எம் நடுக்கூடத்தில் வந்தமர்ந்தாய்
புற்றுநோய்ப் போல் எல்லாம் தின்றாய்.
உன் தாகம் இன்னும் தணியலையா?
எம் பிஞ்சின் இரத்தமென்ன தண்ணீரா?
புற்றுநோய்ப் போல் எல்லாம் தின்றாய்.
உன் தாகம் இன்னும் தணியலையா?
எம் பிஞ்சின் இரத்தமென்ன தண்ணீரா?
இடிபாடின் நடுவே கரும்பலகை தேடி
எழுதிப் பழகுகிறது எம் பிள்ளைகள்.
அலுப்பாகிப்போன உன் சிறார்கள்.
ஓவியம் வரைவதோ ஏவுகணையில்.
எழுதிப் பழகுகிறது எம் பிள்ளைகள்.
அலுப்பாகிப்போன உன் சிறார்கள்.
ஓவியம் வரைவதோ ஏவுகணையில்.
அவ்வோவியம் எம்மை வந்தடைந்தபோது
முதுமையான பெற்றோரைக் கொன்றொழித்தது
பயிலுகின்ற பிள்ளையின் உயிரைக்குடித்தது
இரத்தத்தில் நனைத்தது புத்தகப்பை.
முதுமையான பெற்றோரைக் கொன்றொழித்தது
பயிலுகின்ற பிள்ளையின் உயிரைக்குடித்தது
இரத்தத்தில் நனைத்தது புத்தகப்பை.
அதிர்ச்சியில் கர்ப்பிணிச் சகோதரியோ
இறந்தச் சிசுவை ஈன்றெடுத்தாள்
மரணத்தால் கலங்காத வீரநெஞ்சம்.
பிறவாத மாவீரனை முத்தமிட்டு
பிறருடனே சொர்க்கம் அனுப்பிவைத்தாள்.
இறந்தச் சிசுவை ஈன்றெடுத்தாள்
மரணத்தால் கலங்காத வீரநெஞ்சம்.
பிறவாத மாவீரனை முத்தமிட்டு
பிறருடனே சொர்க்கம் அனுப்பிவைத்தாள்.
சுகபோக வாழ்விலோ திளைத்திருப்பாய்.
சிறு அடிக்கும் மரண ஓலம் எழுப்பிடுவாய்.
தினமும் மரணத்தை வாழ்கின்ற எம் வீரன்
போர்க்களமும் அவனுக்கு பஞ்சுமெத்தை.
சிறு அடிக்கும் மரண ஓலம் எழுப்பிடுவாய்.
தினமும் மரணத்தை வாழ்கின்ற எம் வீரன்
போர்க்களமும் அவனுக்கு பஞ்சுமெத்தை.
உன் சுண்டுவிரலில் அடிபட்டதென்று கூறி
எம் உடல்களைச் சிதைக்கின்ற முட்டாளே!
நாம் வீரமுடன் எறிகின்ற ஒரு கல் போதும்
உன் இதயத்தை பிளந்திடும் என்று அறியாயோ!.
எம் உடல்களைச் சிதைக்கின்ற முட்டாளே!
நாம் வீரமுடன் எறிகின்ற ஒரு கல் போதும்
உன் இதயத்தை பிளந்திடும் என்று அறியாயோ!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக