Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 13 டிசம்பர், 2012

சென்னை பேருந்து வரும் ஆனால் வராது...


சென்னை பேருந்து வரும் ஆனால் வராது...

நமதூர் வழியாக சென்னைக்கு செல்லும் பேருந்து வந்து செல்வது பலருக்கு தெரியாம் இருந்தாலும் அனேக சாலைவீதியில் உள்ளவர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் தெரியாமல் இருக்காது. ஆனால் அந்த பேருந்து எப்பொழுது வரும் என்பது அவர்களுக்கு தெரியாது என்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். இதைபற்றி ஓர் உரையாடல்... 
படிப்பை பாதியில் நிருத்திய பாசித்தும், கடைத்தெரு காதர் அத்தாவும் 
காதர் அத்தா -  அஸ்ஸலாமு அலைக்கும் பாசித்.
பாசித் - வ அலைக்கும் சலாம் தா.
காதர் அத்தா -  என்னடா பாசித் நல்லா இருக்கியா
பாசித் - அல்ஹம்து லில்லாஹ் நீங்க எப்படித்தா இருக்கீங்க?
காதர் அத்தா -  அல்ஹம்து லில்லாஹ். உங்க அத்தா துபையிலிருந்து வராராமே எப்ப வரார்? யார் அழைக்க போரா?


பாசித் - இன்ஷா அல்லாஹ். நாளைக்கு தான் வரார். நா மட்டும் தான் போலாம்னு இருக்கேன். ஏதோ நம்ம ஊர்லேந்து சென்னைக்கு 2 பஸ் போதாமே!  அதுல போலாம்னு இருக்கேன். ஆமா தா எத்தன மணிக்கு அந்த வண்டி போகுதுன்னு உங்களுக்கு தெரியுமா?

காதர் அத்தா -  அட கிருக்கு பயலே நீலாம் எதுக்குடா படிச்ச. இன்னுமாடா இத நம்பிட்டு இருக்க?
பாசித் - அதுக்குதான் நான் பாதிலே படிப்ப நிருத்திட்டேன். 
காதர் அத்தா -  இந்த வெட்டி பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்லடா...
பாசித் - அத உடுங்க தா எப்ப வண்டி வரும்.
காதர் அத்தா -  ஏன்டா.... பக்காத்தால ஊட்ல தேங்கா ஒடச்சா நம்ம ஊட்ல கொட்டா முச்சியாவது ஒடைகிறது போல, நம்ம ஊருக்கு சென்னை வண்டி வருதுன்னுதான் பேரு ஆனா ஆது எப்ப வரும்முன்னு நம்ம ஊர்ல உள்ள பேரூராட்சிக்கே தெரியாது. வந்தா 2 வண்டியும் ஒட்டிக்கிட்டே வருவாய்ங்க இல்லன்னா புஸ்ஸ்.....
பாசித் - உஸ்ஸ்.........
காதர் அத்தா -  ஒழுங்கா டோல் பூத்துல வண்டிய புடுச்சுட்டு போய்டு. இதல்லாம் நம்பிட்டு இருக்காத.
பாசித் - சரி்த்தா... ஊர்ல இருக்குரவங்க யாருமேவா இத கண்டுக்குல....
காதர் அத்தா -  எல்லாம் பதவிக்கு வருவதற்காக எல்லா நடிப்பும் நடிக்கிறாய்ங்க.. ஆனா வந்தா மட்டும் வழக்கம் போல எந்த ஒரு பிரச்சணையும் கண்டுக்க மாட்டிக்கிறாய்ங்க.
பாசித் - இதுக்கு தீர்வே இல்லயாதா?
காதர் அத்தா -  உங்க தலைமுறையாவது எங்கள போல இல்லாம ஒத்துமையா மார்கம் சொன்னது போல வாழ்ந்தா எந்த ஒரு பிரச்சணைக்கும் தீர்வு காண முடியும்
பாசித் - இன்ஷா அல்லாஹ்.....
(குறிப்பு - முடிவில் காதர் அத்தா மகள் கோழிக்கறி வாங்கி வரசொன்னதை நினைத்து சலாம் கூறி கோழி வாங்க சென்றார்.)
நமது நிருபர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக