல்லாஹ்.... இப்படி ஓடிஓடியென ஓட்டத்திற்கே களைப்பு ஏற்படுவது போலாகிவிட்டது தற்கால சூழ்நிலை :(  கண்டகேட்டகேள்விப்பட்டவைகளில் பல 'சரியான காரணங்கள்', பல'காராணங்களுக்காகவே சரியாக்கபட்டவை'கள்!

சரி நேடியாகவே விசயத்துக்கு வருவோம்.... 

முன்பெல்லாம் கன்னிப்பெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள். ஆனால் தற்போது திருமணமானவர்கள்,  குழந்தை பெற்றவர்கள் கூட ஓடிப்போவது வாடிக்கையாகி வருகிறதே??!!   இதற்கு காரணங்கள்தான் என்ன?

சனி, 22 டிசம்பர், 2012

பெரம்பலூரில் இன்று தமுமுக நடத்திய “ஒற்றுமையை நோக்கி” மாபெரும் கருத்தரங்கம்!


பெரம்பலூரில் இன்று சனிக்கிழமை (22.12.2012) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக ஒற்றுமையை நோக்கிஜமாத்தார்கள் சந்திப்பு நிகழ்ச்சி காலை 10.00 மணியளவில் நிஸ்வான் மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்புவிருந்தினராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் J.S.ரிப்பாயி அவர்களும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த தலைவருமான M.H.ஜவாஹிருல்லாஹ்  ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.

த.மு.மு.க வின் சார்பாக ஜமாத்தார்கள் சந்திப்பு .....

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...


இன்று நடைபெறும் ஒற்றுமையை நோக்கி என்ற நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள ஜமாத்தார்களை சந்திப்பு நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.இதில் கீரனுர் , தொழுதூர் மற்றும் நமதூரில் உள்ள ஜமாத்கள் சுன்னத்துவல் ஜமாத் ,தாருஸ்ஸலாம் ,மர்கஸ் ஆகிய பள்ளியில் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

வியாழன், 20 டிசம்பர், 2012

நமதூரில் மதரஸாக்களின் நிலை...

நமதூரில் மதரஸாக்களின் நிலை...
ஒருகாலம் இருந்தது அப்பொழுது மக்களின் நிலையை பற்றி பார்த்தால் தங்களின் பிள்ளைகளை மதரஸாக்களுக்கு அனுப்புவது கடமையாகவே கருதி தாங்கள் அதற்கு ஆயத்தபடுத்தி அவர்களை மதரஸாவிற்கு அனுப்புவது வாடிக்கையாகவே இருந்தது. அந்த சூழ்நிலை எந்த அளவிற்கு இருந்தது என்றால் இன்று பிள்ளைகள் காலையில் சாரை சாரையாக பள்ளிக்கு செல்வது போல் அன்று மதரஸாக்களுக்கு சென்றுவருவது கட்டாய கடமையாகவே கருதினார்கள். பள்ளிவாசல் மதரஸாக்களில் இடம் இல்லை என்றாலும் கூட ஆங்காங்கே தெருக்களில் தின்னை மதரஸாக்கள் நடப்பதும் அன்றைய கலாச்சாரமாக

நமதூருக்கு பாதாள சாக்கடை எழுதும் கடிதம்..!

நமதூருக்கு பாதாள சாக்கடை எழுதும் கடிதம்..!
அன்புள்ள லெப்பைக்குடிக்காடு மக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.. 
என்னுடைய பிறப்பு பற்றி உங்களுக்கு தெரியப்படுத்தியே ஆகவேண்டும். காரணம் என்னைப்பற்றி ஒரு விழிப்புணர்வே இல்லாமல் உங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய பிறப்பு தமிழகமே ஆச்சரியத்திற்கு ஆழ்படுத்தியது. ஏனென்றால் மாநகராட்சியே ஈன்றெடுக்க முடியாத என்னை இந்த லெப்பைக்குடிக்காடு ஈன்றெடுத்தது. அன்று ஒருசில நல்ல உள்ளம் கொண்டவர்கள் என்னை அழகாக வழர்தெடுக்க வேண்டும் என்று என்னினார்கள் ஆனால் இன்று இருப்பவர்கள் தங்களின் சுய நலத்திற்காக என்னை ஓரம் கட்டி அனாதையக்கி விட்டார்கள்.
ஒரு சிலர் என்னைப்பற்றியே பேசி அரசியலாகவே சித்தரித்து தங்களின் அதிகாரத்தை மாறி மாறி தக்க வைத்து கொள்கிறார்கள்.

உள்ளே ! வெளியே !

உள்ளே ! வெளியே !
நமதூரில் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் உள்ளே சென்று வெளியே வருமாறு புதிய ஆனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது உள்ளே செல்ல ஒருபாதையும் வெளியே வர ஒரு பாதையும் நியமனம் செய்தார்கள். ஆனால் உள்ளே செல்லும் பாதை மிகவும் குறுகளாக உள்ளமையால்

அவரா...! இவர்...?

அவரா...!  இவர்...?
காலம் காலமாகத்தான் கூத்தாடிகளுக்காக வாழ்கையை துளைத்த நாம் இப்பொழுது இருக்கும் இளைஞர்கள் மத்தியில் நம்முடைய சமுதாய மாற்றம் உருவாகி வரும்  இந்த தருணத்தில், நம்முடைய சமுதாய பொருப்பிள் உள்ளவர்களும் தங்களுடைய பொருப்பை உணர்ந்து அல்லாஹ்விற்காக தங்களை மாற்றிக் கொள்வதோடு அல்லாமல் அப்படிப்பட்ட இளைஞர்களையும் வழி

மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா !


புது தில்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு பேருந்திலிருந்து பெண் தூக்கியெறியப்பட்ட சம்பவத்திற்கு பிறகு பெண்களின் பாதுகாப்பு குறித்து சூடான விவாதங்கள் நடைபெறும் சூழலில் தலைநகரில் ஒரு பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி கொடுக்கப்படும் செய்தி வெளி வந்துள்ளது. தலைநகரில் அமைந்துள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை பெண்

மலேகானிலும் நாங்கள் தாம் குண்டுவைத்தோம்: ஹிந்துத்துவா பயங்கரவாதி வாக்குமூலம்!


2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவைத்தது நாங்கள் தாம் என்று சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதி வாக்குமூலம் அளித்துள்ளான். தேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பில் 37 பேர் பலியானார்கள்.
300 பேருக்கு காயம் ஏற்பட்டது. துவக்கத்தில் இவ்வழக்கை விசாரித்த மஹராஷ்ட்ரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினர்(ஏ.டி.எஸ்) தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் உறுப்பினர்கள் என அநியாயமாக குற்றம் சாட்டி ஒன்பது முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில்

நமதூருக்கு பழைய வழித்தடம்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த சில வாரங்களாக நமதூருக்கு NT பஸ் மதியம் நேரத்திலும் வந்து கொண்டு இறுக்கிறது.இதன் வழித்தடங்கள் பெரம்பலூரில் இருந்து ,களத்தூர்

ஹஜ் பயணம் செல்வதற்கு பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்: அரசு அறிவிப்பு


அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வதற்கு பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2013-ம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்சம் 31.3.2014 வரையில் செல்லத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று இந்திய ஹஜ் குழு முடிவு எடுத்துள்ளது.

புதன், 19 டிசம்பர், 2012

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?
      நம்முடைய இஸ்லாமிய மார்க்கமானது இரண்டு விஷயங்களை அடிப்படையாக கொண்டது.
நபி(ஸல்) அவர்கள் கூறுவதாவது.
      உங்களிடம் நான் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பின்பற்றும் காலமெல்லாம் வழிதவறமாட்டீர்கள். (அவை) அல்லாஹ்வின் வேதமும், என்னுடைய (சுன்னத்) வழிமுறையுமாகும்.          அறிவிப்பவர் : இமாம் மாலிக் நூல்-முஅத்தா..

இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!!!


இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!!!
உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்துசிந்தித்து உலக இறுதி நாளின்

ஓர் அன்பு மகளின் கண்ணீர் வேண்டுகோள்!


கியாம நாள் ....


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

இறைத்தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்:
"கல்வி பறிக்கப்படும் வரை பூகம்பங்கள் அதிகமாகும் வரை,
காலம் சுருங்கும் வரை,

செவ்வாய், 18 டிசம்பர், 2012

அல்லாஹ் நமதூருக்கு அந்த பாக்கியத்தை இன்று தரவில்லை....


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

இன்று நமதூரில் மதியம் 12 மணியலவில் அல்லாஹ்வின் ரஹ்மத் இரங்குவது போல் தென்பட்டது. ஆனால் அல்லாஹ் நமதூருக்கு அந்த பாக்கியத்தை இன்று தரவில்லை.

ஒற்றுமையை நோக்கி....


கிழக்கு பழைய பள்ளிவாசல் அருகில்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இடம் ஜெய்லானி தெரு (கிழக்கு பழைய பள்ளிவாசல் அருகில்)

திங்கள், 17 டிசம்பர், 2012

ஜனாஸா பற்றிய விளக்க பயிற்சி முகாம், தாருஸ்ஸலாம் – லெப்பைக்குடிகாடு


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்;
அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
அல் குர்ஆன் 10:25.

துபாயில் மீண்டும் அல்லாஹ்வின் ரஹ்மத்.....


துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் கன மழை பெய்தது.


துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும்  நேற்று நள்ளிரவு முதலே கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக சாலைகளின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இன்று திங்கள்கிழமை வேலை நாள் என்பதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துபாய் காவல்துறையினரின் அறிவிப்பின்படி 330 விபத்துகள் இன்று (மாலை வரை) ஒருநாளில் மட்டும் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய மருத்துவம்...


இஸ்லாமிய மருத்துவம்

1. பேரிச்சம்பழம்
செய்வினை விஷம் குணமாக! 
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோஎந்தவிதமான விஷமோ, ய்வினையா அவரை அண்டாது. 
​வாய்வுத் தொல்லை நீங்க! 
வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம். 

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

25 குழந்தைகளுக்கு கண் கலங்கும் அமெரிக்கா!மற்ற நாடுகளில் குழந்தைகளை கொல்லும்போது கண் கலங்காது ஏன்?


அமெரிக்காவில் கனெக்டிக்கட் மாநிலத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 27 என்று மற்றொரு செய்தி கூறுகிறது. துப்பாக்கிதாரி கொல்லப்பட்டு விட்டதாகவும், சூட்டுச் சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். பள்ளிக்கூட அலுவலகத்தில் அவர் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகின்ற போதிலும், ஒரு வகுப்பறையிலும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. நியூடவுண் என்னும் சிறிய நகரில் உள்ள சாண்டி ஹுக் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
5 முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் இந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள்.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பராக் ஒபாமா தனது வருத்தங்களையும்,

நூற்றாண்டுகள் பழமையான மஸ்ஜிதும், முஸ்லிம் வீடுகளும் இடிப்பு! டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் அநியாயம்!


நூற்றாண்டுகள் பழமையான மஸ்ஜிதும், முஸ்லிம் வீடுகளும் டெல்லி வளர்ச்சி ஆணையத்தால்(டி.டி.ஏ) இடித்து தள்ளப்பட்டுள்ளன. தெற்கு டெல்லியில் மெஹ்ரோலியில் கோஸியா மஸ்ஜிதும், சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளும், கப்றுகளும் ஆக்கிரமிப்பு என்ற பெயரால் இம்மாதம் 5 மற்றும் 12-ஆம் தேதிகளில் டி.டி.ஏ அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் புல்டோஸர் மூலம் இடித்து தள்ளியுள்ளனர்.

நெஞ்சை பிளக்கும் வேதனையுடன் கோத்ரா கேட்கிறது: ‘மெயின் ஓட் ஆப்பிஸ் மாரா, சோக்கரானே சோடோ!’


கோத்ரா:’மெயின் ஓட் ஆப்பிஸ் மாரா, சோக்கரானே சோடோ’! – ஓட்டு போடுகிறோம்! மகனை விடுதலைச் செய்வீர்களா? – என்று நெஞ்சை பிளக்கும் வேதனையுடன் வயதான தம்பதியினர் கேட்டபொழுது அதிர்ச்சி ஏற்பட்டது. நாங்கள்(தேஜஸ்) அரசியல் வாதிகள் இல்லை! என்று கூறியபொழுது ஹாஜி யூசுஃப் அப்துல் ஸதா ஜர்தா, ஒரே அறையை மட்டுமே கொண்ட வீட்டில் முற்றத்தில் நாற்காலியை எடுத்து போட்டார்.
கோத்ராவில் ரயில் தீ பற்றியபொழுது புதிய சைக்கிள் கடையின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட மகன் ஸலீம் ஜர்தா கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிர்ச்சியான சம்பவத்தை ஹாஜி யூசுஃப் விளக்கினார்.

சனி, 15 டிசம்பர், 2012

பாப்புலர் ஃப்ரண்ட் நமதூர் அருகில் தாவா பிரச்சாரம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


“இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கு எத்தி வையுங்கள்” என அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்,தங்கள் ஹஜ்ஜின் இறுதி உரையின் இறுதியில் கூறினார்கள்.

இதன் பொருள்,இறைவன் மனித இனத்திற்கு வழங்கிய வழிகாட்டுதலாம்,இஸ்லாத்தை அதனை அறியாத மக்கள் அனைவருக்கும் எடுத்துச் சொல்லிட வேண்டும். இது அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து அவசியம் நிறைவேற்றிட வேண்டிய அழகிய கடமை என்பதாகும்.இதற்காக

நமதூர் பேரூராட்சி....