நமதூருக்கு பாதாள சாக்கடை எழுதும் கடிதம்..!
அன்புள்ள லெப்பைக்குடிக்காடு மக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்..
என்னுடைய பிறப்பு பற்றி உங்களுக்கு தெரியப்படுத்தியே ஆகவேண்டும். காரணம் என்னைப்பற்றி ஒரு விழிப்புணர்வே இல்லாமல் உங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய பிறப்பு தமிழகமே ஆச்சரியத்திற்கு ஆழ்படுத்தியது. ஏனென்றால் மாநகராட்சியே ஈன்றெடுக்க முடியாத என்னை இந்த லெப்பைக்குடிக்காடு ஈன்றெடுத்தது. அன்று ஒருசில நல்ல உள்ளம் கொண்டவர்கள் என்னை அழகாக வழர்தெடுக்க வேண்டும் என்று என்னினார்கள் ஆனால் இன்று இருப்பவர்கள் தங்களின் சுய நலத்திற்காக என்னை ஓரம் கட்டி அனாதையக்கி விட்டார்கள்.
ஒரு சிலர் என்னைப்பற்றியே பேசி அரசியலாகவே சித்தரித்து தங்களின் அதிகாரத்தை மாறி மாறி தக்க வைத்து கொள்கிறார்கள்.
என்னுடைய வரலாற்று நெடுகிலும் எனக்கு இளைக்கப்பட்ட அநீதியை கண்டு என்றாவது பொதுமக்களாகிய நீங்கள் குறல் கொடுத்துள்ளீர்களா? என்னைப்பற்றியே வெட்டிபேச்சு பேசியும் வீயாகியானம் செய்தும் உங்களுடைய காலத்தை கழித்துக்கொண்டுள்ளீர்கள்.
எனக்கு பிறகு பிறந்த என்போன்ரோர்கள் அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களை நம்பிய பொதுமக்களையும் மிகுந்த சுகாதாரத்தோடு வாழ வைத்து கொண்டிருக்கிறார்கள். எனக்கும் அப்படிதான் சுகாதாரத்தோடு உங்களை வாழ வைக்கவேண்டும் என்று ஆசையாக உள்ளது. முதியோர்கள் மற்றும் குழந்தைகள் சுகாதாரமான வாழ்வை நினைக்கும் பொழுது எனக்கு வாழ வேண்டும் என்று ஆசையாக உள்ளது.
ஆனால் இன்று நான் மரணத்தின் விழிம்பில் உள்ளேன். முடிவாக கூறுகிறேன், இனியும் நீங்கள் தாமதித்தால் என்னுடைய மரணம் உங்களை விட்டுவிடாது. நான் இறந்தால் புதிய புதிய நோய்களை உண்டாக்கி தெடர்ந்து உங்களை அச்சுருத்திகொண்டே இருப்பார்கள் என்னுடைய எதிரிகள். (உங்களை அவர்கள் வாழ விட மாட்டார்கள்...)
உங்களுடைய ஜமாத்துக்களே! அரசியல்வாதிகளோ! அல்ல
எனக்கு பாதகத்தை உண்டாக்குவது.
மக்களாகிய உங்களுடைய மௌனம் தான்.!
இப்படிக்கு
பாதாள சாக்கடை,
லெப்பைக்குடிக்காடு.
என்னுடைய வரலாற்று நெடுகிலும் எனக்கு இளைக்கப்பட்ட அநீதியை கண்டு என்றாவது பொதுமக்களாகிய நீங்கள் குறல் கொடுத்துள்ளீர்களா?
பதிலளிநீக்கு