புது தில்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு
வன்புணர்வு செய்யப்பட்டு பேருந்திலிருந்து பெண் தூக்கியெறியப்பட்ட சம்பவத்திற்கு
பிறகு பெண்களின் பாதுகாப்பு குறித்து சூடான விவாதங்கள் நடைபெறும் சூழலில்
தலைநகரில் ஒரு பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி கொடுக்கப்படும்
செய்தி வெளி வந்துள்ளது. தலைநகரில் அமைந்துள்ள ஜாமியா மில்லியா
இஸ்லாமியா பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை பெண்
காவலர்களே
முன்னின்று கற்றுதருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்காப்பு பயிற்சியில் சேர்வது கட்டாயமில்லை என்றாலும் நிறைய பெண்கள் ஆர்வத்துடன் சேர்வதாக பள்ளி முதல்வர் தெரிவிக்கிறார். பயிற்சி பெறும் மாணவிகளில் ஒருவரான 16 வயதுடைய மரியா கான் தனக்கு இப்பயிற்சி மிகுந்த தன்னம்பிக்கை அளிப்பதாகவும் அசம்பாவித சம்பவங்களை எதிர்கொள்ளும் மனவலிமையை தமக்கு இது தருவதாகவும் கூறினார்.
பெண்கள் காவல் பிரிவில் இருந்து இப்பள்ளிக்கு
விசேடமாக சிறப்பு பயிற்சி அளிக்கும் காவலர்கள் இப்பயிற்சியில் எவ்வித ஆயுத
பயிற்சியும் அளிப்பதில்லை என்றும் பெண்கள் பயன்படுத்தும் நோட்டு புத்தகங்கள், பேனாக்கள், பள்ளி பைகள், ஷால்
போன்றவற்றை கொண்டே எவ்வாறு தற்காத்து கொள்வது என்றே சொல்லி தருவதாகவும் கூறினார்.
நன்றி:ஆசியநண்பன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக