Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 22 டிசம்பர், 2012

த.மு.மு.க வின் சார்பாக ஜமாத்தார்கள் சந்திப்பு .....

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...


இன்று நடைபெறும் ஒற்றுமையை நோக்கி என்ற நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள ஜமாத்தார்களை சந்திப்பு நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.இதில் கீரனுர் , தொழுதூர் மற்றும் நமதூரில் உள்ள ஜமாத்கள் சுன்னத்துவல் ஜமாத் ,தாருஸ்ஸலாம் ,மர்கஸ் ஆகிய பள்ளியில் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட ,நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.




தகவல் மின்னஞ்சல் மூலமாக த.மு.மு.க  LBK

9 கருத்துகள்:

  1. இன்னும் எத்தனைக்கு நாளுக்கு தான்யா இந்த ஒற்றுமை கோசத்த போடடு மக்களை ஏமாத்த போறீங்க.ஒற்றுமை கோஷம் போடுபவர்களை பார்த்து ஒரே ஒரு கேள்வி எங்க பதில் தாருங்கள் பார்ப்போம்.உண்மையாகவே ஒற்றுமையை விரும்பக் கூடியயவர்கள் என்ன செய்ய வேண்டும்.முதலில் அவர்கள் ஒன்று பட்டு விட்டு பிறகு தான் மக்களிடம் வாங்கல் ஒற்றுமையாக செயல் படுவோம் என்று சொல்ல வேண்டும்.


    உதாரணமாக தமுமுக இயக்கத்தை சேர்ந்தவர்கள் sdpi கட்சியின் தலைமையின் கீழ் போய் ஒன்று சேர்ந்து விட்ட பிறகோ அல்லது sdpi இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமுமுக இயக்கத்தவர்களின் தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்த பிறகுதான் இவர்கள் ஒற்றுமையை பற்றி பேசவேண்டும்.


    ஆனால் இவர்களே பதவிக்கு ஆசைப் பட்டு மக்களை தாங்கள் இயக்கத்தில் சரிபாதியாக பிரித்துவைத்து கொண்டு வாருங்கள் மக்களே ஒற்றுமையாக செயல் படுவோம் என்னும் போலி கோஷத்தை போட்டுக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.


    நான் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்ல.ஆனால் மக்களிடத்தில் தங்கள் இயக்கம் என்றுமே செல்வாக்குடன் இருக்க வேண்டும் என்று போலியாக ஒற்றுமைக் கோஷம் போடுபவர்களை எதிர்க்கும் ஒரு லப்பைக்குடிகாடு வாசி.


    மக்களே சிதிப்பீர் செயல்படுவீர்,

    உங்கள் சகோதரன்

    முஹம்மத்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரர் முஹம்மத்,
      அதாவது உங்கள் குடும்பமும் பக்கத்து வீட்டு குடும்பமும் ஓற்றுமையாக இருங்கள் என்று சொன்னால்.....
      நீங்கள் அவர்கள் வீட்டுக்கு போய் விட வேண்டும் அல்லது அவர்கள் உங்கள் வீட்டுக்கு வந்து விட வேண்டும். இல்லையா?
      வேற்றுமையில் ஒற்றுமை என்பது பற்றி தெரியுமா?
      ரசூலுல்லாஹ்வுக்கும் குறைஷியருக்கும் இடையே ஏற்பட்ட ஹூதைபிய்யா ஒப்பந்தம் கூட ஒற்றுமையை நோக்கியதுதானே!

      நீக்கு
    2. சகோதரா பெயரில்லா,

      //அதாவது உங்கள் குடும்பமும் பக்கத்து வீட்டு குடும்பமும் ஓற்றுமையாக இருங்கள் என்று சொன்னால்.....
      நீங்கள் அவர்கள் வீட்டுக்கு போய் விட வேண்டும் அல்லது அவர்கள் உங்கள் வீட்டுக்கு வந்து விட வேண்டும். இல்லையா?//

      பயங்கரமான விளக்கம் சகோதரா!! முடியல.என்னுடைய கேள்வியே நீங்க சரியா புரிந்து கொள்ள வில்லை.நீங்க வந்து என்னிடம் என் அண்டை வீட்டாரோடு ஒற்றுமையா இருங்க என்று சொல்வதற்கு முதலில் நீங்க உங்க அண்டை வீட்டாரோடு ஒற்றுமாய வாழுங்க அப்புறம் வந்து எங்களுக்கு புத்தி மதி சொல்லுங்க என்று தான் நான் கேட்டேன சகோதரா.

      உங்கள் பதிலை பார்த்தல் நாங்க எப்படி வேணும்னாலும் இருப்போம் ஆனா நாங்க சொல்றத நீங்க கேட்கனும் என்று சொல்வது போல் உள்ளது. தான் ஒழுக்கம் இல்லாமல் மக்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கிறேன் என்று சொல்வது அல்லாஹ்வால் வெறுக்கத்தக்க செயல் ஆகும் சகோதரா. மக்கலுக்கு

      உங்கள் சகோதரன்

      முஹம்மத்


      நீக்கு
    3. //வேற்றுமையில் ஒற்றுமை என்பது பற்றி தெரியுமா?
      ரசூலுல்லாஹ்வுக்கும் குறைஷியருக்கும் இடையே ஏற்பட்ட ஹூதைபிய்யா ஒப்பந்தம் கூட ஒற்றுமையை நோக்கியதுதானே!//

      ஹுதைபிய்யா உடன் படிக்கை ஒற்றுமைக்காக உருவாக்கப் பட்டாலும் கொஞ்ச நாட்களிலேயே அந்த உடன் படிக்கை முறிக்கப் பட்டு மக்காஹ் நகரம் முஸ்லிம்களால் முற்றுகை இடப் பட்டது ஏன் என்று தெரியுமா சகோதரா??காரணம் நீங்கள் கூறிய ஒற்றுமைக்கு குறைஷிகள் மாறு செய்ததால் அந்த உடன்படிக்கை நபி(ஸல்) அவர்களால் முறிக்கப் பட்டது.


      அதனால் இஸ்லாமியர்களிடத்தில் ஏற்படக் கூடிய ஒற்றுமை எனபது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த அடிப்படையில் அமைந்தால் தான் அந்த நாம் ஒற்றுமையை பின்பற்ற வேண்டும் இல்லை என்றால் ஒற்றுமையாவது மண்ணாங்கட்டியாவது என்று தூக்கி போட்டு விட வேண்டும் என்பதர்ற்கு சான்றாக நீங்கள் கூறிய ஹுதைபிய்ய உடன்படிக்கையை கூட எடுத்து கொள்ளலாம்.

      உங்கள் சகோதரன்

      முஹம்மத்

      நீக்கு
    4. சிறு குறிப்பு : நீங்கள் கூறிய படி நபி(ஸல்) அவர்கள் ஒற்றுமைதான் முக்கியம் என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்திருந்தால் மக்காவில் இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் வேளையில் குறைஷியர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் உங்கள் இறைவனை வணங்கி கொள்ளுங்கள் ஆனால் எங்கள் கடவுல்களை குறை சொல்லாதீர்கள் ஒற்றுமையாக இருப்போம் என்று ஒற்றுமை கோட்பாட்டிற்கு வித்திட்ட போது நபி(ஸல்) அவர்கள் antha ஒற்றுமை கோரிக்கையை நிராகரித்தார்கள்.


      அல்லாஹ்வும் அந்த ஒற்றுமை கோஷத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக குரானிலே சூரா காபிரூன் 106 வது அத்தியாயத்தை அருளினான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

      உங்கள் சகோதரன்

      முஹம்மத்

      நீக்கு
    5. அப்படியென்றால் யாரிமும் உடன்படிக்கை செய்யகூடாது என்கிறீர்களா? நல்ல விசயத்திற்காக உடன்படிக்கை செய்வது அல்லாஹ் விரும்பிய ஒன்று உங்களுக்கு சில இயக்கங்கள் பிடிக்க வில்லை என்றால் அவர்கள் செய்வது அனைத்தும் தவறாகிவிடாது!

      நீக்கு
    6. சகோதரர் நான் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்று சேர்ந்தால் என்ன என்று கேட்டால் நீங்க உடன்படிக்கை போட்டால் போதும் ஒற்றுமைலாம் வேண்டாம் என்று சொல்றீங்க. நபி(ஸல்) அவர்கள் உடன்படிக்கை போட்டது முஸ்லிம் அலாதவர்களுடன் முஸ்லிம்களுடன் அல்ல. நீங்க உடன்படிக்கை போடுவது யாருடன் மாற்று மததவர்களுடனா????முஸ்லிம்களுடன் ஒற்றுமை யாகத்தான் நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்.உங்க பிரிவினைக்கு நபி(ஸல்) அவர்களை காரணம் சொல்லாதீங்க.


      இதற்க்கு மேல் இந்த பதிவுக்கு நான் கமெண்ட் போடா விரும்பவில்லை.இதுதான் கடைசி கமெண்ட்.அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக. ஜஜாகல்லாஹ் ஹைரன்

      உங்கள் சகோதரன்

      முஹம்மத்


      நீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்
    அருமையான பதில்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல விசயத்திற்காக உடன்படிக்கை செய்வது அல்லாஹ் விரும்பிய ஒன்று. உங்களுக்கு சில இயக்கங்கள் பிடிக்க வில்லை என்றால் அவர்கள் செய்வது அனைத்தும் தவறாகிவிடாது! அனைத்து இயக்கங்களிலும் தவறு உள்ளது. நல்லதை ஏற்ப்போம் தீயதை புறக்கணிப்போம்.

    பதிலளிநீக்கு