தலைவர்கள் இல்லை! முன்னேற்பாடுகளும் இல்லை! இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய கொடியவர்கள் மீதான நெஞ்சங்களின் பற்றிய கோபத்தின் நெருப்பு, அரசு மற்றும் போலீசார் மீதான கடுமையான எதிர்ப்பாக மாறி இந்தியா கேட்டில் ஒன்று சேர்ந்த மாபெரும் அக்னியாக நேற்று ஜொலித்தது.
அரசும், போலீசும் மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி அடையும் அளவுக்கு மாபெரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் அணி திரள சில மணிநேரங்களே தேவைப்பட்டது. ஓடிக்கொண்டிருந்த பேருந்தில்
கொடியவர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்மணிக்கு நீதி கிடைக்கவும், மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் விடுக்கப்பட்ட மெஸேஜ்களை கண்டு ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியா கேட்டில் அணிதிரண்டனர்.
வழக்கமாக பாராளுமன்ற முற்றுகை போராட்டம், பாராளுமன்றத்தை நோக்கிய பேரணி ஆகியன பாராளுமன்றத்திற்கு பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஜந்தர் மந்தரோடு ஒதுங்கிவிடும். அதற்கு பிறகு கடந்து செல்ல போலீசார் அனுமதிப்பதில்லை. ஆனால், நேற்று ஜந்தர்மந்தருக்கு செல்லாமல் மக்கள் நேராக இந்தியா கேட்டிற்கு சென்றுவிட்டனர்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் பெரும்பாலான கல்லூரி மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர். பல்வேறு அட்டைகளில் எதிர்ப்பு வாசகங்களை ஏந்தியவர்கள் இந்தியா கேட்டில் ஒன்றிணைந்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் மக்கள் கூட்டம் திரண்டதால் போராட்டம் ரெய்ஸீனா குன்றை நோக்கி நகர்ந்தது. சிறிது நேரம் முழக்கமிட்டு எதிர்ப்பை தெரிவித்துவிட்டு கலைந்து சென்றுவிடுவார்கள் என்று கருதிய அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கணிப்பு பொய்த்துப் போனது.
மணிநேரங்கள் செல்லச் செல்ல போராட்டத்தின் நெருப்புக்கனல் பற்றிய எரியத்துவங்கியது. புதிய நபர்கள் போராட்ட களத்திற்கு வரத் துவங்கினர். செய்திகள் மூலமாக போராட்டத்தை குறித்து அறிந்து இன்னும் பலர் வரத்துவங்கினர். திரள், திரளாக வந்து முழக்கங்களை எழுப்பினர். குற்றவாளிகளை தண்டிக்க கோரி பல்வேறு வகையான போராட்டங்களை ரெய்ஸீனா குன்றில் போராட்டத்தில் ஈடுபட்டோர் அரங்கேற்றினர்.
சிலர் குற்றவாளிகளை அடையாளமாக தூக்கிலிட்டனர். இதர சிலரோ உருவப்பொம்மைகளை எரித்தனர். வேறு சிலரோ தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஊட்டினர். பல மணிநேரங்கள் கடந்த பின்னரும், சூரியன் மறைந்த பிறகும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. காலையில் இருந்தவர்கள் பலரையும்
மாலையில் காணவில்லை என்றாலும் போராட்டத்தில் எண்ணிக்கை குறையவில்லை.
மாலையில் காணவில்லை என்றாலும் போராட்டத்தில் எண்ணிக்கை குறையவில்லை.
போராட்டக் களத்தில் முழக்கமிட்டு தளர்ந்து போனவர்கள் உணவுக்காகவும், ஓய்வுக்காகவும் நழுவினர். பின்னர் புதிதாக வந்தவர்கள் முழக்கங்களுடன் களமிறங்கினர். குடும்பத்தினருடன் பலர் போராட்ட்டத்தில் கலந்து கொண்டனர். வயோதிகர்களையும் போராட்டத்தில் காணமுடிந்தது. கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டோர் இடையே சில வேளைகளில் மோதல்கள் ஏற்பட்டதையும் காணமுடிந்தது.
நன்றி தூது ஆன்லைன்
டெல்லியில் பேருந்தில் சீரழிக்கப்பட்ட பெண்ணிற்காக ஓங்கி ஒலிக்கின்ற குரல்களை பார்த்து கேட்கிறோம் ...
பதிலளிநீக்குகுஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியினரும்,ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் பெண்களை கற்பழித்து கொலை செய்த போது ஏன் மௌனம் சாதித்தீர்கள் ?
காஸ்மீரில் இந்திய ராணுவம் பெண்களை கடத்தியும், விசாரணை என்ற பெயரிலும் அழைத்துச்சென்று அப்பெண்களின் வாழ்வை சீரழித்த போது என்ன செய்தீர்கள் ?
பசுமை வேட்டை என்ற பெயரிலே பழங்குடி பெண்கள் வேட்டையாட பட்ட போது உங்களுக்கு தெரியாதா ?
மத்திய பிரதேசத்தில் இந்து பயங்கரவாதிகள் கன்னியாஸ்திரிகளை கற்பழித்த போது உங்கள் குரல்கள் எங்கே போயின ... அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் என்ன சொன்னார். மதமாற்றம் பற்றி தேசிய விவாதம் தேவை என்றார்.
இதுவரை இந்தியாவில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்ப்பட்ட முஸ்லிம், கிறிஸ்தவ, தலித், பழங்குடி பெண்களுக்காக உங்கள் குரல்கள் உயர்த்தப்பட்டிருந்தால், அல்லது கற்பழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கொடுத்திருந்தால் ,அல்லது
கற்பழிப்பில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உங்கள் போராட்டம் தீவிரபடுத்தபட்டிருந்தால் பெண்களின் மீது மிருகத்தனமான தாக்குதல் தொடுக்க யாருக்கும் துணிவு வந்திருக்காது !
அநியாயம் செய்யும் கூட்டத்தினரை அடக்க ஓரணியில் திரள்வது அவசியம். அமைதி காத்து ஒதுங்கி நின்றால் இறுதியில் அராஜகம் மேலோங்கி அக்கிரமம் தலைதூக்கும் என்பது டெல்லியில் நடந்துள்ளது.
#from FB
இந்த போராட்டம் கற்பழிப்புக்கு எதிராக மக்களின் எழுச்சி துவக்கம் எனக் கொண்டாலும் மேல கூறிய பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடித்தீர்வு கிடைக்க வேண்டும். மட்டுமல்ல
உலகில் எங்கு நடந்தாலும் கற்பழிப்பு குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்