இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க 6 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. 28 இடங்களில் கண்காணிப்பு மையமும், 7 வாகனங்களில் ரோந்து செய்யப்படுகிறது.
இதுபற்றி பெரம்பலூர் எஸ்பி ராஜசேகரன் தெரிவித்திருப்பதாவது:
டிசம்பர் 6ம் தேதி பாபர்மசூதி இடிப்பு தினம் என்ப தால் அன்றைய தினம் மாவட்ட அளவில் எங்கும் அசம்பாவிதம் நிகழாமல் தடுப்பதற்காக
திருமாந்து றை, ஊட்டத்தூர் பிரிவு ரோடு, கோனேரிப்பாளையம், உடும்பியம், மருதையான்கோயில், அகரம்சீகூர் ஆகிய 6 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து 20 போலீசாரை கொண்டு வாகன தணிக்கை நடத்தப்படவுள்ளது.
திருமாந்து றை, ஊட்டத்தூர் பிரிவு ரோடு, கோனேரிப்பாளையம், உடும்பியம், மருதையான்கோயில், அகரம்சீகூர் ஆகிய 6 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து 20 போலீசாரை கொண்டு வாகன தணிக்கை நடத்தப்படவுள்ளது.

மேலும் புதுபஸ் ஸ்டாண்டு, பழைய பஸ்ஸ் டாண்டு மற்றும் சந்தேகிக்கப்படும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர் கள், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அதனை செயலிழக்கும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவற்றோடு 4 ரோடு துணை மின் நிலையம், எறையூர், உடும்பியம் சர்க் கரை ஆலைகள், ஜேபிஆர் சிமென்ட் ஆலை, எம்ஆர்எப்டயர் தொழிற் சாலை ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமலிருக்க 220 பேர் பாது காப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நன்றி தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக