அடுத்த தலைமுறையை காப்பாற்றுங்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
LBK சகோதர சகோதிரிகளே...
அல்லாஹ் நம்மை இவ்வுலகில் தன்னுடைய கலீபாவாக (பிரதிநிதியாக) அனுப்பியுள்ளான். படைப்புகளில் மனிதனாக,முஸ்லிமாக,நபி(ஸல்) அவர்களின் உம்மத்தாக,உடல் ஆரோக்கியத்தோடும்,செல்வத்தோடும் வைத்துள்ளான்.வாழ வேண்டிய வழி முறையையும்,வாழ்ந்து காட்ட நபி(ஸல்) அவர்களையும் அனுப்பி வைத்தான்.
அந்த உயர்வான,உண்மையான,வாழ்க்கை முறையை மற்ற மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்புள்ள நாம் நாமே வாழ வழி தெரியாமல், தடுமாறிக் கொண்டுள்ளோம் என்றால் அது தான் உண்மை.மனிதன் யாராக இருந்தாலும் பசி,தாகம்,சோர்வு,உறக்கம் தவிர்த்து வாழ இயலாது.இது இயற்க்கையானது.அது போலவே
“நீங்கள் நிம்மதி பெறும் பொருட்டு உங்களில் இருந்தே உங்கள் துணை(மனைவி)யை படைத்தேன்”.என்று அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகின்றான்.
எப்படி பசிக்கும் போது சாப்பிட வேண்டுமோ அதை போல மனிதனுக்கு ஏற்படும் இச்சைகளும் ஹலாலான வழியில் தணிக்கப்பட வேண்டும்.அதை தவிர்க்க இயலாது.ஆனால் நாம் வயிற்றுப்பசியைப் போல,உடல்பசியை எண்ணாமல் துச்சமாக எண்ணியுள்ளோம்.இது மாபெறும் தவறு.
தவறுதலாக உங்கள் பார்வை அந்நிய பெண்ணை பார்த்து விட்டால்,உள்ளம் சலனம் ஏற்ப்பட்டு விட்டால் உடனே உங்கள் மனைவியை நாடி என்று அதை தணித்துக் கொள்ளுங்கள் என்ற கருத்து ஹதீஸில் உள்ளது.
ஒரு முறை ஒரு ஷகாபி பெண்மணி தன் கணவரை கடுமையான சில சொற்களை கூற,அதை கேட்ட ஷகாபியின் தோழர்”என்ன தோழரே உன் மனைவி இப்படி உன்னை பேசியும் எப்படி சகித்துக் கொள்கிறீர்” என்று கேட்டார்.அவள் என்னை ஹராமில் இருந்து தடுத்து ஹலாலில் வைத்து இருக்கும் மாபெரும் நன்மையை செய்பவள்,அதற்க்கு முன் இதை சகிப்பது அற்ப விஷயம் என்றார்.
ஒரு ஹதீஸில்“நீங்கள் உங்கள் மனைவியோடு கூடுவதும் தருமம்” என்றார்கள். யாரசூலுல்லாஹ் நாங்கள் எங்கள் இச்சையை தணித்து கொள்வதற்க்கும் அல்லாஹ் கூலி வழங்குகிறானா?” என்று ஷகாபாக்கள் கேட்டனர்.“ஆம் ஹராமான வழியை விட்டு ஹலாலான வழியில் தணித்து கொள்வதால்”என்று பதில் சொன்னார்கள்.
கலீபாவுடைய ஆட்சி காலத்தில் தங்கள் குடும்பங்களை பிரிந்து ஜிகாதில்(போர்களத்தில்) இருக்கும் ஆண்களை முறைவைத்து சிறிது காலம் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.எத்தனை மாதம் இடைவெளியில் அனுப்புவது என்பதை தீர்மானிக்க “பெண்கள் மூலமாக பெண்களிடம்“ஒரு பெண் தன் கணவனை விட்டு பிரிந்து எத்தனை காலம் இருக்க சக்தி (பொறுமை) பெற்றவள்” என்று கேட்க்கப்பட்டது.“4 மாதம் ” என்றார்கள் ஷகாபி பெண்மணிகள்.
ஓ பயணம் போகும் இளைஞர்களே!
வாழ்க்கையை பயணம் என்றார்கள்
உங்கள் வாழ்க்கையே பயணமாகி போனதே
வீட்டுக்கு தாழ்வாரம் தேவைதான்
தாழ்வாரமே வீடாகுமா?
ஒரு குழந்தை உண்டதை விட
கொட்டி சிந்தியதே அதிகம்
என்பது போல சேர்ந்து வாழ்ந்ததை விட
விட்டு பிரிந்ததே அதிகம்.
ஆரம்ப கால கட்டத்தில் வறுமை எனவே வெளிநாடு சென்றார்கள்.இன்னும் சொல்ல போனால் துபாயை கண்டுபிடித்தவர்கள் லெப்பைக்குடிக்காடு வாசிகள் என்னும் ஒரு பெயரும் உண்டு.அதனை தொடர்ந்து அடுத்த தலைமுறை படிப்பை விட்டுவிட்டு பறந்தது.தற்போது பலர் படித்த பின்பு துபை வருகின்றனர்.இந்த பிரிவு வாழ்க்கை என்பது நாம் வாங்கிய வரமா?சாபமா?துபையில் இருப்பவர்களை விட்டு விடுங்கள் அவர்கள் புலி வாலை பிடித்தவர்கள்,விடவும் முடியாது,இருக்கவும் முடியாதுமு.இனி அடுத்த தலைமுறையையும் இது போன்ற வாழ்க்கை முறையிலேயே தள்ளி விட போகிறோமா? அல்லது இந்த வாழ்க்கையை தள்ளி வைக்க போகிறொமா?என்பது தான் முக்கியம்.
வலிமா விருந்தின் வாசனை முடியும் முன்னே வலியோடு வழியனுப்பும் கண் நீர் நிறைந்த விழிகள் இனியும் வேண்டாமே...
தன் குழந்தை தன்னை புதியவனாய் பார்த்து வர மறுக்க...
இரக்கதில் இருக்கும் இதயங்கள்...
இனியும் வேண்டாமே...
துபாய் திரும்பும் நாள் நெருங்க நெருங்க தூக்கு தண்டனை கைதிபோல- தத்தளிக்கும் மனது...
இனியும் வேண்டாமே...
காலை முதல் மாலை வரை பாலையிலே பணி செய்து - உடல் வலியோடு வீடு வந்து விழும் போது,அநாதையாய் அழும் உள்ளம்.
இனியும் வேண்டாம்...
தன் குழந்தையை போல குழந்தையை பார்த்து விட்டால் இது போலதானே என் செல்லமும்...என அடிவயிற்றில் இருந்து பீரிட்டு கிளம்பும் துக்கம்.
இனியும் வேண்டாம்...
நம் தாய் திருநாட்டிலே வளமோடு,நலமோடு,வாழும் மாற்று மத சகோதர்களை பாருங்கள்.IAS,IPS,IFS என்ற உயர் பதவிகளை ஒரு சில இனத்துகாகவே நாமே ஒதுக்கி கொடுக்க வேண்டாமே.வீதியில் இறங்கி போராடி,போராடி வீதியே வீடாகி போனதே.நம் அடுத்த தலைமுறையை அப்பதவிகளிலே அமர வைத்து விட்டு நம்போராட்டங்களும் கொஞ்சம் ஓய் வெடுக்கட்டுமே.நம் அடுத்த தலைமுறை விதை நெல் அதை விருந்தாக்க வேண்டாமே!கள்ளி செடியில் மலராக இப்பதை விட ரோஜா செடியில் முள்ளாக இருந்து விட்டு போகலாமே!சிந்தியுங்கள்!இலக்குகளை உயர்வானதாக தேர்வு செய்யுங்ள்.அல்லாஹ் உதவி சொய்வான்.
“எந்த ஒரு சமுதாயம் தன்னுடைய நிலையை தானே மாற்றி கொள்ளாத வரையில் அல்லாஹ் மாற்றுவதில்லை” அல்குர்ஆன்.
தகவல் மின்னஞ்சல் மூலமாக
பாஷா ஹாஜா மொய்தீன்
அஸ்ஸலாமு அலைக்கும்!
பதிலளிநீக்குஎங்கள் படிப்பு (பத்தாம் வகுப்பு) முடியும் முன்னே கடவு அட்டை எடுத்து துபாய் ஆசை காட்டினார்கள் டேப்ரிகார் சென்ட் டெரிகாட்டன் சட்டை இதில் மயங்கிய நாங்கள் இன்னும் மீலவே இல்லை மீல முடியவும் இல்லை இளைஞர்களே உங்கள் வாழ்வை திட்டமிட்டுக் கொள்ளுங்கள் வழிகள் நிறையவே இருக்கிறது அல்லாஹ் அனைவரையும் மேம்படுத்துவானாக!
the good message
பதிலளிநீக்குPlease note that, MILLATH EDUCATIONAL TRUST is full sponsoring for IAS, IPS, etc,, (which is related to govt. jobs).
பதிலளிநீக்கு