நமதூரில் சீமென்ணைக்காக விழித்திருக்கும் அவல நிலை!
நமதூரில் கடந்த வாரம் ரேசன்கடையில் மண்னெண்னை வழங்கப்பட்டதை முன்னிட்டு முதல்நாளே தங்கள் வரிசைக்காக கள்ளு, முச்சி, செங்கள், வலக்காமரு போன்றவற்றை வைத்து தங்கள் இடத்தை தேர்வு செய்த மக்கள், அதையும் மிஞ்சிய வண்ணம் காலை 4-55 மணிமுதல் தங்கள் வரிசைக்கு வந்து நின்றனர். இதனால் கஷ்டப்படுவதோடு மட்டும்
இல்லாமல் நம்முடைய தரத்தை நாமே குறைத்து கொள்கிறோம்.
இதை சரியான முறையில் நம்பர் அடிப்படையில் விநியோகம் செய்கிறார்களா? என்று அந்தந்த வாடு உருப்பினர்களும் கண்கானிக்க வேண்டும். அணைவருக்கும் அனைத்து பொருட்களும் கிடைக்கும்படி நமது ஜமாத்தார்கள் ஆதரவேடு வெற்றிபெற்ற பேரூராட்சி து.தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பிரச்சணைகளை கண்டும் கானாமல் இருக்கும் ஜமாத்துக்களும் இதற்கு ஓர் தீர்வைக்கொண்டுவர வேண்டும். மக்களும் அதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இப்படி அனைவருமே ஒன்றுபட்டு செயல்படுத்தினால் மட்டுமே உரிமைகளை பெறமுடியும்.
ஏன் இந்த அவலநிலை என்று என்றாவது நாம் ஒரு நிமிடம் சிந்தித்து இருக்கிறோமா....?
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக