நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி
விவரங்களின்படி,
மத்திய அரசின் மூலம், ஹிந்து சமூகத்தினர் பெற்றுவரும் நன்மைகளில் "10 ல் 1 பங்கு"
பலன்கள் கூட முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை, என்ற
வேதனையான உண்மை தெரியவந்துள்ளது.
மஜ்லிஸ்
கட்சியின் எம்.பி.யான அசதுத்தீன் உவைசி, மற்றும்
கேரளாவை சேர்ந்த எம்.பி.க்கள் அனுராதன் சம்பத் மற்றும் பி.கே.பிஜூ ஆகியோர், சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்து கேட்ட
கேள்விகளுக்கு,
மத்திய சிறுபான்மை நல இணையமைச்சர்
"நைனாங் எரிங்" எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், திடுக்கிடும் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.
மக்கள்
தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப ஒவ்வொவொரு சமூகத்துக்காகவும் சராசரியாக (ஆண்டுக்கு)
நபர் ஒருவருக்கு அரசு செய்யும் செலவுகள் குறித்த அந்த விவரத்தில், ஹிந்து சமூகத்தின் பல பிரிவினருக்கு செய்யப்படும்
செலவுகளை விட முஸ்லிம்களின் மீது செலவழிக்கப்படும் தொகை மிகவும் குறைவாக உள்ளது.
ஹிந்து
சமூகத்தின் "எஸ்.சி" பிரிவினருக்கு அரசு செய்யும் செலவு ரூ.1280/-, "எஸ்.டி"க்களுக்கு ரூ.1400/-
ஆனால், முஸ்லிம்களின் மீது செலவழிக்கப்படுவதோ வெறும் ரூ.138/-
அதிலும், பெரும் தொகை "கல்வி உதவி"யாக
(ஸ்காலர்ஷிப்) கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 12ம் ஐந்தாண்டு திட்டத்தில் முஸ்லிம்களின்
நலன்களுக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை, எனவும் கைவிரித்துள்ளது அரசு.
முன்னதாக, முஸ்லிம்களின் நலன்களுக்காக அரசு, பத்து மடங்கு கூடுதல் தொகை ஒதுக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி "திட்டக்கமிஷனுக்கு"
பல கோரிக்கைகள் வைக்கப்பட்டும், "மாண்டேக்
சிங் அலுவாலியா" அளித்த வாக்குறுதிகளுக்கு பிறகும், முஸ்லிம்களுக்கான திட்ட ஒதுக்கீட்டை அதிகரிக்காதது, கவலையளிப்பதாக உள்ளது.
மத்திய அரசு, முஸ்லிம்
சமூகத்துக்காக பல நன்மைகளை செய்து வருவதாக "தம்பட்டம்" அடித்து வருவது
"ஏமாற்று வேலை" என்பதும் புலப்பட்டு விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக