Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 12 டிசம்பர், 2012

வி.களத்தூர் சாமி ஊர்வலம் சம்மந்தமாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?


திங்கள் கிழமை, காவல் துறையினரால் தடை செய்யப்பட்ட சாமி ஊர்வலம் சம்மந்தமாக இருதரப்பிரையும் சுமூக பேச்சு வார்த்தை நடத்த மாவட்ட ஆட்ச்சித்தலைவரால் அலைப்பு விடுக்கப்பட்டனர். நேற்று காலை சரியக 11.30 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் வருவாய் அலுவலர் பெரம்பலூர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெரம்பலூர், அறியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர் பெரம்பலூர், வருவாய் வட்டாட்சியர் வேப்பந்தட்டை, காவல் ஆய்வலர் பெரம்பலூர், வருவாய் ஆய்வாளர் வாலிகண்டபுரம், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வி.களத்தூர் ஆகியோரின் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது இரு தரப்பினரிலிருந்தும் தலா 5 நபர்களை அனுமதிக்கபட்டனர் முதலில் முஸ்லிம் தரப்பில் வாதங்கள் எடுத்து வைத்தனர்.

1.சபியுல்லா அவர் கூறியதாவது
சாமி ஊர்வலம் செல்லும் பகுதியானது முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் வாழும் பகுதியாகும் இந்துக்களின் ஒரு வீடுகூட இப்பகுதியில் இல்லை. இந்த வீதியில் பள்ளிவாசல் உள்ளது, மதரசாக்கள் உள்ளன, எங்களின் வழிபாடு தளங்கள் இருப்பதால் அவர்களின் ஊர்வளங்கள் மேலதாளங்கNhளடுதான் எப்போதும் செல்கிறார்கள,; ஆடலும் பாடலுடனும், வெடி சத்ததுடனும் செல்வதால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. எங்கள் பகுதில் நாங்கள் ஏற்படுத்தும் விழாக்கள் ஆகட்டும் திருமனத்திற்காக போடபடுகின்ற பந்தல்களை சாமி ஊர்வலம் செல்வதால் உடனடடி அகற்றும்படி காவல்துறை மூலமகவும் கிராம அலுவலர் மூலமாகவும் எங்களை அச்சுரத்தல் செய்கின்றனர். மேலும் அனைவருக்கும் பொதுவான நத்தம் புறம்போக்கான 1191ல் சையத் முராத்ஸா அவுலியாவின் சந்தனகூடு விழாவிற்கு அனுமதி கோறி வருவாய் துறை அலுவலர் (சுனுழு) ரேவதி அவர்களிடம் சென்றபோது இந்து மக்கள் அவ்விடத்தில் உங்களது விழாவை நடத்த எதிர்கின்றனர் மேலும் உங்களுக்கு 1984 (PழுP) ஆர்டரில் உங்களுக்கு இவ்விழா நடத்த அனுமதி இல்லை என்று அனுமதி மருத்து, விழாவை நடத்தவிடாமல் தடுத்தனர். ஆகவே அந்த பிரச்சனைகுரிய இடமான 1191 ல் உள்ள தடையானையை  PழுP ஆர்டரை எங்களுக்கு வழங்கவும். அவ்விடத்தில் இந்துகளுக்கு மட்டுமே தொடர்ந்து அனுமதி வழங்கியும் எங்களுக்கு மட்டும் எவ்வித விழாக்களுக்கும் தொடர் அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் இது போன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க எதிர் வரும் பேச்சு வார்த்தையில் தெளிவான, நியாயமான, நடுநிலையான, தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தன் வாதத்தை முடித்தாh,;
2.பஷீர் அஹமது அவர் கூறுகையில்
1990
ல் சில கயவர்களால் எங்களின் இறைஇல்லமான  பள்ளிவாசல்களை இடித்தும் சில குடிசை வீடுகளை தீ வைத்தும் பொருட்களை சூறையாடியும் சென்றார்கள். அதற்கு நிவாரனம் இதுவரை அரசு இடம் இருந்து 1ருபாய் ஏதும் தரப்படவில்லை. இது Nhபன்று ஆட்டம் பாட்டங்களோடு எங்களின் வீதிகளில் சாமி ஊர்வலம் வருவதால் 1990 ல் நடந்த சம்பவம் போல் நடந்து விடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். மேலும் ஊர்வலம் என்ற பெயரில் எங்களது வீட்டில் நடத்தப்படும் விழாக்களை அவசர அவசரமாக முடிக்க சொல்வதும், அவர்கள் ஊர்வலம் செல்வதற்கு எங்களின் விழாக்களை தடைசெய்வதும், தவிற்கபட வேண்டும் எங்களுக்கு நிறைவான தீர்வினை கொடுங்கள் என்றார்.
3.
அப்துல் ரஹீம் அவர் கூருகையில் 
எங்களது வீதி அவர்களின் தேர் செல்லும் வீதி என்று கருதி நாங்கள் போடப்பட்ட ஆள்துளை கினறை கூட தடை செய்துவிட்டனர். நாங்கள் எங்கள் தெருவில் குடிதன்னீர் எடுப்பதற்கு எங்களின் அடிப்படை உரிமையும் மறுக்கப்படுகிறது. அத்தியவாசி தேவையான தண்ணீர் எடுப்தற்குகூட கிராம நிர்வாகி தடைசெய்கிறார். அன்பு ரீதியாக கூட அவர்கள் சில சமயங்களில் மாற்று வழி இருந்தும் மாற்று வழியில் செல்வதில்லை அதிகாரிகளும் எங்களைத்தான் எங்களது காரியங்களையும், விழக்களையும், விரைவு படுத்துகின்றனர். அல்லது தடை செய்கின்றனர். 1951 முதல் 2012 வரையிலான கடந்த 72 வருடங்களாக அமைதி பேச்சு வார்த்தை என்ற பெயரில் அன்றைய பிரச்சனைக்கு தற்கால தீர்வு மட்டுமே கானுகிறார்கள். எங்களுக்கு இன்று முதல் அனைத்து பிரச்சனைகளுக்கும் இருதி தீர்வு எடுக்குமாறு கூறினார். ஒரு முறை ஒருவர் இறந்துவிட்டார், அவர் மகன் வெளிநாடுகளிருந்து வருவதற்கள் அவரின் உடலை உடனடி எடுக்கும்படி வலியுருத்தினார்கள், மற்றும் ஒருமுறை அவர்கள் ஊர்வலம் செல்வதால் எங்களின் மையத்தை தொழுதூரில் சுமார் 4 மணி நேரம் தாமதப்படுத்தி வருமாறு ஜமாத்தார்களை மிரட்டி தடுத்தனர். இதற்கு முன் இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு விஜயகுமார் அவர்கள் பசும்பலூர் வந்தபோது  குடித்தண்ணீர் பிரச்சனை சம்மந்தமாக அவரிடம் மனு கொடுத்ததற்கு அப்போது இருந்த ஊராட்சி மன்றத்தலைவியின் கணவர் கலியமூர்த்தி மனு கொடுக்க வந்த எங்கள் சமுதாய பெண்களை தாகத வார்த்தையில் பேசியதற்கு அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்றும் எங்களது நீன்ட கால பிறச்னையான 1191 நிலம் தொடர்பாக இருதி முடிவு எடுக்காத வரை இப்பிரச்சனையில் இருதி முடிவு தீராது என்றும், எங்களுக்கு இதுவரை எந்த ஒரு நியாயம் கிடைக்கவில்லை எங்களின் உனர்வுகளுக்கு மதிபளியுங்கள் எங்களுக்கு நியாயம் வழங்குங்கள் என்று கூறினார்.
4.
ஷேக் அப்துல்லா கூருகையில்
எங்கள் தெருக்களில் வீடுகட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும் தேவையான பொருட்கள் இருந்தால் தேர் செல்வதை காரனம் காட்டி உடனடி அகற்ற வேண்டும் என்று கிராம நிர்வாகி, மற்றும் காவல்துறை ஆய்வாளர் மூலம் கட்டாயபடுத்துகிறார்கள். மணல் இருந்தால் பஞ்சாயத்து அலுவலகம் மூலம் வெளியில் அப்புறபடுத்துகிறார்கள் தேர் சென்றபின் அதை திரும்பவும் கொன்டு வந்து கொடுப்பதில்லை. மற்றும் இரவு நேரங்களில் 1 மணி அல்லது 3மணி கண்ட நேரங்களிலும் திருமணம், காதுகுத்து போன்ற ஊர்வலங்கள் காவல் துறை அனுமதி இல்லாமல் மேல தாலங்களுடன் செல்கிறார்கள் எங்களின் கைகுழந்தைகளும், சிறுவர்களும் பயந்து அலறிகொன்டே தூங்காமல் இருக்கும் அவலநிலையில் நாங்கள் இருக்கிறோம். மற்ற சாதரான நாட்களில் அவர்கள் பள்ளிவாசல் தெரு வழியாக நடந்து செல்கிறார்கள் அப்போது நாங்கள் இவ்வழியாக செல்லக்கூடாது என்று யாரும் தடை செய்யவில்லை. இது போன்ற ஊர்வலங்களும் மேலதாலங்களும் வானவேடிக்கைகளும் எங்கள் தெருவழியா செல்லவேண்டாம் என்றுதான் சொல்கிறோம் தவிர அவர் சாமியே இந்த களத்தூரில் தூக்க வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை அவர்களின் விழாக்காழங்களில் அவர்கள் விழாவை கொண்டாடட்டும் மாற்று பாதை இருந்தும் அவர்கள் ஏன் இந்த பள்ளிவாசல் தெரு வளியாகதான்  செல்வேன் என்று ஏன் அடம் பிடிக்கிறார்கள் நீங்கள்தான் எங்களுக் நிரந்தராமான தீர்வு நியாயமன தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார்.
இந்துக்கள் தரப்பில் 
1.
இராமசாமி உடையார் கூருகiயில்
 1985
ம் ஆண்டு 1191ல் சத்திரம் கட்டப்பட்டதிலிருந்தே பிரச்சனை இருந்து வருகிறது. 1990ம் ஆண்டு கலவரத்தை தொடர்ந்து ஏற்பட்ட சமரச உடன்படிக்கை பின்னர் 1992ம் ஆண்டு நடைப்பெற்ற திருவிழாவின் போது இஸ்லாமியர் வடம் பிடித்து கொடுக்க அவர்களுக்கு உரிய மரியாதை நாங்கள் செலுத்தி தேரினை இழுத்து சென்றோம். அவர்கள் நடத்திய சந்தனகூடு விழாவிற்கும் எங்களுக்கும் அதே உரிய மரியாதை செலுத்தினார்கள். பின்னர் ஏற்பட்ட நீதி மன்ற வழக்கால்தான் மீண்டும் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தது. பின்னர் அந்த வழக்கும் முடிக்கப்பட்டது. தேர்தல்களில் கூட இரு சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து தவைர்களை தேர்வு செய்யும் வழக்கமாக இருந்து வந்தது. கடந்த தேர்தலில்தான் போட்டியின் காரனமாக இவ்வழக்கம் விட்டுவிட்டோம். நத்தம் புறம்போக்கு நிலமான 1191-ஐ யை தேரடி புறம்போக்காக மாற்றினால் இரு தரப்பினர்க்கும் பிரச்சனை ஏர்படும் என கருதி அப்போதைய ஒருங்கினைந்த திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் இருதரப்பினர்க்கும் பொதுவான பொது நிகழ்ச்சி நடத்துவதர்க்காக பயன்படுத்த வேண்டும் என்று தடையானை பிறப்பித்தார் எனவே நிலம் சம்மதமாக பின்னர் பேசி முடிவு செய்து கொள்ளலாம். எங்களுக்கு இப்போது இந்த திருவிழா அந்த வீதி வழியாக போக அனுமதி தாருங்கள் என்றார். மேலும் எங்களது இந்து திருவிழா நடைமுறையானது சிறு சிறு மாற்றத்திற்கு உட்பட்டது தான். இஸ்லாமியர்கள் சமூகத்தில் ஏற்படும் மரணம் தொடர்பான நிகழ்வுகளில் அதை நாங்கள் மாற்றி மாற்று பாதையில் செல்வதில் எங்களுக்கு எந்த ஒரு தடையும் இல்லை. சத்திரம் (மண்டபத்தை) திருத்தி அமைத்த போது கூட அவர்களின் வேண்டுகேள் இனங்க வாசலை தென்புறமாக அமைத்தோம். முந்தைய தலைவியின் கணவர் கலியமூர்த்தி இஸ்லாமிய சமூக பெண்களை தவறாக பேசியதாக வந்த தகவலை தொடர்ந்து அவரை கடுமையாக கண்டித்தேன். ஆனால் அவர் அவ்வாரக பேசவில்லை என தெரிவித்தார். ஆனாலும் ஜமாத் மூலம் பேச்சுவார்த்தைக்கு தயாரக இருந்தோம். ஆனால் அவர்கள் தரப்பில்தான் அப்பிரச்சனையை மேற்கொன்டு வளர்க்க வேண்டாம் என அதனை அத்துடன் தவிர்த்து விட்டனர். தலைவர் மீதான புகார் என்பது பொதுவானதுதான். அதை பெரிது படுத்த வேண்டாம் என்றும் எங்களுக்கு இந்த ஒரு முறை  மட்டுமே உள்ளே செல்ல அனுமதி தாருங்கள் இல்லை எனில் சாமி குத்தம் ஆகும் என்று கூறி முடித்தார்.
2.கலியமூர்த்தி கூரும்போது
தண்ணீர் பிரச்சனை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்ட ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அதனை தீர்பதற்கு நான் முயற்ச்சி செய்தேன் இருந்தும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தவுடன் நான் சரி செய்து விட்டேன். நான் குற்றம் செய்தது அதாவது இஸ்லாமிய சமூக பெண்களை தவறாக பேசியதை நிருபிக்கப்பட்டால் எந்த தண்டைனையானலூம் நான் ஏற்று கொள்கிறேன் என்றார்.
இப்படி இரு தரப்பினர்களும் சுமார் நான்கு மணி நேரம் பேச்சு வார்த்தை நடந்தது நாம் மேலே கூறியது ஒரு சில விசியங்கள் மட்டுமே. இருதியில் அதிகாரிகள் இரு தரப்பினர்களின் பேச்சை கேட்டறிந்து அவர்கள் ஒரு சாராரிடம் மட்டுமே பேச்சு உடன்படிக்கை நடத்தியத அறிகிறது அதாவது இஸ்லாமியர்கள் தரப்பினர்களிடம் நீங்கள் அந்த வளியாக செல்ல அனுமதி வளங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உள்ளாக்கினார்கள்  என்பதாக தெரிகிறது.
அதாவது இருதரப்பினர்களும் மத ஊர்வலங்களும் அனுமதிக்கப்பட்ட சாமி ஊர்வலங்களை உரிய காவல் துறை அனமதி பெற்று எவ்வித பயமுமின்றி கொண்டாட உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும். எனவும் இருதரப்பினரும் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில் தடையாணை உத்தரவினை பற்றி பேச வேண்டிய சூழ்நிலையே ஏற்படாது. எனவே இரு தரப்பினரும் பகைமை உணர்வை மறந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக இருக்கவும் மத நல்லிணக்கத்துடகன் இருக்கவும்.
தர்போது ஐப்பன் சாமி ஊர்வலம் 11.12.12 செவ்வாய் கிழமை பிற்பகல் 4.35 மணிக்கு மேல் வ.களத்தூர் கிராமம் கடைவீதி வழியாக முஸ்லிம்கள் வாழும் கடைவீதி வழியாக செல்ல இரு தரப்பினரும் ஒரு மனதாக ஏற்று அமைதியின் மூலம் சாமி ஊர்வலமும் சென்று முடிந்தது.
மேலும் இனிவரும் காலங்களில் திருவிழாக்கள் நடத்துவது, சாமி ஊர்வலம் செல்வது குறித்து அமைதி பேச்ச வார்த்தை வருகின்ற 26.12.12 காலை 11 மணிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பிலிருந்தும் தலா 10 நபர்கள் வீதம் கலந்து கொள்வதாக இரு தரப்பினர்களும் ஏற்று கொண்டுள்ளதாக அறிகிறது.
நீதி ஜெயிக்குமா
வி.களத்தூரை 3 நாட்களாக பதற்ற நிலைக்கு ஆளாக்கியது யார்? நாம் யாரை குற்றம் சொல்வது? அரசாங்காம? ஆதிகாரியா? மாவட்ட நிர்வாகமா? உள்ளுர் நிர்வாகமா?. இந்த பதற்ற நிலை எப்போது மாரும்.
மான்பிமிகு முதல்வர் அம்மாவின் ஆட்சியில் எந்த ஒரு மத கலவரம் நடக்காது, நடந்ததும் இல்லை! என்பது நாம் அனைவரும் அறிவோம்! தமிழகத்தில் இராண்டவது சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் என்று முதல்வரால் (அம்மாவல்) புகழப்பெற்ற கலக்டர் திரு தரேஸ் அஹமது அவர்களின் பணி புரியும் மாவட்டத்தில் இந்த நிலையா? 4 மாவட்டங்களிருந்து காவாலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவர்களும் 36 காவல் வண்டியில் வி.களத்தூரில் குவிந்துள்ளனர். மேலும் ஊரில் உள்ள அனைவர்களும் பெரும் பதட்டதுடன் கானப்பட்டனர். மக்கள் இத்தனை போலிஸ்களை பார்த்ததும் பதற்றம். அரசு அதிகாரிகளுக்கு டென்சன், அரசுக்கு பெரும் தொகை செலவினங்கள். இiவை அனைத்தும் சாமி ஊர்வலம் அந்த முஸ்லிம் வாழும் பகுதி அதாவது இந்துக்கள் ஒரு குடும்பமும் இல்லாத பள்ளிவாசல் வழியாகத்தான் செல்வோம் என்று வாதிடுகிறர்களே இவர்களால் இந்த பிரச்சனையா? கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் சாமி ஊர்வலம் செல்லும் போது எல்லாம் பிரச்சனைகள் உருவாகின. கடந்த முறை கூட செல்வராஜ் என்பவர் சாமி ஊர்வலம் பள்ளிவாசல் அறுகில் செல்லும் போது எங்களை பார்த்து தாகத கெட்ட வார்த்தையில் திட்டி பிரச்சனை உன்டு பன்னினார் அப்போதும் நாங்கள் அமைதியை காத்தோம் ஆகையால் இனி ஒரு இந்துகள் கூட இல்லாத முஸ்லிம் வாலும் பகுதிக்கு சாமி ஊர்வலமோ எந்த ஒரு திருவிழாக்களோ வரவேண்டாம் என்று வாதிடுகிறார்களே! இவர்களின் கோரிக்கை நியாயாமானதுதான!  நீதி கிடைக்குமா? நியாயம் கிடைக்குமா? யாருக்கு நீதி யாருக்கு அநீதி என்று  காளங்கள்தான் இதற்கு  பதில் சொல்லனும்!!!!!!!!!!!!!!

நன்றி வி.களத்தூர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக