Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 20 டிசம்பர், 2012

நமதூரில் மதரஸாக்களின் நிலை...

நமதூரில் மதரஸாக்களின் நிலை...
ஒருகாலம் இருந்தது அப்பொழுது மக்களின் நிலையை பற்றி பார்த்தால் தங்களின் பிள்ளைகளை மதரஸாக்களுக்கு அனுப்புவது கடமையாகவே கருதி தாங்கள் அதற்கு ஆயத்தபடுத்தி அவர்களை மதரஸாவிற்கு அனுப்புவது வாடிக்கையாகவே இருந்தது. அந்த சூழ்நிலை எந்த அளவிற்கு இருந்தது என்றால் இன்று பிள்ளைகள் காலையில் சாரை சாரையாக பள்ளிக்கு செல்வது போல் அன்று மதரஸாக்களுக்கு சென்றுவருவது கட்டாய கடமையாகவே கருதினார்கள். பள்ளிவாசல் மதரஸாக்களில் இடம் இல்லை என்றாலும் கூட ஆங்காங்கே தெருக்களில் தின்னை மதரஸாக்கள் நடப்பதும் அன்றைய கலாச்சாரமாக
இருந்தது.  அன்று பிள்ளைகள் மதரஸாக்களுக்கு செல்லவில்லை என்றால் சமுதாயத்தில் எலக்காரமாக கருதினார்கள்.
ஆனால் இன்றைய நிலை........... ?
சில பள்ளிகூடங்களில் அரபி பாடதிட்டம் இருக்கிறது என்று சொல்லி மதரஸாக்களை புரக்கணித்து வாழ்ந்து வருகிறோம்!. இது கூட பரவாயில்லை இன்னும் ஒரு சில பள்ளி கூடங்களில் இஸ்லாத்திற்கு மாற்றமாக நடந்து கொள்ளும் சூழ்நிலையில் இருந்தாலும் உலக கல்விக்கு மட்டுமே முக்கியதுவம் கொடுத்து தங்கள் பிள்ளைகளை அந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். மதரஸாக்ளை பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் அவர்களுடைய பிள்ளைகள் இருக்கின்றனர்.
இந்த நிலைக்கு முற்றிலும் தள்ளியதற்கு யார் காரணம்.?
இதில் முதலாவது இடத்தில் தங்களை தக்க வைத்து கொள்பவர்கள் இமாமாகத்தான் இருக்க வேண்டும்.
காரணம் குழந்தைகள் வரவு பள்ளிவாசல் மதரஸாக்களுக்கு குறையும் பொழுதே அவரவர் பெற்றோர்களை சந்தித்து மறுமையை பற்றி அச்மூட்டி எச்சரிக்கை செய்ததுண்டா? 
இனி வரும் காலங்களில் தங்களின் பொருப்புக்களை உணர்ந்து சரியான முறையில் மக்களையும், இளைய தலைமுறைகளையும்  வழிநடத்த வேண்டும் என்பது இமாம்களின் பொருப்பாக உள்ளது.
குறிப்பாக பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் வாழ்வு இவ்வுலக வாழ்க்கைக்கு முக்கியதுவம் கொடுப்பதோடு மட்டும் நிருத்திக்கொள்ளாமல், மறுமைக்காக தயார் செய்து வைப்பது முக்கிய கடமை என்பதை உணரவேண்டும். காரணம் அதுதான் உங்களுடைய மரணத்திற்கு பின் வரக்கூடிய முக்கிய செல்வமாக உள்ளது.
நமது நிருபர்.

2 கருத்துகள்:

  1. asalamualaikum
    நாம் நம் குழந்தைகளை ஆலிம் , ஹாபிஜ், முப்தியாக ஆக்குவதுமில்லை, மார்க அறிஞகர்களின் முக்கியத்துவம், அவர்களை கண்ணியப்படுத்தி அவர்களிடம் இருந்து மார்கத்தை தெரிந்துக் கொள்வதும் இல்லை. நாம் இமாம்களை 5 வேளை தொழவைக்கும் ஒரு வேலை ஆளைப் போலத்தான் நினைக்கிறோம். அவர்கள் பலஹீனத்தை பயன்படுத்தி எவ்வளவு குறைவான சம்பளம் வழங்க முடியுமோ அவ்வளவு குறைவாக தருகிறோம். நம் இஷ்டப்படி அவர்கள் நடக்க வேண்டும் இல்லையெனில் வேலையைவிட்டு தூக்கிவிடுவோம். இவ்வளவு பெரிய முஸ்லீம்கள் நிறைந்து வாழும் ஊரில் நமது சந்தேகங்களை தெளிவுபடுத்தும் ஆற்றல் உடைய மார்க்க அறிஞர்களை வரவழைத்து வேலைக்கு அமர்த்தவோ , அதற்கேற்ற சம்பளம் வழங்கவோ தயாரில்லை. நமது குழந்தைகளை உலகக் கல்வியோடு மார்க்க அறிஞர்களாக்கும் எத்தனையோ வாய்ப்புகள் உள்ளபோதும் , நாம் அதற்கும் தயாரில்லை. இதன் மூலம் மார்க்க விஷயம் வந்த அனைத்து வழிகளையும் நாம் அடைத்துவிட்டோம். பெண்களுக்கு மார்க்க விஷயங்களை எடுத்துச்சொல்லவோ , அவர்களுடைய மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்தவோ எந்த முயற்சியும் செய்யப்படாமல் அலச்சியப்படுத்தப்படுவதும் , அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் நிகழ்சிகளை கைகாட்டிவிட்டு சமாதானம் ஆகிகொள்வதும்தான் நடந்து கொண்டு உள்ளது.Every body hero to blame immams , no body things what we did for them.

    பதிலளிநீக்கு
  2. wa alaikkum assalaam warahamathullah
    சகோதரர்களே ஒரு காலத்தில் சாரை சாரையாக மதரசாவிற்கு சென்ற அவர்கள் தான் இன்றைய தலைமுரையை சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.அப்பொழுது இருந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மார்க்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதியோடு இருந்தார்கள்.


    அப்பொழுது மதரசாவிரற்கு வரவில்லை என்றாலோ அல்லது தவறு செய்தாலோ ஹஜ்ரத் அவர்கள் கடுமையாக தண்டிப்பார்கள்.அவாறு தவறுகளை தண்டிப்பதற்கும் அன்றைய பெற்றோர்கள் முழு உரிமையை வழங்கினார்கள்.

    ஹஜ்ரத் அடித்ததை வீட்டில் சொன்னால் வீட்டில் உள்ளவர்கள் நீ தப்பு பண்ணிருப்ப அதனால அடிவாங்கிருப்ப என்று சொல்லி இமாம்களுக்கு ஆதரவு தந்து தங்கள் குழந்தைகள் மார்க்க கல்வி கற்று ஒலுக்கமாக valara வேண்டும் என்று உறுதியோடு இருந்தார்கள்.


    ஆனால் இன்றோ அதற்க்கு ஆப்போசிட்.தங்கள் குழந்த செய்த தவருக்கு அவர்களை அதட்டினாலும் கூட சண்டைக்கு வர தயாராக இன்றைய பெற்றோர்கள் இருக்கிறார்கள்.இமாம்களை மட்டும் குறை சொல்லி எந்த பயனும் இல்லை.பெற்றோர்களின் சண்டைக்கு பயந்துக் கொண்டு நிறைய இமாம்கள் கண்டிப்பதை விட்டு விட்டு ஏதோ வந்தா வராங்க இல்லாட்டி போகட்டும் என்று விட்டு விட்டார்கள்.இது தான் உண்மையும் கூட.

    உங்கள் சகோதரன்
    முஹம்மத்

    பதிலளிநீக்கு