பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
வினோதங்களை விதைக்கும் இயக்கமும், அதன்தலைமையும்.
லப்பைக்குடிகாடு நகரமாகிய
நமதூரில் 2012 டிசம்பர் 1ல் ஒரு திருமணமும், மறுநாள் 2ம் தேதி இன்னொரு திருமணமும்
நடந்திருக்கிறது. இரண்டும் நபிவழித் திருமணங்கள்
என விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.
முதலில் நடந்த 1ம் தேதி திருமணம் நபிவழியில்
நடந்த திருமணம் தான் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சான்றும், சாட்சியும் அளித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
லப்பைக்குடிகாடு கிளை அலுவலகத்தில் இத்திருமணம் நடந்துள்ளது, அதே அலுவகத்தில் திருமணம் பதிவு
செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
லப்பைக்குடிகாடு
கிளை சான்றளித்ததாகவும், சாட்சியாகயிருந்ததாகவும் கருதுவது சரியானதாகும்.
நடந்த திருமணம் ஓர் எளிய
முறை என்று பொது மக்களுடன் சேர்ந்து நானும் கூறுகிறேன். இத்திருமணத்தைப் பற்றிய அபிப்பிராயம்
பொதுமக்களிடம் விசாரிக்கவும் செய்தேன். அதிகமான மக்கள் இக்காலத்தில் இப்படியும் செய்ய முடியுமா? என ஆச்சரியம் காட்டுகின்றார்கள். இன்னும், தாங்களும் தங்களது வீட்டு
திருமணத்தை இது போல் செய்ய முடியுமா? என்று யோசிக்கும் நேரத்தில், குடும்பத்தார்கள் அனுமதியளித்து அனுசரிப்பார்களா? என்று முனு முனுக்கின்றார்கள். ஆக, மக்களின் பாராட்டுதலை பெற்ற
இது போன்ற திருமணம் லப்பைக்குடிகாடு நகருக்கு புதிதல்ல. பேரீதம் பழ கல்யாணம் என்று
அழைக்கப்படும் இவ்வகை கல்யாணம், இந் நூற்றண்டின் துவக்கத்தில் நமதூரில் ஒரு குடும்ப சகோதரர்களும், அவர்களின் சகோதரிகளும் வரிசையாக
செய்திருக்கின்றார்கள்.
அன்றைய அளவில் இச்செயல், ஒரு புரட்சியாக கருதப்பட்டாலும், ஓடிப் போய் வாழ்கிறவர்களைப்
போல பார்க்கப்பட்டது. அப்படி கூறுவதை பாவமாக கருதுகின்றேன்.
இருப்பினும், நபி வழி திருமணம் என்றால்
என்ன என்று இந்நேரத்தில் விசுவாசிகளாகிய நாம் அறிந்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், திருமணங்கள் உறவினர்கள் நண்பர்கள்
கூடி நடத்தியதாகவும், ஏதாவது பொது இடத்தில் கூடி
நடந்ததாகவும் தகவல்கள் இல்லை. திருமண பதிவு புத்தகமும் இல்லை. முஸ்லீமாக வாழ்ந்த ஆடவர்கள், ஒருத்தியை தனது துணைவியாக்கிட
அவளுக்குரிய மணக் கொடையை அவளிடம் அளித்து ,அவளை வாழ்க்கை துணைவியாக ஆக்கிக் கொண்டதாக அல்லாஹ்விடத்தில்
வாக்குறுதி அளிக்கையில் மணமகளின் பொறுப்புதாரரோடு இருவர் சாட்சியாக இருப்பது போதுமானது. இதை வாழ்க்கை ஒப்பந்தம் என்று
நபி (ஸல்) அவர்கள் அழைத்து மன மகிழ்ந்தார்கள். இந்த நடைமுறையை மட்டுமே நபியவர்கள்
அங்கீகரித்தார்கள்.
இவ்வண்ணமே அங்கீகரித்த மேலான
இத்திருமணத்தை அழகுர செய்ய வழியமைத்தார்கள். மணமக்களை வாழ்த்தும் முறையை இறைபிராத்தனையாக்கிட போதித்தார்கள்
.வாழ்க, அதைப் போல் வாழ்க, அவர்களைப் போல் வாழ்க என
வாழ்த்தச் சொல்லாமல், மாற்றமாக மணமக்களை அவர்களில்
உள்ளங்களிலும் புற சூழல்களிலும் விசாலம் பெறுவதுடன் அவர்கள் நல்லவைகளில் கூடி வாழ அல்லாஹ்விடம்
பிராத்திக்கு மாறு கற்றுத்தந்தார்கள். இன்னும், வசதிக்கு தக்கபடி ,தான் அறிந்தவர்களுக்கு விருந்தளிக்க சொன்னார்கள். அதுபோல், விருந்துக்கு விளக்கம் தருகையில்
விருந்துஎன்றால், அதில், ஏழைகள் பங்கு பெற்றிருக்க
வேண்டும் என்றும் அழைக்கப்படும் விருந்தில் கலந்து கொள்ளுமாறும் உபதேசித்தார்கள்.
இதிலிருந்து அறிவது, வாழ்க்கை ஒப்பந்தம் எனும்
திருமணம் நடப்பதற்கு இன்ன இடம் என்ற தேர்வு கட்டாய மில்லை என்பதே. இந்நிகழ்வை தத்தமது விருப்பப்படி
இடமமைத்து நடத்திக் கொள்ளலாம்.
நிகழ்வுக்கு
அன்பர்கள் அதிகமானவர்கள் அழைக்கப்படுவது அவசியமாக இல்லை. நடந்து முடிந்த திருமணத்தை
மணமகன் தனது செலவில் தன் தகுதிக் கேற்ப ஒருவிருந்தளித்து அன்பர்களிடம் தனது திருமணத்தை
அறிவிக்க வேண்டும். திருமணத்தை அறியும் அன்பர்கள், மணமக்களை வாழ்த்துவதற்கு
பதிலாக அவர்களது பாக்கியத்திற்கு அல்லாஹ்விடம் பிராத்திக்கவேண்டும். இந்த அம்சங்களை உள்ளடக்கிய
திருமணங்கள் இருக்குமாயின், அது நபி வழி திருமணமாகும்.
இன்னும், தமிழகத்தில், பரவலாக சுன்னத்முறை (நபிவழி) திருமணம் என்று பற்பல சடங்குகளோடு
திருமணங்கள் நடக்கின்றன. நடப்பவைகளை அறிவு கண்ணோட்டத்துடன்
காணும் போழுது மணமக்களை இழிவுப் படுத்துவத்தாக அந்நாளை கருதிக்கொள்ளலாம்.
உதாரணமாக ஈமான் கொண்டு முஸ்லீமாக
வாழும் இளைஞர்களை, திருமண நேரத்தில் கலிமாவை
சொல்லிக் கொடுத்து புதிதாக முஸ்லீமாக்குவது அவர்களை கேவலப்படுத்தப்படுகிறது. பெண் வீட்டாரிடம் வரதட்சனை கைக்கூலிகளை
ஆயிரம், லட்சம், கோடி என்று வாங்கிக் கொண்டு சபையறிந்து
பொய் சத்தியம் பெற்று மணமக்களை பாவியாக்குவது. அவள் உண்ணுவதற்கும், உடுத்துவதற்கும் அவளையே கொண்டு வரசெய்து அவளிடமிருந்து இன்பத்தையும், உழைப்பையும் அபகரிக்கும் சமூக விரோதியை
சபையில் கவுரவப்படுத்துவது. என்ன பாவம் செய்தார்கள் இம்மணமக்கள், ஏன் இப்படி வாழ்த்து என்ற பெயரால்
அரபி மொழியில் ஏச வேண்டும்.
இன்னும் எத்தனையோ அரங்கேரும்
அனாச்சாரங்களிருந்து விடுபட்டு,
எது
உண்மை என கண்டுணர்ந்து இது தான் நபிவழி திருமணம் என்று அதை முன் மாதிரியாக வைத்து ஒரு
சகோதரர் தனது திருமணத்தை 01-டிச-2012ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லப்பைக்குடிகாடு கிளை அலுவலகத்தில்
நடத்தி முடித்திருக்கின்றார்.
அவரை
மன முவந்துபாராட்டுகிறேன். நபி (ஸல்) அவர்கள் உபதேசித்த துஆவை சகோதரர்
ஹக்கில் செய்து மன நிறைவடைகின்றேன். எளிமையான திருமணம் என்று சொல்லிக் கொள்ளும் இத் தருணத்தில் நபி(ஸல்)
அவர்கள்
விரும்பிய விருந்தளிப்பை நம் சகோதரர் அழகிய முறையில் நடத்திக் காட்ட மறந்து விட்டார். மேலும், கஞ்சத்தனமாக செய்வது தான் நபி வழி
திருமணம் என்று எதிர் மறை கருத்தை மக்கள் உள்ள்ங்களில் பதிவு செய்து விட்டார்., செலவினங்களிலும், காட்சி புகழ்ச்சிகளிலும் நபிவழி
ஆர்வத்தை காட்டும் சகோதரர் அவரது எல்லா விதமான வாழ்வு நிலையிலும் நபி வழி கண்டு நம்மக்களுக்கு
உண்மை உதாரணமாக திகழ வேண்டும் என்று அவரை இக்கடிதத்தின் மூலமாக அழைத்து எனது வயது மூப்பை
பயன்படுத்தி உபதேசிக்கின்றேன்.
அல்லாஹ்
அவருக்கு கருனைபுரிவானாக. ஆமீன்.
அடுத்து, டிசம்பர் 2ல் நடந்துள்ள நபி வழி திருமணத்தை பார்ப்போம். இது இரண்டு ஜோடிக்கு நடந்த திருமணங்களாகும். இவர்களும் அதே இயக்கத்தை சார்ந்தவர்களாக
இருப்பதால், அதன் தலைமையின் வழி காட்டல்
படி முந்தைய நாளில் நடந்த திருமணத்தை போல தாங்களும் நடத்த விரும்பி ஏற்பாடு செய்தார்கள். முந்தைய திருமணத்தில் விடுபட்ட
விருந்தளிப்பை திருமணத்திற்குப்பின் அளித்திட ஆசை கொண்டவர்களாக இருந்தார்கள்.
இரண்டு ஜோடி திருமணங்கள்
என்பதாலும், கூட்டுக் குடும்ப நேசர் என்பதாலும், உறவிணர்கள் மிகுத மிருப்பதாலும்
வசதியை கருதி விருந்தளிப்பை ஒரு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். இந்த ஏற்பாட்டை திருமண அழைப்பிதழில்
அச்சிட்டு அனவருக்கும் வினியோகித் திருக்கின்றார்கள்.
அழைப்பிதழில் பிரசுரிக்கப் பட்டவாசகம் : 02-12-2012. ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு லப்பைக்குடிகாடு TNTJ மர்க்கஸில் நிக்காஹ்& M.G.M. காம்ப்ளக்ஸில் விருந்து உபசரிப்பு
நடைமெறும்.
விருந்து என்ற ஒன்றை திருமணத்தில்
உள்ளடக்கியது குற்றமாக கருதி இவர்களது இயக்கம், இவர்களது திருமணங்கள் நபி வழிக்கு மாற்றமாக இருப்பதாக கருதி, இவர்களை மர்க்கஸில் திருமணம் செய்ய
அனுமதி மறுத்துள்ளார்கள். இவ்வியக்கத்தின் பைலா என்பதால், பொது மக்களின் கருத்து எடுபடாது. இருப்பினும், இது நபி வழி திருமண மில்லை என்கின்ற
போது, பொது மக்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். நபிவழி திருமணம் என்ன என்பதை இயக்க
வாதிகளிடம் கேட்டறிந்திட கடமைப்பட்டுள்ளோம்..
மர்க்கஸ் மறுக்கப் பட்ட நிலையில், மேற் கொண்டு செய்வதறியாது திருமண
பதிவு பற்றிய கவலையுடன் இருந்திருக்கின்றார்கள். உள்ளூரிலுள்ள 2 ஜும்ஆ பள்ளிகள், தாருஸ்ஸலாம் தவ்ஹீத பள்ளி இவைகளில் ஏதாவது ஒன்றை அனுகி திருமணத்தை
பதிவு செய்துக் கொள்ளலாம் எனயோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்போது ஆபத்துக்கு உதவுவது போல், இயக்க நண்பர்களின் சிபாரிசு படி
திருமண பதிவுபுத்தகம் கொடுத்து விடுவதாகவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருமணத்தை புறக்கணிப்பதாகவும் சொல்லி
விட்டிருக்கின்றார்கள்.
இதன் தொடராக, டிசம்பர் 2ல் உடையவர்களின் திட்டமிட்ட படி MGM மண்டபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் பதிவு புத்தகத்தில் திருமணங்கள் பதிவு செய்யப் பட்டது. தாஃயி எனும் பிரச்சாரகர், மற்றும் இயக்க பிரமுகர்கள் யாரும்
கலந்து கொள்ள வில்லை. இத்திருமணத்தை இவ்வியக்கம்
புறக்கணித்தற்கு சாட்சியாக இச்செயல் அமைந்திருந்தது. மண மக்களுக்க்காக துஆ செய்ய வந்தவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
விருந்தில் கலந்து கொண்டு துஆ செய்து சிறப்பித்தார்கள். பெரிய குடும்பம் என்பதால் 4 மணிவரை விருந்தோம்பல் நடந்தேறியது. மேலான இத்தருணத்தில், தாஃயிவராததை பிழை என்று தான் பதிவு
செய்யவிரும்புகின்றேன். மக்கள் குழுமும் இடத்தில்
மார்க்கத்தைப் பற்றி பேசி, மக்களிடையே மார்க்க விஷயங்களை
பகிர்ந்துக் கொள்ளுங்கள்-என்பது நபி மொழி. நபி வழியை கட்டாயமாக ஊக்கு
விக்க கடமைபட்டுள்ள இவ்வியக்கம் பைலா ஆல் சேதப்பட்டுள்ளது.
எனது பார்வையில் இந்த இரண்டு
நாட்களின் திருமணங்களும் நபிவழி திருமணங்களாக கருதப்பட்டாலும், முதலாம் திருமணத்தில் விருந்து
காணவில்லை. நபிவழியை விடுபட்டுள்ளது. இது மணமகனின் தீன் தாக்கத்தின்
வெளிபாடு. மறுநாள் திருமணத்தில், கிடைத்த களத்தில் இஸ்லாமை சொல்ல
இயலாத பைலா நேசிக்கும் இயக்கம் தெரிகிறது. இவர்களது பிடிவாதம் மக்களின் மேலிருக்கும் அக்கரையை காட்டுகிறது.
மெற்கூரிய திருமணங்களைப்ற்றி
மார்க்க அறிஞர்களாகிய தங்களின் பலமான கருத்துகளை பதிவு செய்ய கேட்டுக் கொள்கின்றேன். அறிவியுங்கள். நபிவழியை ஆராயுங்கள்.
Asalamu alaikum
பதிலளிநீக்குThe first marrage is not in nabbi vali
Because nabi(sal) said to give VALEEMA as your capacity. The brother have a capacity but he refuse to give VALEEMA .So he refuse nabi by that he refuse allah order also.Without Valeema
marrage is a BITHATH .
The second marriage refused by TNTJ means thats very clear they follow only their bilaw not islam.
So i request all TNTJ Followers to wake up
are you going to follow your jamath or nabi (sal) .
Asalamu alaikum
பதிலளிநீக்குபித் அத் பற்றி எழுதுமுன், பித் அத் என்றால் என்ன என்று பார்ப்போம். பித் அத் என்றால் புதிய நடைமுறை, ( இதுவரை இல்லாதது). “ பித் அத் எல்லாம் வழிகேடு , வழிகேடு எல்லாம் நரகில் கொண்டு போய் சேர்க்கும்” என்று நபி ( ஸல் ) அவர்கள் நவின்றார்கள். எது குர் ஆனிலோ , நபி (ஸல்) அவர்களோ நமக்கு காட்டித் தராத புதிய ஒன்று அமல்படுத்தப்படுமானால் , அது 100 % பித் அத்தான், வழிகேடுதான். ஹதீஸ்படி நரகில்தான் கொண்டு போய் சேர்க்கும். பித் அத். தனி மனித வழிபாட்டின் உச்சகட்டத்தை எட்டியுள்ளனர். பித் அத்தை மார்க்கம் என்று கொஞ்சமும் கூசாமல் சொல்லி ஏமாற்றுகின்றனர். “குர் ஆனில் உள்ளதா ? ஹதீஸில் உள்ளதா ? என்று கேளுங்கள். மார்க்கம் விளக்க ஆதாரம் இல்லையெனில் குப்பையில் தூக்கிப் போடுங்கள் ,அபூபக்கர் ( ரலி ) அவர்களுடைய கருத்தும் , பெரியசாமியுடைய கருத்தும் ஒன்றுதான் நமக்கு. அல்லாஹ்வுடைய ரசூலா , ஷகாபாக்களா என்று வரும் போது ரசூல் (ஸல்.) சொன்னதைத்தானே எடுக்க வேண்டும். இமாம்களா , ரசூல்(ஸல்) அவர்களா என்று வரும்போது , எந்த அல்லாமா சொன்னாலும் இமாம் சொன்னாலும் தூக்கி எறி , உன் ரசூல் (ஸல்) என்ன சொன்னார்களோ அதைத்தானே எடுக்க வேண்டும். என்று அன்று உங்களை இமாம்களுக்கு , ஷகாபாக்களுக்கு எதிராக திருப்பியவர்தாம் இன்று நபி ( ஸல் ) அவர்கள் சொன்னதர்க்கு மாற்றமாக , ஷகாபாக்களுக்கு மாற்றமாக .WAKE UP BROTHERS THEY LEAD YOU IN WRONG WAY
ASALAMUALAIKUM
பதிலளிநீக்குTHEY COULD NOT DIFFERTCIATE BETWEEN THE WASTE AND VALEEMA
REALLY VERY POOR GUYS
IN TAMIL ONE PROVERB
ARAINDAVANUIKU IRRUNDATHEILLAM PAYEE
WE SHOULD TAKE PITY ON THESE GUYS
PRAY FOR THEM
Asalamu alaikum
பதிலளிநீக்குMr.gmb-lbk.by this interest of writting this articles u forgot lot of hadees one sample that meaning as a cloth become older your your eeman also older so renew that , shahaba asked how to renew nabi (sal) replayed say LAYELAHA ILLAILLAH MOHD . RASUILLAH
WHAT YOU MEAN THE MOST IMPORTANT KALEEMA WE CAN SAY ANY WHERE ANY TIME NO HARM ALLAH VERY HAPPY WITH KALEEEMA. IT WILL HELP IN AAHEERATH
aasalam alaikum
பதிலளிநீக்குSIMPLE MARRAGE IS MUST
BUT VALEEMA IS SUNNATH
ATLEAST FOR FEW PEOPLE HE CAN ARRANGE VALEEMA TO
FUILL FIL SUNNATH
நம் அனைவர் மீதும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக,
பதிலளிநீக்குஇந்தக் கட்டுரையை எழுதிய சகோதரர் GMB - LBK அவர்களிடம் ஒரு சில கேள்வியை மட்டும் கேட்க்க ஆசைபடுகிறேன்.இரண்டாவது திருமணம் பற்றி நீங்கள் வைத்த கருத்து சரியே என்றாலும்.
அதாவது நபி வழிக்கு உட்பட்டு நடக்கும் திருமணத்தில் நடை பெரும் வழிமா விருந்தில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ளாமல்(இங்கு கவனிக்க தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மட்டும் தான் கலந்து கொள்ள மாட்டார்கள் தவ்ஹீத் ஜமாஅத் சேர்ந்த சகோதர சகோதரிகளை திருமணதிற்கு செல்ல வேண்டாம் என்று தடுப்பதில்லை) தவிர்தது பற்றிய உங்கள் கருத்து என்னை யோசிக்க வைக்கும் வகையில் இருந்தாலும் கூட,,
ஆனால் நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத் மேல் வைக்கும் மற்ற குற்ற சாட்டுக்கள் அதாவது விருந்து வைத்தால் திருமணம் செய்து வைக்க மாட்டோம்,திருமண பதிவேடு போன்ற அனைத்தும் உங்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்புணர்ச்சியை காட்டுவதாகவே எனக்கு தெரிகிறது.தயவு செய்து நாடு நிலை என்ற பெயரை இந்த தளம் பயன்படுத்துவதை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள்.இந்த தளம் எந்த இயக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல் படும் நிருபர்கள் எந்த இயக்கத்தை அடிப்படையாக வைத்து செயல் படுகிறார்கள் என்று எனக்கு தெரியும்.
continue ,,,
சரி இப்ப விசயத்துக்கு வருவோம் முதல் திருமணம் பற்றிய உங்கள் நிலைப்பாடு பற்றி எனக்கு கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.எனக்கு உள்ள சந்தேகம் தீர்ந்து விடும்.
பதிலளிநீக்குஉங்கள் பார்வையில் வழிமா என்றால் என்ன??
வழிமா என்றால் அதில் விருந்து மட்டும் தான் அடங்குமா??
திருமணம் செய்து கொள்ளும் நபர் கட்டாயாம் வழிமா கொடுக்க வேண்டும் என்று நான் கேள்விப் பட்டு இருக்கிறேன்.ஆனால் கட்டாயம் விருந்து வைக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்தி எந்த ஹதீத் கிதாபில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
எளிமையான திருமணத்தில் அல்லாஹ்வின் பரகத் உள்ளது என்ற நபி(ஸல்) அவர்களின் சொல்லிற்கேற்ப தன இல்லற வாழ்க்கையில் அல்லாஹ்வின் பரகத் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் ஒரு சகோதரர் எளிமையான முறையில் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திய வலிமாவையும் நிறைவேற்றி எளிமையான முறையில் திருமணம் செய்து செய்து கொண்டால் அது எப்படி நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை புறக்கணிததாகும்
நான் மேலே குறிப்பிட்டுள்ள என சந்தேகங்களுக்கு நீங்கள் விளக்கம் கொடுப்பீர்கள் என்று எதிர்ப் பார்க்கிறேன்.உங்கள் விளக்கம் எண்ணைய் தெளிவு படுத்தும் விதத்தில் இருந்தால் என்னுடைய நிலை பாடை நான் இன்றே மாற்றி கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ்.
உங்கள் சகோதரன்
முஹம்மத்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
பதிலளிநீக்குநபி வழி நபி வழி என்று மக்களை முட்டாலாக்கும் ததஜா
ASALAMU ALAIKUM
பதிலளிநீக்குI HEARED IN ONE HADEETH NABI (SAL) SAID TO ONE OF HIS SHAHABA WHEN HE COME TO KNOW HE JUST MARRIED " ATLEAST SLOTER ONE GOT FOR YOUR VALEEMA"
DEAR BROTHERS WE HAVE TO NOTE THE SENTENCE HEAR "ATLEAST"
MOST OF THE SHAGABA IN POOR CONDITION NABI (SAL) WELL KNOW THAT THEN ALSO HE ORDER HIM TO' ATLEAST SLOTER ONE GOT FOR YOUR VALEEMA'
IN ANOTHER HADEETH Depending upon your capacity give valeema .
ALLAH KNOWS BEST
Asalamu alaikum
பதிலளிநீக்குIn islam valeema is the pillar of marriage, Valeema concept is to announce the marriage to all , share the marriage happy with relatives, strengthening relationship between relatives ,
Mr. hikumath mention above hadees really good example that shahabee abu aiyub ansari (ral).
Rasool (sal) said" show the nikmath that given by allah " .
In another hadees " those who belived allah and kiyamath they should hospitality their guest"
TEA AND BISCUTS NOT A FOOD . EVEN WE CAN NOT CONSIDER AS SNACK ALSO.