Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

எல்லாஹ் புகலும் இறைவனுக்கே....


தீர்வை நோக்கி     (பாகம் 1)

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹமதுல்லாஹி  வபரக்காதுஹு ,

           அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் மற்றும் இஸ்லாத்தை அதன் உண்மையான  வடிவில் அறிந்து அதன்படி தங்களின் வாழ்க்கையையும்   தங்களின் குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்களின் வாழ்க்கையையும் அமைத்துக்கொண்ட நமதூர் சகோதர , சகோதரிகள் அனைவரின் மீதும் என்றண்டும்  நிலவ பிராத்தித்தவனாக ,

           நமதூர் சார்பாக பல வலை தள இணையங்கள்  நடத்தப்பட்டாலும் ,சமூக அக்கறை மற்றும் தொலைநோக்கு பார்வையோடு ,சமுதாய சிந்தனையும் உங்கள் இணையதளத்தில் அதிகம் இருப்பதை பல நாட்களாக கவனித்து வருபவன் என்ற முறையில் உங்களோடு எனக்கு தோன்றும் சில கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  விரும்பி இந்த கடித்தத்தை எழுதுகின்றேன் .
           நீண்ட நெடிய வரலாற்றுக்கு சொந்தமான நமதூரில் படித்தவர்கள் ,பண்பாளர்கள் ,சான்றோர்கள்,அறிஞர்கள் ,என்று நிறைந்து இருக்கின்றோம் .அல்ஹம்துலில்லாஹ் .அத்தோடு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய இயக்கங்களில் முக்கிய பொறுப்புகள் ,நெருக்கமான உறவுகள் கொண்ட பலபேர்கள் நமதூரில் இருக்கிறார்கள்.இருந்தாலும் பல ஆண்டுகளாக பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சினைகளில் நமதூர் சிக்கி தவித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
          உதாரணமாக 35 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டம் ,துணைமின் நிலையம்,ஜமாலி நகர் பட்டா நிலப்பதிவு ,ஊர் பெயரை அரசாங்க கெஜெட்டில் பதிவு செய்து வருவாய்துறை எல்லையை விரிவுபடுத்துதல் ,போன்றவற்றை குறிப்பிடலாம்.அடுத்ததாக பெருகிவரும் சமுதாய கலாச்சார சீரழிவுகள் ,அனாச்சாரங்கள் ,கள்ளக்காதல் ,திருட்டுக்கள் ,மற்றும் (ஜமாத்துகள்,அரசியல் கட்சிகள் ,சமுதாய இயக்கங்களுக்கிடையே) அவ்வப்போது நடைபெறும் அடிதடி கலாட்டாக்கள்,அவதூறு பிரச்சாரங்கள் ,கோஷ்டி மோதல்கள் ,போட்டி பொறாமை போன்றவற்றை குறிப்பிடலாம்.
          மேற்குறிப்பிட்ட  அனைத்தும் தீர்க்கவே முடியாத குறைகளா என்றால் , இல்லவே இல்லை என்று அனைவரும் கூறுவோம். ஏன்  முடியவில்லை என்று நாம் அனைவரும் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் .சிறிய அளவிலே மக்கள் தொகை கொண்ட குக்கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்கள் கூட தங்கள் குறைகளை எளிதாக தீர்த்துக்கொள்ளும் இன்றைய சூழ்நிலையில் நம்மால் மட்டும் ஏன்  முடியவில்லை.?
          சமுதாய அக்கறையின்மை,ஒற்றுமையின்மை,தொலைநோக்கு சிந்தனையின்மை,என்று அடுக்கிகொண்டே போகலாம்.முதலில் நாம் அனைவரும் நமதூரை,நம் மண்ணை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.நமக்கோ,நம் வீட்டிற்கோ,நம் உறவினர்களுக்கோ,நம் சொத்துகளுக்கோ,ஏதேனும் பிரச்சினை என்றால் துடித்து போகும் நாம்,நம்  ஊருக்கு ஒரு பிரச்சினை என்றால் சுய நலத்தோடு விலகி நின்று வேடிக்கை பார்க்கிற  மக்களை நாம் அதிகம் கொண்டிருக்கிறோம்.இன்னும் சில  பேர் பெயரளவிற்கு முயற்சி எடுத்தாலும் அதன் பலன் தான் சேர்ந்துள்ள ஜமாத்தையோ அல்லது இயக்கத்தையோ அல்லது அரசியல் கட்சிகளையோ போய்  சேரவேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு அந்த செயல்பாடு பாதியில் நின்றுபோய் விடுவதையும் நாம் பார்த்து வருகிறோம். அடுத்து எந்த பிரச்சினையை எப்படி கையாள்வது என்ற நிர்வாக திறமையின்மையை கூறலாம்.
          எல்லா குறைகளும்  ஒரே நேரத்தில் தீரவேண்டும் என்று நினைப்பது தவறான அணுகுமுறை என்றுதான் கூறவேண்டும்.  உடனே தீர்க்ககூடிய பிரச்சனைகள் எது , சிறிது சிறிதாக தொடர்ந்து முயற்சிகள் செய்து தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் எது , என்று பிரித்து அதற்க்கு தக்கவாறு நமது அணுகுமுறையை வகுத்து செயல்படுவது முக்கியம் . ஒரு பிரச்சினையை கையில் எடுத்தால் அது முடியும் வரை ஓயாமல் தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே அதில்  நாம் வெற்றி பெற முடியும்.அதற்க்கு நம்மில் ஒற்றுமையும்,சமுதாய அக்கறையும்,எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காது ஊர் நலன் ஒன்றை மட்டுமே நினைத்து செயல்படக்கூடிய ஒரு குழுவும் வேண்டும். அந்த குழுவில் நம் ஊரை ,நம் மண்ணை ,நேசிக்க கூடிய , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து எல்லா மக்களும் ஆரோக்கியத்தோடும்,மன நிம்மதியோடும் வாழவேண்டும்- என்று எண்ணக்கூடிய  , நம்  ஊருக்காக எந்த தியாகத்தையும்  செய்யக்கூடிய  மக்களை  (அது சிறியவர் ,பெரியவர்,  இளைஞர் ,  ஏழை , பணக்காரர் , படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடு இல்லாமல் ) நாம் ஒன்றிணைக்க வேண்டும்.
           அல்ஹம்துலில்லாஹ் தற்பொழுது இளைஞர்களுக்கு மத்தியில்  நம் ஊரை பற்றிய அக்கறை மேலோங்கி வருவதை உங்கள் இணைய  தளம் மூலம் அறியமுடிகிறது  . நான் மேலே குறிப்பிட்டதை 
போல மக்களிடம் நம் ஊரின் அணைத்து பிரச்சனைகளை பற்றிய  விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும் . நம் ஊரிலும் , துபையிலும்  இந்த குழு ஒன்றிணைந்து செயல் பட்டால் இன்ஷா அல்லாஹ் நம்மால் 
ஒரு தீர்வை எட்ட முடியும்.வெளிநாடுகளில் உள்ள நம் மக்கள்  தங்கள் அனுபவமிக்க கருத்துக்களாலும் ,
பொருளாதாரத்தாலும், உதவ வேண்டும். ஊரில் உள்ள  உறுப்பினர்கள் உடல் உழைப்பை  உண்மையாக 
தந்து  உதவினால்  நாமும் சாதிக்கலாம்.(இன்ஷா அல்லாஹ் ).
             நான் தெரிவித்துள்ள கருத்துக்களை போல் நம்மில் பலபேர் பல நல்ல கருத்துக்களை கொண்டிருக்கலாம் . அவற்றை அவர்கள்  பகிர்ந்து கொள்ள  வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள்.ஒன்றிணைவோம் வெற்றி நமதே.   
( இன்ஷா அல்லாஹ் - தொடரும் )            

y.Rafi Ahmad, B.sc ; D.pharm,

2 கருத்துகள்: