Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 26 டிசம்பர், 2012

25-12-12 ல் மாநாடு கூட்டமான சொற்பொழிவு கூட்டம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

25-12-2012 அன்று நமது தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல் வளாகத்தில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி செய்திட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சி சிறியதாக இருக்கையில், பல விமரிசங்களுக்கிடையிலும், பல தடைகளுக்கிடையிலும் நடத்த ஏற்பாடு செய்துள்ளபடியால், அல்லாஹ்வின் அருளால் நாடியவர்களாக நமது ஜமாஅத்தார்கள் நெஞ்சுருகி கையேந்தி கேட்ட துஆக்களின் பலனாக, நிகழ்ச்சியை, பெரிய மாநாடு கூட்டம் பொல ஆக்கித்தந்த அல்லாஹுவுக்கே எல்லாப் புகழும்.
இந்நிகழ்ச்சி பெண்களுக்கென்று சிறப்பு பயான்என்கிறபடியால், நமதூரில் வாழும், மார்க்கப்பற்று கொண்ட அனைத்து விசுவாசிப் பெண்மணிகளும் பள்ளிவாசல் வந்து பயான்கேட்டு பயனடைந்தார்கள்.
                காலை 10.00 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 5.15 மணியுடன் நிறைவுபெற்றது. சகோதரி ஆலிமா வாஜிதா சித்தீக்கிய்யா, (ஆசிரியை, தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல்) அவர்கள் மரணத்தின் போது மனிதனின் நிலைஎன்கிற தலைப்பில் சுமார் ஒரு மணிநேரம் தலைப்பை விட்டு பிரலாமல், மக்கள் மனதை தொடும் வண்ணம் பேருரையாற்றி, கேட்கிறவர்களை பயனடைய வைத்தார்கள். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

     அதன் பின் சகோதரி ஆலிமா ஷான் ராணி (இஸ்லாமிய பிரச்சாரகர், ஏகத்துவ பிரச்சார மையம்) அவர்கள் முதல் கட்டமாக பேருரையாற்றினார். அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு மரணத்திற்குப்பின் மனிதனின் நிலை’. இவ்வுரை ளுஹர் தொழுகைவரை நடந்தது.
                வந்திருந்தோர் அனவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது. ளுஹர் தொழுகை, மதிய உணவு இவைகள் இரண்டும் முடிந்த பின்னர், கூட்டம் கலையாமல் மார்க்க ஆர்வத்தில் திழைத்த பெண்களின் முன், சகோதரி ஆலிமா ஷான் ராணி மீண்டும் தோன்றி தனது இரண்டாம் கட்ட நிகழ்ச்சியாக ஜனாஸாவை குளிபாட்டி கஃபன் இடுவதுபற்றி செய்முறை வகுப்பு நடந்திக் காட்டினார். பார்வையாளராக வந்திருந்த சகோதரி ஒருவரை மேஜைமீது கிடத்தி உண்மை காட்சி போல அமைத்து, மக்களுக்கு விளங்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் ஆலிமா செய்தது முற்போக்கு சிந்தனையல்லவா. நிகழ்ச்சியின் இடையிடையே வரும் கேள்விகளுக்கு பதில் விளக்கம் கொடுத்து விசுவாசிகளுக்கு பயனுள்ளதாகவும், நல்ல பயிற்சியாகவும் ஆலிமா ஆக்கித்தந்த்து அல்லாஹ்வின் கிருபையே. அல்லாஹ் அக்பர்.
                எதிர்பார்ப்புக்கு மிஞ்சி, சொற்பொழிவுக்கு வருகைநபர் அதிகமிருந்ததால், நிர்வாகம் சில வசதிகளை வந்திருந்தோர் சிலருக்கு தாமதமாக செய்துள்ளது. நிர்வாகத்தின் கவனக்குறைவுக்காக மக்களிடத்தில் வெளிபடுத்தி, மனப்பொருத்தம் தேடுகின்றோம். அல்லாஹ்வின் அருள் நாடும்
மின்னஞ்சல் மூலமாக 
தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம்.

6 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
    இன்ஷா அல்லாஹ் உங்களுடைய என்னத்தை அல்லாஹ் அறிவான்.இந்நிகழ்ச்சி எந்த நோக்கத்திற்காக ஏற்பாடு செய்தீர்களே இன்ஷா அல்லாஹ் அதற்குட்டான கூலி இறைவன் இடத்தில் உண்டு.

    பதிலளிநீக்கு
  2. kilaku matrum merku jamath janasa sattangal pattri article elthavum

    பதிலளிநீக்கு
  3. மாஷா அல்லாஹ்!

    இதுபோன்ற நிகழ்வுகள் நமதூரில் நடைபெற உதவி புரிந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

    இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தாருஸ் ஸலாம் சகோதர சகோதரிகளுக்கு அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அருள் புரிவானாக! ஆமீன்!!

    பதிலளிநீக்கு