பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெறுவதற்கு 2–வது கட்டமாக சிறப்பு முகாம் வருகிற 8–ந் தேதி நடக்கிறது.
இது தொடர்பாக பெரம்பலூர்
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
2–வது கட்ட முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய
குடும்ப அட்டை பெறுவதற்கான 2–வது கட்ட சிறப்பு முகாம் வருகிற
8–ந் தேதி(சனிக்கிழமை) மாவட்ட கலெக்டர் தரேஸ் அகமது தலைமையில்
கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் 3–ந்தேதி நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 2 ஆயிரத்து, 567 பேர் கலந்து கொண்டு குடும்ப
அட்டை சம்மந்தமான மனுக்கள் அளித்தனர்ஃஅவர்களில் 1,196 நபர்களுக்கு உடனடி தீர்வு அன்றைய தினமே காணப்பட்டது. முதல்
கட்ட முகாமில் மனு செய்தவர்கள் 2–வது கட்ட சிறப்பு முகாமிற்கு
வரத்தேவையில்லை.
டிசம்பர் இறுதிக்குள்
தகுதியற்ற நபர்களுக்கு மனுக்கள்
தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்த விபரம் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக
அலுலவர் அலுவலங்களில் தகவல் பலகையில் நாளை(வெள்ளிக்கிழமை) ஒட்டப்படும். இந்த
பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களுக்கு டிசம்பர்–2012 இறுதிக்குள் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்.
இந்த முகாமில் பொதுமக்கள் புதிய
குடும்ப அட்டை பெறுதல், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், பெயர் திருத்தம் செய்தல், குடும்ப அட்டை நகல் பெறுவதற்கான விண்ணப்பங்களை கலெக்டர்
அலுவலகத்தில் இலவசமாக பெற்று விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தினதந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக