Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 24 டிசம்பர், 2012

வெளி நாட்டு வாழ்க்கை - சுயநலமா? குடும்ப நலமா?-


வெளி நாட்டு வாழ்க்கை - சுயநலமாகுடும்ப நலமா?-

//
இங்குள்ள பெற்றோர்களை அவர்களுக்கு வயதாகும் போது கூட இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால்அது நாள் வரை நல்லதொரு சூழ்நிலையில் எந்த வசதி குறைவும் இன்றி மேலை நாடுகளில் வளர்ந்து வந்த நம் குழந்தைகளுக்கு நிச்சயம் அசவுகரியத்தை கொடுக்கிறது.//

வெளி நாடு வாழ் இந்தியர்கள் ஒரு கட்டத்தில் இந்தியா திரும்ப பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இது தான் எனக்கு தெரிந்து யாரும் எதிர் வாதம் செய்ய முடியாத முக்கிய காரணம். அது நெருங்கிய குடும்ப உறவுகளின் மறைவு மற்றும் துக்கங்களில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை.

சிங்கப்பூர்துபாய் ஒரு இரண்டு மூன்று மணி நேர விமான பயணம். அதிகபட்சமாக லண்டனிலிருந்து அவசரத்துக்கு இந்தியா திரும்ப வேண்டுமாயின் பத்து பன்னிரண்டு மணிநேரம் தான். ஆனால்இரண்டு கண்டங்களை தாண்டி அமெரிக்காவிலிருந்து வருவதென்றால். அது தான் அங்கு வாழும் இந்தியர்களுக்கு என்றுமே ஒரு சவாலான விஷயம்.
தாய் தந்தையர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பின் ஓரளவு நாம் நிம்மதியாக தூங்க முடியும். இல்லையென்றால் அது அனல் மேல் பூனை வாழ்க்கை தான். சமீபத்தில் அமெரிக்காவில் வாழும் பதிவுலக நண்பர் ஒருவரை சரியாக மணியை கணக்கு பார்க்காமல் இரவு ஒன்பது மணி என்று நினைத்துக்கொண்டு அழைத்து விட்டேன் (நான் கலிபோர்னியாவில் இருந்த நினைப்பில் அவ்வாறு அழைத்து விட்டேன். ஆனால் அவரோ நியூ யார்க்கில் உள்ளார். அப்போது அவருக்கு இரவு நடு சாமம்). நண்பர் பதறி அடித்துக்கொண்டு பேசினார். அப்போது தான் எனக்கு அவருடைய டைம் ஜோன் உரைத்தது. உடனே மன்னிப்பு கேட்டுக்கொண்டு நாளை பேசுகிறேன் என்று வைத்து விட்டேன். 

அடுத்த நாள் நண்பரிடம் பேசியது அவரின் வார்த்தைகளில்.
 

"
தப்பா எடுத்துக்காதீங்க ஆதி. நைட் பன்னிரண்டு மணிக்கு இந்தியா நம்பரை பார்த்தவுடன் பதறி விட்டேன். ஊரில் அம்மா அப்பா இருவரும் தனியாக உள்ளார்கள். அந்த நேரத்தில் அழைப்பு வந்ததும் என்னமோ ஏதோ என்று பதறி விட்டேன்". 

இது தான் அங்கு பல குடும்பங்களில் நடக்கிறது !
 சில நேரங்களில் அவசரத்துக்கு மணி பார்க்காமல் ஏதாவது சின்ன விசயத்திற்கு இந்தியாவிலிருந்து நடு சாமத்தில் எங்களை அழைத்து விடுவார்கள். அங்கு நமக்கு பி.பி எகிறி விடும். தனிப்பட்ட முறையில் அமெரிக்காவில் நான் இருந்த கால கட்டத்தில் என்னுடைய நெருங்கிய உறவுகள் பலர் தவறி விட்டார்கள். அங்கு உட்கார்ந்து கொண்டு என்ன செய்ய முடியும்? அடுத்த பிளைட் பிடித்து இங்கு வந்தால் கூட நான் ஊர் போய் சேர்வதற்கு மூன்று நாட்கள் ஆகிவிடும். அங்கேயே ஓரிரு நாள் உட்கார்ந்து அழுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.

துக்கம்
, இறப்பு மட்டுமல்ல. திருமணம் போன்ற சந்தோசமான நேரங்களில் கூட ஒரு சிலரால் அனுபவிக்க முடியாமல் போவதுண்டு. ஒரு கல்யாணம் காட்சி என்றால் அங்கிருந்து ஒரு வாழ்த்து தான் பெரும்பாலான வெளி நாட்டு வாழ் இந்தியர்களால் சொல்ல முடிகிறது. மிக நெருங்கிய உறவுகள் திருமணம் மட்டும் நன்றாக திட்டமிட்டால் கலந்து கொள்ள முடியும். அதுவும் அவரவர் குடும்ப பொருளாதாரத்தை பொறுத்து தான். என் நெருங்கிய நண்பர் ஒருவர் தன் சொந்த தம்பி திருமணத்திற்கு செல்லவில்லை. கேட்டதற்கு, அதற்க்கு குறைந்தது ஒரு வாரம் லீவு போட வேண்டும். எல்லா செலவுகளையும் சேர்த்தால் குறைந்தது ஒரு லட்சம் ஆகும் நான் மட்டும் போய் வர. அதை பணமாக தந்தால் தம்பி திருமணத்தை இன்னும் சிறப்பாக நடத்த முடியும். அதனால் நான் போக வில்லை. கல்யாண சி.டி பார்த்துக்கொண்டால் போதும் என்றார். 

ஒன்றை மட்டும் இந்த பதிவின் மூலம் தெரிய படுத்திக்கொள்ள விரும்புகிறேன். வெளி நாடுகளில் போய் வாழ்பவர்களை பற்றி பலருக்கும் பல வித கருத்துக்கள் இருக்கும். அதில் ஒன்று மட்டும் நிச்சயம். வேலை நிமித்தம் வெளி நாடு செல்லும் பெரும்பாலானோர் தான் மட்டும் சுகமாக வாழ வேண்டும் என நினைத்து அங்கு போவதில்லை அல்லது இருப்பதில்லை. சென்ற பதிவில் மனோ சாமிநாதன் அம்மா அவர்களின் பின்னூட்டம் இப்படி தான் இருந்தது...


//
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபுக்குடியரசில் 35 வருடங்கள் வாசம். ஆரம்பத்தில் பிரச்சினைகளை சமாளிக்க, அதன் பின் மற்ற‌வர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்க, பிறகு நம்மை நிலை நிறுத்திக்கொள்ள‌, அதன் பின், அன்பின் நிர்ப்பந்தங்களுக்காக என்று இத்தனை வருடங்கள் கடந்து வந்தாயிற்று. //

இந்தியா திரும்புவது என முடிவு செய்த பின் என் சிறியவளிடம் தெரிவித்த போது முடியவே முடியாது என்றாள். குழந்தைகளுக்கு முதல் பிரச்சனை இங்குள்ள பள்ளிகளும்
, பாட புத்தகங்களும், படிப்பு முறையும் தான். நான் அவளிடம் கேட்டது இது தான். உனக்கு உன் அம்மா அப்பா கூட இருக்க வேண்டுமா இல்லையா? இல்லை நீ மட்டும் தனியாக இங்கு இருந்து கொள்கிறாயா என்று ! அதற்கு அவள் "இல்லை, நீங்க ரெண்டு பேரும் எப்பவும் என் கூட தான் இருக்கணும்" என்றாள். அதற்கு நான், "பாத்தியா, உனக்கு மட்டும் உன் அப்பா அம்மா கூட இருக்கணும். எங்களுக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா? எங்க அப்பா அம்மா அங்கு தனியா தானே இருக்காங்க. அவங்க கூட இருக்கணும்னு எங்களுக்கும் ஆசையா இருக்காதா?"  அவளுக்கு முழுதும் புரிந்ததா என எனக்கு தெரியாது. அது தான் தற்போது என் மன நிலையும். 

எனக்கு தெரிந்து பலரின் வெளி நாட்டு வாழ்க்கை இப்படிதான் அமைகிறது. அது மட்டுமல்ல. உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். அது போல் தான் எங்கள் நிலைமை. இங்குள்ள பெற்றோர்களை அவர்களுக்கு வயதாகும் போது கூட இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது அது நாள் வரை நல்லதொரு சூழ்நிலையில் எந்த வசதி குறைவும் இன்றி மேலை நாடுகளில் வளர்ந்து வந்த நம் குழந்தைகளுக்கு நிச்சயம் அசவுகரியத்தை கொடுக்கிறது. ஒரு பக்கம் நம்மை பெற்ற பெற்றோர். மறு பக்கம் மனைவி குழந்தைகள் அவர்களின் எதிர்காலம். இரண்டுக்கும் நடுவில் மதில் மேல் பூனையாக இன்று பலர் தத்தளிப்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
 

அதில் தற்போதைக்கு ஒரு பக்கம் நான் குதித்து விட்டேன். இருந்தாலும் மனது அடுத்தப்பக்கத்தை எட்டி எட்டி பார்கிறது. கொஞ்ச நாள்/வருடங்கள் கழித்து எம்பி குதித்து மறு பக்கம் தாவ கூட முயற்சிக்கும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தற்போதைக்கு குதித்த இடத்தில் சந்தோசமாக இருக்க இந்த குரங்கு மனசு முயற்சித்து பழகி கொண்டு இருக்கிறது !

மின்னஞ்சல் மூலமாக
சபியுல்லாஹ்

4 கருத்துகள்:

  1. இரண்டே மாதம் …………....எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்...
    என் துபாய் கணவா!ٌ கணவா... - எல்லாமே கனவா.......?
    கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?ٌ
    12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...
    5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
    4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...
    2 வருடமொருமுறை கணவன் ...
    நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!ٌ
    இது வரமா ..? சாபமா..?
    அழகுக்காய் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?ٌ
    கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
    நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
    நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
    திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
    வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்ٌ விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...தேவை அறிந்து... சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து..
    .தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு..
    .வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...ٌ
    இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்ٌ
    இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு
    உல்லாச பயணம்..பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!ٌ
    தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
    எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
    இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?ٌ
    விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
    பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?ٌ
    நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
    அனுமதிக்கப்பட்ட எடையோடுஅதிகமாகிவிட்டதால்
    விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
    பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?ٌ
    பாலையில் நீ
    வறண்டது என் வாழ்வு!
    வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல்
    ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
    உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?ٌ
    விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...கிழித்துவிடு!
    விசாரித்து விட்டு போகாதே
    கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
    திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
    THANKS தோழி,புதைனா.

    பதிலளிநீக்கு
  2. THIS IS TRUE NANBA saifullah, PLEASE THINK EVERYBODY GO TO OUR LBK ,STRAT NEW LIFE.PRAY FOR
    ALL BROTHERS IN DUBAI.

    பதிலளிநீக்கு
  3. asalmu alaikum

    Dubai or lbk be with family .

    PLEASE donnot think to bring your childrens to dubai , educate well and insha allah next generatiion will rule the india high posts.
    this prision life to be end with us

    பதிலளிநீக்கு