Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 20 டிசம்பர், 2012

மலேகானிலும் நாங்கள் தாம் குண்டுவைத்தோம்: ஹிந்துத்துவா பயங்கரவாதி வாக்குமூலம்!


2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவைத்தது நாங்கள் தாம் என்று சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதி வாக்குமூலம் அளித்துள்ளான். தேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பில் 37 பேர் பலியானார்கள்.
300 பேருக்கு காயம் ஏற்பட்டது. துவக்கத்தில் இவ்வழக்கை விசாரித்த மஹராஷ்ட்ரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினர்(ஏ.டி.எஸ்) தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் உறுப்பினர்கள் என அநியாயமாக குற்றம் சாட்டி ஒன்பது முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில்
அடைத்தனர். மலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்று சுவாமி அஸிமானந்தா அளித்த வாக்கு மூலம் இவ்வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்த வழக்கில் தொடர்புடைய இதர குற்றவாளிகளான டான்சிங், ராம்ஜி கல்சங்கரா, அஸ்வினி சவுகான், ஆகியோருடன் நானும் சேர்ந்து மலேகானில் குண்டு வைத்ததாக அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுதரி ஒப்புக்கொண்டுள்ளான்.
இதில் டான்சிங், ராஜேந்தர் சவுதரி கைது செய்யப்பட்ட பின்னர் அளித்த தகவலின் அடிப்படையில் மறுதினமே கைது செய்யப்பட்டான். இவ்வழக்கில் இதர குற்றவாளிகளான ராம்ஜி மற்றும் அமித் என்ற அஸ்வினி சவுகான் ஆகியோர் தற்போதும் தலைமறைவாகவே உள்ளனர். இவர்கள் தாம் மலேகான் சென்று குண்டு வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷிக்கும், சந்தீப் டாங்கேவுக்கும் இத்தகவல் தெரிந்துள்ளது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மலேகானை குண்டுவைக்க தேர்வு செய்ததாக ராஜேந்தர் சவுதரி வாக்குமூலம் அளித்துள்ளான்.
வெடிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது? என்பதை குறித்து என்.ஐ.ஏ தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து ராஜேந்தர் சவுதரி மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளியாக சேர்க்கப்படுவான்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக