அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூரில் கடந்த சில நாட்களாக பிலால் பள்ளிவாசல் எதிரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அருகில் இருக்கும் சாக்கடை தண்ணீர் அடைத்து கொண்டு வெளியே வரும் அளவிற்கு உள்ளது. இந்த அடைப்பினால் தொற்று நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அருகில் பள்ளி கூடம் இருப்பதாலும் மாணவர்களுக்கு இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி வாசலுக்கு வரும் அத்தா மார்களும் இதை கண்டு ரொம்ப மன வேதனை அடைகிறார்கள். பேரூராட்சியும் ,வார்டு உறுப்பினறும் தூங்குகிறார்களா
என்று கூறுகின்றனர்.இந்த கழிவு நீரால் அந்த பக்கம் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் அருகில் கறி கடை மற்றும் டீ கடை உள்ளது.
தமிழகம் முலுவதும் டொங்கு பரவலாக பரவுவதால் உடனடியாக சம்மந்த பட்டவர்கள் இதில் கவணம் செலுத்துவார்களா?
உடனே இந்த வார்டு உறுப்பினர் இதற்கு தகுந்த முறையில் சுத்தம் செய்வாரா?
நமதுநிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக