Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 11 டிசம்பர், 2012

வி.களத்தூரில் இன்று வரை நடந்தது என்ன? ஓர் தொகுப்பு


வி.களத்தூரில் பள்ளிவாசல் தெரு வழியாக சாமி ஊர்வலம் செல்ல வி.களத்தூர் போலிசார் நேற்று முன்தினம் (09/12/2012) அன்று அனுமதி தர மறுத்தனர். இதனையடுத்து நேற்று (10/11/2012)

காலை 8.00 அளவில் வி.களத்தூர் போலிசார் அனுமதி தர மறுத்ததையடுத்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் டி.எஸ்.பி. ஆகியோரிடம்  சென்று பள்ளிவாசல் வழியாக செல்ல ஒருபிரிவினர் அனுமதி வாங்கியதாகத் தெரிகிறது. இதன் பிறகு அவர்கள் ஊர்வலதிற்கான வேலையில் இறங்கினர்.


நண்பகல் 12.00 மணியளவில் வி.களதூருக்கு டி.எஸ்.பி. சுஹாசினி, சமூக நல அலுவலர் பேச்சியம்மாள் ஆகியோர் சுமார் 12 மணியளவில் இரண்டாம் தரப்பிடம் ஊர்வலம் செல்ல அனுமதியளித்ததை ஆட்சேபிக்கக் கூடாதென்றும் ஊர்வலம் செல்ல அனுமதி தரவேண்டும் என்றும் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் தங்கள் பகுதியில் ஊர்வலம் செல்ல தங்கள் அனுமதியை அரசு அலுவலர்கள் கோராமல் தாங்களாகவே அனுமதியளித்ததைக் கண்டித்து மதியம் சுமார் 3 மணிக்குவாக்கில் கடையடைப்பு நடத்தினர்.

கடையடைப்பு நடந்ததை அடுத்து மாலை 4 மணிவாக்கில் சுமார் 20 க்கும் மேற்பட்ட காவல் துறை பாதுகாப்பு வாகனம் ( சுமார் 100  காவலர்கள் ) வி.களத்தூரில் நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

மீண்டும் மாலை 7 மணிக்கு வி.களத்தூர்  ஜூம்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் டி.எஸ்.பி.சவுந்தரராஜன் பேச்சு வார்த்தை நடத்தினர்.  மீண்டும் ஆர்.டி.ஓ. ரேவதி, தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.ஆனால் ஆா.டி.ஓ. ரேவதி யின் ஒருதலைபட்சமாக  முந்தைய நடவடிக்கையை சுட்டிக்காட்டி பேச மறுத்துவிட்டனர்.

(இருவழிகள் இருந்தபோதும் பள்ளிவாசல் வழியாகவே ஊர்வலம் போகவேண்டும் என்று வலியுறுத்துவதன் காரணம் புரியவில்லை. அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு குழப்பமாகவே உள்ளது.)

இதன் பிறகு இரவு 9.00 மணியளவில் அரியலூர் எஸ்.பி ,பெரம்பலூர் எஸ்.பி,சமூக நல அலுவலர் பேச்சியம்மாள் ஆகியோருடன் வண்ணாரம்பூண்டி ADM திருமண மண்டபத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.இதில் அதிகாரிகள் ஒரு தரப்பு மக்களிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளனர்.அதன்பிறகு இன்று(10/12/2012)  ஊர்வலம் நடத்த தடை செய்யப்பட்டனர்.மேலும் நாளை கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் அதில் இரு தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என் கூறி சென்றுள்ளனர்.

தடை செய்யப்பட்டதை அடுத்து ஒரு மக்கள் கொந்தளித்ததும் நாங்கள் ஊர்வலத்தை நடத்தியே தீர்வோம் என்று கூறி கடைவீதியில் இருந்தனர்.அதன் பிறகு போலிசார் அங்கு வந்து அவர்களை கலைந்து செல்ல சொன்னார்கள்.அவர்களும் களைந்து சென்றனர்.

இரவு சுமார் 12.00 மணியளவில் திருச்சி டி.ஐ.ஜி.வி.களதூருக்கு வந்து பார்வை இட்டு சென்றார்.

இன்றைய நிலவரம்;(11/12/2012)

இன்றும் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.பதற்றமான சூழ்நிலையின் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று அனைத்து பள்ளிக் குழந்த்தைளையும் பள்ளி நிர்வாகம், மதியம்  பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் மதியம் 3.00 மணி நிலவரப்படி  பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் DRO முன்னிலையில் பேச்சுவார்த்தை நிகழ்த்திக்கொண்டுள்ளதாக  தெரிகிறது.

நன்றி களத்தூர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக