அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
“இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கு எத்தி வையுங்கள்” என அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்,தங்கள் ஹஜ்ஜின் இறுதி உரையின் இறுதியில் கூறினார்கள்.
இதன் பொருள்,இறைவன் மனித இனத்திற்கு வழங்கிய வழிகாட்டுதலாம்,இஸ்லாத்தை அதனை அறியாத மக்கள் அனைவருக்கும் எடுத்துச் சொல்லிட வேண்டும். இது அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து அவசியம் நிறைவேற்றிட வேண்டிய அழகிய கடமை என்பதாகும்.இதற்காக
நிறுவப்பட்டதே தமிழ்நாடு டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் கடந்த 28 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பட்டணங்கள் முதல் பட்டினக்கரைகள் வரை இஸ்லாத்தை இடைவிடாமல் எடுத்துச் சொல்லி வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
இதன் ஒரு பகுதியாக லெப்பைக்குடிக்காடு அருகில் உள்ள கிராமங்களில் இஸ்லாத்தை அறிமுகம் படுத்தும் தாவா பிரச்சாரம் அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் கீழக்குடிக்காட்டில் உள்ள காலனி பகுதியில் 09.12.2012 அன்று மாலை 4 மணி முதல் 7 மணிவரை நடைபெற்றது.இதில் லெப்பைக்குடிக்காடு நகர பெருப்பாளர்கள் மற்றும் மாவட்ட தாவா பெறுப்புதாரிகள் உடன் இருத்தனர். இந்த பிரச்சாரத்தில் இஸ்லாம் சம்மந்தமான புத்தகங்கள், துண்டு பிரச்சுகம் வினியோகிக்கப்பட்டது.கிட்டதட்ட 25 நபர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்தோம். அல்ஹம்துலில்லாஹ்.
மின்னஞ்சல் மூலமாக
இப்படிக்கு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
லெப்பைக்குடிக்காடு கிளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக