ஐக்கிய நாடுகள் சபையால் 1948 டிசம்பர் 10-ஆம் தேதி உலக அளவிலான மனித
உரிமை பிரகடனம் அறிவிக்கப்பட்டது. இந்த நாளே மனித உரிமைகள் தினமாக
கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 10 தேதி மனித
உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்ட வேளையில், ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவில் அதிக அளவில்
மனித உரிமைகள்
மீறப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட அனைத்து
தரப்பு மக்களும் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று நம்புவதாக ஐக்கிய நாடுகள்
சபையின் ஹியூமன் ரைட்ஸ் கூறுகிறது.
மனித உரிமை மீறல்களை தடுக்க இந்திய அரசு உடனடியாக தலையிடவேண்டும் என்று மனித
உரிமைகள் தொடர்பான வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில்
பெருமளவில் ராணுவ ரீதியான துஸ்பிரயோகங்கள் நடந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கின்றது “இந்தியாவில்
பெருமளவில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பல்வேறு கறுப்புச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சமூக பொருளாதார
கொள்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களையும், அரசியல் எதிரிகளையும் அடக்கு ஒடுக்கவும், வளர்ச்சித்
திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் அரசு இவற்றைச் செய்துள்ளது. ஆயுதப் படை சிறப்பு
அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மனித உரிமை
அமைப்புகளின் கோரிக்கையை அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை.
சட்டம் ஒழுங்கை பேணுகிறோம் என்ற பெயரில் சட்டத்தின் பாதுகாவலர்கள்
அக்கிரமங்களுக்கு தலைமை வகிக்கின்றனர். போலி என்கவுண்டர்களும், அநீதமான
சிறைக்காவல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நாட்டின் பல பகுதிகளில் நடந்தேறிவருகிறது. அமைதியான
முறையில் போராடுபவர்களை கூட கொடுமைப்படுத்தும் செயல் நடக்கிறது” பொருளாதார
வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மேலும் ஏழ்மையையும், மனித உரிமை
மீறல்களையுமே உருவாக்குகிறது.
உலகில் அதிகமான மக்கள் பட்டினியில் வாடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
வளர்ச்சிக்கு பலியாகி வருடந்தோறும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்
குடிபெயர்க்கப்படுகின்றனர். பொருளாதார வளர்ச்சி குறையும் வேளையில் அவசரக்
கூட்டங்களை நடத்தி தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு, சமூக
பிரச்சனைகளை தீவிரவமாக கருதுவதில்லை.
தவறான பொருளாதார கொள்கைக்காக மக்களை பழி கொடுகிறது இந்த அரசு.
நன்றி சிந்திக்கவும்.நெட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக