Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 17 டிசம்பர், 2012

ஜனாஸா பற்றிய விளக்க பயிற்சி முகாம், தாருஸ்ஸலாம் – லெப்பைக்குடிகாடு


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்;
அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
அல் குர்ஆன் 10:25.


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்,
பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவும்
ஜனாஸாவை குளிப்பாட்டி கஃபன் இடுவது பற்றிய
விளக்க பயிற்சி முகாமும்.

நிகழ்ச்சி விபரம்
இன்ஷா அல்லாஹ்,
நாள்          :  25-12-2012 செவ்வாய், ஹிஜ்ரி 1434,  ஸஃபர் 11.
நேரம்        :  காலை 09:30 முதல் மஹ்ரிப் வரை
வளாகம் :  தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல்,
ஜமாலிநகர்லெப்பைக்குடிகாடு.


சகோதரி ஆலிமா வாஜிதா சித்தீகிய்யாஆசிரியைதாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல்,
மரணத்தின் போது மனிதனின் நிலை
என்கிற தலைப்பில் சிறப்புரையும்

சகோதரி ஆலிமா ஷான் ராணி பிரச்சாரகர்ஏகத்துவ பிரச்சார மையம்.
மரணத்திற்குப்பின் மனிதனின் நிலை
என்கிற தலைப்பில் சிறப்புரையும்
ஜனாஸாவை குளிப்பாட்டி கஃபன் இடுவது
பற்றிய விளக்க பயிற்சி வகுப்பும் நிகழ்த்துகிறார்கள்.


இஸ்லாத்தை,   அதன் தூய வடிவில் அறிந்துக் கொள்ள
அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
<< மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது >>
என்றென்றும் இறைப்பணியில்
தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத்,
ஜமாலி நகர், லப்பைக்குடிகாடு.
ஏற்பாடு : தாருஸ்ஸலாம் கல்வி அறக்கட்டளை, அரசு பதிவு எண் : 11/BK4/98.
[சகோதரர்கள், இந்நிகழ்ச்சியின் அவசியத்தை  தங்கள் குடும்பத்தினருக்கு எடுத்துரைத்து, தவறாமல் கலந்து கொள்ள ஆர்வப்படுத்துங்கள்

2 கருத்துகள்: