Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 13 டிசம்பர், 2012

நமதூரில் ஆற்றங்கரையோரம் ஆய்வு நடைபெற்றது.


நமதூரில் ஆற்றங்கரையோரம் ஆய்வு நடைபெற்றது.
நேற்று 12.12.12 நமதூரில் ஆத்தங்கரையோரம் உள்ள பகுதியில் அரசு அதிகாரிகள் நேற்று மாலை கிட்டதட்ட 4 மணி அளவில் ஆய்வு செய்தனர்.
அதற்கு முன்பு பொண்ணக்கோணத்தில் மனுநீதி முகாம் நடைபெற்றது.இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் தரேஸ் அஹமது பங்கு பெற்றார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இது போன்ற சம்பவங்களினால் என்ன தேன்டுகின்றது என்றால்?
ஊரில் உள்ளவர்களுக்கு யாருக்கும் எந்த ஒரு விசயத்திலும் அக்கரை இல்லை.எல்லாம் சுயநலமாகத்தான் வாழ்ந்து வருகின்றோம். கிட்டத்தட்ட 360 குடும்பங்களின் இரத்த உழைப்பினால் கட்டப்பட்ட அத்தனை
வீடுகளும்,இன்று நமது ஒற்றுமை இல்லாமையால் கேள்வி குறியாக உள்ளது.இதில் ஜமாத்துகளும் சரி பேரூராட்சி து.தலைவரும் சரி யாரும் விதிவிலக்கல்ல. ஒருத்தரை ஒருத்தர் சலைத்தவர் என்று சொல்லிக்கொள்ள முடியாது. இது போன்ற மனநிலையிலேயே நாம் இருந்தால் நமதூருக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கப்போவதே இல்லை!
இப்படி நம்முடைய முழு உழைப்பையும் இழந்து, எதிர்காலத்தில் இதை பற்றி புலம்பி கொண்டிருப்போமா? இது போன்ற நிகழ்வுகள் நடைபெரும் போது எங்களுக்கு ஓர் செய்தி நாபகம் வருகிறது.
மார்ட்டின் லூதர் கிங் சொன்ன கருத்துதான் இதற்கு பெறுத்தமாக இருக்கும்.
கொடியவர்களின் மிருகத்தனம் அல்ல 
  - எனக்கு அதிர்ச்சி தருவது!
நல்லவர்களின் மௌனமே!
இதில் யார் நல்லவர்கள்,யார் கொடியவர்கள் என்று அவர் அவர்களுக்கு தெரியும்.அங்கே இருக்கும் மக்கள் கூட இதைபற்றி விழிப்புணர்வு இல்லாமல் வாழ்கின்றனர்.
மக்களை ஏமாலியாக்கும் ஜமாத்தும், அவர்களை கோமாலியாக்கும் பேரூராட்சியும், இவர்களை நம்பி வாழும் சாமானிய மக்களின் நிலை ஓர் கேள்வி குறியகவே உள்ளது.
நமது நிருபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக