Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 25 டிசம்பர், 2012

குஜராத் தேர்தலில் பெய்ட் நியூஸ் அதிகம்! – பிரஸ் கவுன்சில்!


குஜராத் தேர்தலில் கையூட்டு வாங்கிவிட்டு செய்தியை வெளியிடும் பெய்ட் நியூஸ் அதிகம் நடந்துள்ளதாக ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா(பி.சி.ஐ)வின் உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்துள்ளது.இந்த அறிக்கை அதிர்ச்சி அடையச் செய்வதாகவும், ஊடகங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாலே இதனை தடுக்க முடியும் எனவும் ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மன் மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். பி.சி.ஐ உறுப்பினர் ராஜீவ் ரஞ்சன் நாகின் தலைமையிலான குழு ஒன்று, குஜராத்தில் பெய்ட் நியூஸ் சம்பந்தமான புகார்களின் விசாரணைக்கு நியமிக்கப்பட்டது. பத்திரிகைகளில் மட்டுமல்ல, சானல்களிலும் பெய்ட் நியூஸ் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
முழுமையான அறிக்கை கிடைத்த பிறகு தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் கமிஷனையும், இதர அதிகாரிகளையும், பொதுமக்களையும் அணுகுவோம் என்று கட்ஜு தெரிவித்தார். ஊடகங்களை கட்டுப்படுத்த ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு கூடுதல் அதிகாரங்கள் தேவை என்ற தனது கோரிக்கையை நியாயப்படுத்தும் விதமாக விசாரணையின் முடிவு அமைந்துள்ளது என்று கட்ஜு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக