கோத்ரா:’மெயின் ஓட் ஆப்பிஸ் மாரா, சோக்கரானே சோடோ’! – ஓட்டு போடுகிறோம்! மகனை விடுதலைச் செய்வீர்களா? – என்று நெஞ்சை பிளக்கும் வேதனையுடன் வயதான தம்பதியினர் கேட்டபொழுது அதிர்ச்சி ஏற்பட்டது. நாங்கள்(தேஜஸ்) அரசியல் வாதிகள் இல்லை! என்று கூறியபொழுது ஹாஜி யூசுஃப் அப்துல் ஸதா ஜர்தா, ஒரே அறையை மட்டுமே கொண்ட வீட்டில் முற்றத்தில் நாற்காலியை எடுத்து போட்டார்.
கோத்ராவில் ரயில் தீ பற்றியபொழுது புதிய சைக்கிள் கடையின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட மகன் ஸலீம் ஜர்தா கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிர்ச்சியான சம்பவத்தை ஹாஜி யூசுஃப் விளக்கினார்.
2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ராவில் ரயிலில் தீ பற்றியபொழுது 20 கி.மீ தொலைவில் உள்ள துவா கிராமத்தில் புதிய சைக்கிள் கடையின் திறப்பு விழாவில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் மெக்கானிக்கான ஸலீம் ஜர்தா. முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை துவங்கியபொழுது துவா கிராமத்தில் இவர்களுடைய வீட்டையும், பொருட்களையும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொள்ளையடித்து தீக்கிரையாக்கினர். குடும்பத்துடன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கோத்ராவில் உள்ள மேதாபோட் மஸ்ஜிதில் சென்று அபயம் தேடினர். பின்னர் ஒரே அறையை மட்டும் கொண்ட வீட்டில் வாழ்க்கையை கழித்து வருகின்றார் அப்துல் ஸதா ஜர்தா.
இனப்படுகொலையில் சைக்கிள்கடை தீக்கிரையானதை தொடர்ந்து ட்ரக்குகளில் க்ளினர் வேலைக்கு சேர்ந்தார் ஸலீம் ஜர்தா. 2 ஆண்டுகள் கழித்து போலீஸ் ஸலீம் ஜர்தாவை பிடித்துச் சென்றனர். கோத்ராவில் ரயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டி சிறையில் அடைத்துள்ளனர். குடும்பத்தின் வருமானத்திற்கு அடிப்படையாக திகழ்ந்த ஸலீம் ஜர்தா சிறையில் அடைக்கப்பட்டதால் குடும்பம் பட்டினியால் வாடியது. யூசுஃப் அப்துல் ஸதா கூலி வேலைக்கும், ஸலீமின் மனைவி உஸானா வீட்டு வேலைக்கும் சென்று குடும்பத்தின் செலவுகளை சமாளித்தனர். ஸலீமின் பள்ளிக்கூடம் செல்லும் 4 பிள்ளைகள், தந்தையை காணவேண்டும் என அழும்பொழுது மாதம் ஒருமுறை பரோடா மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று காண்பிப்பார்கள்.
எல்லா தேர்தல் காலத்திலும் வாக்களித்தால் மகனை விடுவிப்போம் என்று வேட்பாளர்கள் வாக்களிப்பார்கள். தேர்தல் முடிந்தால் அவர்களை காணமுடியாது. கடந்த மக்களவை தேர்தலிலும், சட்டப்பேரவை தேர்தலிலும் வாக்களித்த போதும் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. பொடா சட்டத்தின் படி ஸலீம் கைது செய்யப்பட்டதால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பரோல் கூட கிடைக்கவில்லை.
மத்தியில் ஆட்சியில் இருந்த பிறகும் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்று யூசுஃப் ஸதாவும், அவரது மனைவி சுஹராவும் கண்ணீருடன் கூறினர்.
கோத்ராவில் ரயிலுக்கு தீவைத்தவர்கள் ஹிந்துத்துவாவாதிகள் என்று இங்குள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும். ரயில்வே நியமித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி உமேஷ் சந்திர பானர்ஜி கமிஷனும் ரெயிலுக்கு உள்ளே மர்மமான இரசாயனப் பொருளை உபயோகித்து யாரோ நெருப்பை பற்ற வைத்துள்ளார்கள் என கண்டறிந்தது. ஆனால், போலீஸ் மீட்பு பணியில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது பொய் வழக்கை சுமத்தி, இனப்படுகொலைக்கு வழி வகுத்தது. விசாரணை நீதிமன்றம் 11 பேருக்கு மரணத் தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது.
விடுதலைக்கான காலம் கனியுமா? என எதிர்பார்த்து யூசுஃப் ஸதாவும் அவரது குடும்பத்தினரும் காத்திருக்கின்றனர்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக