Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 25 டிசம்பர், 2012

பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்!!!


பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்!!!

அஸ்ஸலாமு அலைக்கும்  ரஹ்மத்துல்லாஹி  பரக்காத்துஹூ

ஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க. 
ஒருவர் முஸ்லீமல்லாதவர். இன்னொருவர் முஸ்லீம். 
இருவரும் கட்டுகோப்பான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். விளையாட்டு போட்டிக்காக வெளியூர்செல்ல அனுமதி வேண்டி வீட்டில் கேட்க, வீட்டினர் மறுக்கிறார்கள். பெண் குழந்தையை எப்படிதுணை இல்லாமல் வெளியூர்க்கு அனுப்புவது என்ற கவலை இரு குடும்பத்தினருக்கும்!


அடுத்த நாள் பள்ளியில் ஆசிரியரிடம்,
முஸ்லீமல்லாத பெண்- எங்க வீட்டில் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க
ஆசிரியர்-ம் சரி போ!

முஸ்லீம் பெண்- எங்க வீட்டில் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க
ஆசிரியர்- உங்க ஆளுங்களே இப்படிதான்... பொண்ணுங்கள் எங்கும் விடுறதில்ல, மொகத்தமூடுன்னு ஓவர்ரா கன்ட்ரோல் பண்ணி அடிமைபடுத்துறாங்க... எப்பதான் திருந்தபோறாங்களோ..................................
இதுதான் இன்றைய நிலை!!! 
இஸ்லாமிய பெண் என்றாலே அடிமைப்படுத்தப்பட்டவள் என்று பரிதாபமாக பார்க்கப்படுகிறது.ஆக்சுவலி முஸ்லீமல்லாத குடும்பத்தாருக்கு தன் பெண் மேல் என்ன பயம் இருக்குமோ அதே தான்அந்த இஸ்லாமிய குடும்பத்திற்கும் இருக்கு... ஆனால் சமுதாயத்தின் பார்வையில்?????????!!!!!!!! 


எங்களை பார்த்து நீங்க பரிதாபப்படுறீங்களா??? ஏன் படணும்? என்ன அவசியம் வந்தது??? கீழேஉள்ளதெல்லாம் வாசிங்க.... அதுக்கப்பறம் முடிவு பண்ணுங்க!!!

சொத்துரிமை:

ஆண்களை போலவே பெண்களுக்கும் சொத்தில் பங்குண்டு! இதுதான் எல்லா எடத்துலையும்இருக்கே?? என்னமோ இவங்களுக்கு மட்டும் இருக்குறமாதிரி எதுகெடுத்தாலும் மதம் மதம்னு ஏன்அலையுறீங்கன்னு கேக்குறீங்களா???? 1956 ஜூலை 4ம் தேதி அன்று இந்திய (இந்து)வாரிசு சட்டம்நிறைவேற்றப்பட்ட பின் தான் சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு (தனி சொத்தில் மட்டும். பங்குசொத்தில் இல்லை) என இந்திய அரசியலமைப்பு சொன்னது! 2005ம் ஆண்டு வெளிவந்தசட்டதிருத்தத்தின்படி தனிசொத்திலும் பங்குசொத்திலும் உரிமை உண்டு என கூறப்பட்டது. அதுக்குமுன்னாடிலாம் "சீர் செனத்தி செஞ்சாச்சுல??? இனி என்னாத்துக்கு இங்கே வார்ரவ? எல்லாம்எம்மவனுக்குத்தேன்"ன்னு சட்டம் பேசிட்டிருந்தாங்க நம்ம பெற்றோர்ஸ்! ஆனால் 7ம்நூற்றாண்டிலேயே இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடைத்துவிட்டது. எவ்விதகாத்திருப்புகளும் இல்லை! எவ்வித போராட்டங்களும் இல்லை! எவ்வித கெஞ்சுதல்களும் இல்லை!இந்த பங்கீடு ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கட்டாயக் கடமை ஆகும். இதை நிறைவேற்றியே ஆகவேண்டும். 

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு. என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில்அல்லாஹ் வலியுறுத்துகின்றான். அல்-குர்ஆன் (4:11)
குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச்சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்குண்டு. பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில்பெண்களுக்கும் பங்குண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. அல்-குர்ஆன் (4:7)

திருமண சம்மதம் :

மனதிற்கு விருப்பமில்லாத ஒருவனை காட்டி திருமணம் செய்யும் படி பெற்றோர் எம்மைவற்புறுத்த முடியாது. திருமணத்திற்கு எம் சம்மதம் தான் முதல் முக்கியமான விஷயம். 
விதவைப்பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெறவேண்டும். கன்னி பெண்ணாகஇருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - ஆதார நூல்: புகாரி)

பெண்களின் சம்மதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்க பாருங்க! பெண்ணைஅடிமைபடுத்துவதாகவோ அல்லது உரிமைகளை நசுக்கும் மதமாகவோ இருந்தா இதில் ஏன்கவனம் செலுத்தி பெண்ணின் சம்மதத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?சிந்திப்பீர்களா?

இப்படிதான் ஒருமுறை ஒரு பொண்ணு வந்து நபி (ஸல்) அவர்களிடம் "எங்கப்பா எனக்கு பிடிக்காதநபரை திருமணம் செய்து வைக்கபாக்குறாரு. எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை"ன்னுசொல்லிட்டாங்க. உடனே அதற்கு தீர்ப்பு சொன்ன நபி (ஸல்) அவர்கள் "இந்தத் திருமணம் ஆகுமானதிருமணம் அல்ல! இது செல்லாது! நீ விரும்பியவரை மணம் முடித்துக் கொள்ள உனக்கு உரிமைஇருக்கிறது!” என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள். 
ஒரு பெண்ணின் சம்மதம் இல்லைன்னா கல்யாணமே ரத்தாம்! :-)

இது பெண்ணின் உரிமை! சமுதாயம் தான் கொடுக்கணும். ஏன் மதத்தை தூக்கிட்டுஅலையுறீங்கன்னு கேக்குறீங்களா??? ம்ஹும்ம்ம்... எங்கம்மா அப்பா கொடுக்காதஉரிமையை/சமுதாயம் மறுத்த உரிமையை குர் ஆனின் இறைவசனம் தான் வாங்கிகொடுத்துச்சு! 

மறுமண உரிமை :

விவாகரத்தானாலோ அல்லது கணவன் இறந்தாலோ யாரும் எம்மை வெள்ளைபுடவை கட்டிஅழகுபார்ப்பதில்லை! அதன் பின்னும் எம் பெண்களுக்கு வாழ்க்கை இருக்கு. அவளுக்கு மறுமணம்புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இது சமுதாய உரிமை! இத மதம் தான் கொடுக்கணுமா? ஏன் மதத்தை உரிமையோடுகலக்குறீங்கன்னு கேக்குறீங்களா??? வேறொன்னும் இல்லைங்க... சமுதாயம் அவர்களைவிதவைன்னு முத்திரைக்குத்தி, இயல்பை மாற்றி, மூலையில் உக்கார வைத்தபோது மதம் தான் "நீநீயாகவே இரு"ன்னு சொல்லி கொடுத்துச்சு! இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கும் விதவைபெண்களின் நிலைக்கு இஸ்லாத்தில் எப்போதோ தீர்வு சொல்லப்பட்டுவிட்டது! 

பெண்கல்வி :

அடுத்ததாக படிப்பு! இஸ்லாம் பெண்கல்வி மறுப்பதாக பலர் கருதுகிறார்கள். இதுவும்கட்டுக்கதையே! இன்றைய காலகட்டத்தில் தான் படிப்பின் முக்கியத்துவம் அனைவரும்அறிந்திருக்கிறார்கள். முன்பு பெண் கல்வி என்பது சமுதாயத்தில் மறுக்கப்பட்ட ஒன்றுதான்!அடுப்பூதுவதும் அப்பளம் சுடுவதும் தான் பெண்ணின் நிலை என்ற இழிநிலையை தடுத்து ஆணைபோலவே பெண்ணிற்கும் கல்வி கற்கும் உரிமையை வழங்கியிருக்கிறது. அதுவும் 1400வருசங்களுக்கு முன்பே...

கல்வியைத்தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் என்பது நபி மொழியாகும். (ஆதார நூல்: இப்னுமாஜா)
பெண்களை கொடுமைபடுத்துகிறதா?

பெரும்பாலனவர்களின் எண்ணம் இதுவே! இஸ்லாம் பெண்களை கேவலாக நடத்துவதாகவும்,அவர்களை சதைபிண்டமாகவும் மட்டுமே பாவிக்கிறது எனவும் பலவாறாக விமர்சிக்கிறார்கள்.ஆனால் இஸ்லாம் பெண்களை ராணிகளாய் நடத்துவது ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்... 

இதோ சில உதாரணங்கள் :
உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீதுசில உரிமைகள் உள்ளன. (திர்மிதி)
உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே." (திர்மிதி)
அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்துகொள்ளுங்கள்!அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ்அநேக நன்மைகளை வைத்திருக்கலாம். (அல்குர்அன் 4:19)
எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தைவெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்." (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

இவையெல்லாம் இஸ்லாமிய பெண்மணிகள் சங்கம் அமைத்து, ரோட்டில் கொடிதூக்கி, போராட்டம்பண்ணி, நீதிமன்றம் மனித உரிமை கழகம்ன்னு போராடி ஒவ்வொரு முறையும் பிச்சை கேட்டுவாங்கிய சுதந்திரம் இல்லை! இயல்பாகவே இஸ்லாம் எங்களுக்கு ஏற்படுத்தி தந்தவை! 

இறைவன் கொடுத்த சிந்திக்கும் திறன் இன்னும் நம்மிடம் அப்படியே தான் இருக்கு. திறந்தமனதுடன் முன்முடிவில்லாது யோசிங்க. 


உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்

1 கருத்து: