Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 31 அக்டோபர், 2012

ஹாஜிகளுக்கு IFF தன்னார்வத் தொண்டர்களின் அபார சேவை!


மக்கா:IFF என்னும் இந்தியா ஃபிராட்டர்னிட்டி ஃபோரம் வருடா வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் ஹாஜிகளுக்கு தன்னலமற்ற தொண்டுகள் பல ஆற்றி வருகின்றது. இந்த வருடமும் அவர்களின் சேவை அபாரமாக இருந்தது. IFF தன்னார்வத் தொண்டர்கள் அரஃபாவிலும், முஸ்தலிபாவிலும், கூடார நகரமான மினாவிலும் பெரு வெள்ளமாகத் திரண்டு சென்ற ஹாஜிகளுக்கு இடைவிடாது சேவைகள் செய்தனர். இது ஹாஜிகளுக்கு மிகுந்த உதவியாகவும், நிவாரணமாகவும் இருந்தது.

நமதூரில் தொடர்ச்சியான மழை!

நமதூரில் தொடர்ச்சியான மழை!

வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், நமதூரில் நேற்று காலை 10 மணி முதல் பரவலாக மழை பொலிந்து கொண்டிருக்கிறது. இந்த மழை இரவு முழுவதும் தூறிக்கொண்டே இருந்ததோடு, இன்றும் மழை தொடர்ச்சியாக பொலிந்துகொண்டுள்ளது.. இது புயல் சின்னமாக உருவெடுத்து மழை தீவிரம் அடைவதால், இன்று பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடு உட்பட

செவ்வாய், 30 அக்டோபர், 2012

நமதூர் செய்தி எதிரொலியா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூர் செய்தி எதிரொலியா?

கடந்த 4 நாட்களுக்கு முன் நமதூரில் பேருந்து நிலையம் அருகில் ஆற்றங்கரை தூய்மை செய்யும் பணி துரிதமாக நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சென்றுவரும் மக்களுக்கு சற்று சுகாதாரமாக இருந்து வருகிறது.  இது போன்று மாட்டுப்பாலம் அருகிலும் சுத்தம் செய்துள்ளனர். நமது ஜமாத்தார்களால் ஆதரவோடு வெற்றி பெற்ற பேருராட்சி து.தலைவர் இப்படிப்பட்ட காரியங்களில் கலம் இரங்குவது

ரிஹாப் மூலம் 25 ஆயிரம் குடும்பத்தினருக்கு குர்பானி இறைச்சி விநியோகம்!


புதுடெல்லி:அஸ்ஸாம் மாநிலத்தில் நிகழ்ந்த இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமைந்தது குர்பானி இறைச்சி. தேச முழுவதும் ஈதுல் அழ்ஹா என்று அழைக்கப்படும் தியாகத்திருநாளில் குர்பானி கொடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட இறைச்சிகள் அடங்கிய பொட்டலங்களை ரிஹாப் இந்தியா பவுண்டேசன் விநியோகித்தது.

திங்கள், 29 அக்டோபர், 2012

PFI மாநாடு


PFI மாநாடு 
அப்பாவி இஸ்லாமியர்கள் மீது அநீதி செலுத்தும், பாசிச வெறிபிடித்த ஆட்சியாளர்களிடம் இருந்து நீதத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பாபுலர்

துண்டு பிரசுகம்.

துண்டு பிரசுகம்.

வட்டி ஒழிப்பை பற்றி தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் அறிவிக்கப்பட்ட துண்டு பிரசுகம் செய்யப்பட்டது.
அல்லாஹ் தடைசெய்த வட்டியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால், இதில்

உங்கள் நிலை என்ன? தெர்யுமா?

கனிமொழிக்கு ஏற்பட்டதுபோல் உங்களுக்கு ஏற்பட்டால்! உங்கள் நிலை என்ன?

நமதூரில் பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பாக தற்காலிகமாக ஒரு புதிய விளம்பரப்பலகை அமைத்துள்ளனர். இதில் நமதூரில் இருந்து ரசூல் அஹமது என்பவரை, பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டமைக்கு திமுக விற்கு நன்றி பாராட்டும் வகையில் இதை வைத்துள்ளனர்.
ஒன்றை மட்டும் நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள்! நீங்கள் எவ்வளவுதான்

சனி, 27 அக்டோபர், 2012

குறும்படம்!

ஒரு துளிக் கடல் (முஹம்மத்(ஸல்) வாழ்வினை அறிமுகப்படுத்தும் குறும்படம்)

இப்படி ஒரு அறிவு சார்ந்த படம் வெளிவந்துக்கொண்டிருக்கும்  தருணத்தில் நாமதூர் இளைஞர்கள் சிலர் தங்களுடைய அறிவினை தவறாக பயன்படுத்தும் விதமாக ஒருவன் ஒருவளை இழுத்துக்கொண்டு ஓடுவதை போல் காட்சி

நமதூரில் பக்ரித் பெருநாள் தொழுகை

நமதூரில் பக்ரித் பெருநாள் தொழுகை
நமதூர் மக்கள் அனைவருக்கும் ஈத் பெருநாள் நல்வாழ்துக்களை தெரிவிப்பதிலே நமது இணையதள நிருபர்கள் சார்பாக கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமதூரில் பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் வழக்கம் போல் உள்ள நான்கு ஜமாத்தார்கள் அவர்களுக்கு உரிதான இடத்தில் தொழுகை நடத்தினார்கள். இதில் தாருஸ்ஸலாம் தவ்ஹித் ஜமாத்தார்கள் மட்டும் மாறாக ஜமாலிநகர் பிரதான

வெள்ளி, 26 அக்டோபர், 2012

வளைகுடா நாடுகளில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்! – துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!


இறைத்தூதர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அரும் தியாகத்தை நினைவுகூரும் ஈதுல் அழ்ஹா – பக்ரீத் பண்டிகை இன்று அரபுலகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா ஆகிய இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது..

வியாழன், 25 அக்டோபர், 2012

துபாயில் வரும் 27ம் தேதி சமூக நல்லிணக்க நிகழ்ச்சி


அனைத்து சமுதாய மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் வரும் 27ம் தேதி மாலை 6.30க்கு சமூக நல்லிணக்க நிகழ்ச்சி துபாயில் நடைபெற உள்ளது. இதில் முஸ்லிம் அல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களை குறித்தும் உள்ள சந்தேகங்களை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் கேள்வி-பதில் நிகழ்ச்சியாக நடைபெறும்.
சவுதி அரேபியாவில் இருந்து வரும் அப்சலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு இறைவேதம், இறைத்தூதர் வாழ்வில் உள்ள சான்றுகளை அடிப்படையாக கொண்டு பதிலளிக்க உள்ளார்.

Youtube ஐ போன்று வெளிவந்துள்ளது


Youtube ஐ போன்று வெளிவந்துள்ளது


வெளிவந்து விட்டது ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம். அல்ஹம்துலில்லாஹ்

இதில் நேயர்களுக்கு தேவையான ஏரளாமான வசதிகளை இடம் பெறச் செய்துள்ளோம்.

குறிப்பாக,

இதில் இடம் பெறும் வீடியோக்களை கணிணி , ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனிலும் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு மணி நேர வீடியோவில் நேயர்கள் தங்களுக்கு தேவைான பகுதியை எளிதில் பார்க்கலாம் அந்த பகுதி டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க தேவையில்லை.

இரண்டுவருட பாவங்கள் மன்னிக்கப்பட-ஒருநாள் நோன்பு!


அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட அடியார்களை அல்லாஹ் சொர்கத்தில் சேர்க்கும் பொருட்டு சின்ன சின்ன அமல்களுக்கும் கணக்கிலடங்கா நன்மைகளை அள்ளித்தருகிறான். இதுபோக மெகா ஜாக்பாட் பரிசுகளை தரக்கூடிய அமல்களை தனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள மூலம் தன்னுடைய அடியார்களுக்கு அருளியுள்ளான்.
அப்படிப்பட்ட மகத்தான அமல்தான் அரஃபாநோன்பு. இந்த நோன்பை பற்றி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ''நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள்.'' (ஆதாரம்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
فقد ورد عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة فقال : " يكفر السنة الماضية والسنة القابلة " رواه مسلم

புதன், 24 அக்டோபர், 2012

கணக்கெடுப்பின் முடிவு.....


நமது இணையதளத்தின் மூலம் கணக்கெடுப்பின் நிலவரம்.
நாம் கடந்த மாதத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தடையாக இருப்பவர்கள் யார் என்று வினா எழுப்பி இருந்தோம். அதற்க்கான முடிவை கீழே அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுடைய தனிப்பட்ட முடிவல்ல! நமது ஒட்டுமொத்த முடிவும் அதுதான். இதன் மூலம் இனிவரும் காலங்களில் நம்மை நாம் சரி செய்துக்கொண்டு, நம்முடைய தவறை, குரோத மணப்பான்மை இல்லாமல் திருத்தினால் மட்டுமே இதிலும், மற்ற அனைத்து விசயங்களிலும் வெற்றி அடைய முடியும். 

நமதூரில் இணைகற்பிக்கும் ஆயுத பூஜை!

நமதூரில் இணைகற்பிக்கும் ஆயுத பூஜை!
நமதூரில் கடந்த சில வருடங்களாகவே ஆயுத பூஜை என்றபெயரில் இஸ்லாமியர்களுக்கு உட்பட்ட இடத்திலும், பொருளிலும் இது மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஊடுருவி வருகிறதை யாராலும் மறுக்கமுடியாது! இதில் வயதான ஒருவர் கூறுகையில் புது வீட்ல நட மவுலோது கூட ஓதல இவனோல அதுக்குள்ளோ பூஜா பண்றாங்க!  இவர்கூரியது தவறாக இருந்தாலும்  நமக்கும், காபிர்களுக்கும் ஒத்துவராது என்றுதான் அவர்களுக்கும் புலப்படுகிறது.  அதற்காக இவர் கூறியது சரியென்று கூறவில்லை.

தீன் (வீண்) இயக்கம்...


உங்களுக்கு தீன் இயக்கம் என்று பெயர் வைத்தது  யார்?
உங்களுக்கு யார் தீன் இயக்கம் என்று பெயர் வைத்தது. அவர்கள் இருந்தார்கள் என்றால் , நிச்சயமாக இதை கலைத்து விடட்டும். நடிகன் பார்த்திபன் வரான் , பரதேசிவறான், என்று அந்த கூத்தாடிக்காக நம்முடைய பொருளாதாரத்தை செலவுசெயும் விதமாக விளம்பரம் செய்து இருகிறீர்கள். உங்களை நமதூரில் இருந்து எதற்காக நியமித்து இருந்தார்கள் என்பதை மறந்து விட்டீர்களா? நமதூர் நலனுக்காகவும், வரக்கூடிய தலைமுறைகளுக்காகவும், ஏதாவது நல்லது செய்தால் செயுங்கள், அப்படி இல்லையென்றால் தீன்

வடிகால் வெட்டிவிடுவார்களா ?


வடிகால் வெட்டிவிடுவார்களா ?
நமதூரில் கடந்த 5,6 நாட்களாக அடை மழை பொழிந்ததின் காரணமாக நமதூர் தெருக்களில் தண்ணீர் குட்டை தேங்கி கிடக்கும் நிலையை பார்க்கமுடிகிறது. இதனால் தமிழகத்தில் அதிகமாக பரவிவரும் விஷக்காய்ச்சல் பரவவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த வாடு கவுசிளர்கள் சரியான

செவ்வாய், 23 அக்டோபர், 2012

டெங்கு காய்ச்சல் : சில தகவல்கள்


உலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயே டெங்கு காய்ச்சல். கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் (EPIDEMICS) அதிகரித்துள்ளது. உலகம் முழுதும் சுமார் 2500 மில்லியன் மக்கள் டெங்கு கொள்ளை காய்ச்சலின் பாதிப்பு வளையத்திற்குள் வாழுகின்றனர். ஆண்டுக்கு 50 மில்லியன் மக்களை டெங்கு தாக்குகிறது.
டெங்கு காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது?
டெங்கு 1, 2, 3, 4 என 4 வகை வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் இது. எடியஸ் எஜிப்டிவகைக் கொசுக்களால் இது பரவுகிறது. கொசு கடித்த 5, 6 நாட்களில் காய்ச்சல் வருகிறது.

நடு ரோட்டில் பூசணிக்காய் உடைக்கலாம்; சிலைகளை கரைத்து நீர் நிலைகளை "மாசு" படுத்தலாம்; குர்பானி மட்டும் கூடாதா?


நடு ரோட்டில் பூசணிக்காயை உடைத்து போட்டு விபத்துக்கள் ஏற்படுத்தும் செயலுக்கும், ரசாயன பூச்சுக்களை கொண்ட விநாயகர் சிலைகளை கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைத்து மாசு ஏற்படுத்தும் செயலுக்கும்,
கட்டுப்பாடில்லாமல் பட்டாசுக்களை வெடித்து இதய நோயாளிகளுக்கும், "செவிப்புலன்"களுக்கும் பாதிப்பை உண்டாக்கலாம், ஆனால், மனிதர்கள் புசிக்க  இயற்கையின் வரமாக அமைந்துள்ள ஆடு மாடு போன்ற பிராணிகளை அறுத்து பலியிடும் "குர்பானி"க்குத்தான் எத்தனை தடைகள்? என்று தீரும் இந்த வேதனை?.

திங்கள், 22 அக்டோபர், 2012

“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக


புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதிலிருந்தும் ஹாஜிகள் மக்கா, நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர்.

இதோ இன்னும் சில தினங்களில்


லப்பைக்..... அல்லாஹும்ம லப்பைக்..
லப்பைக்.......லாஷரீகலக லப்பைக் .....
இன்னல் ஹம்த, வன்னி'மத, லகவல் முல்க் ......
லா ஷரீகலக்..


எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ 758 )

நமதூர் நமது உரிமை....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த ஞாயிற்று கிழமை 21.10.2012 அன்று நமதூரில் வாக்காளர் அட்டை திருத்தம் , பெயர் சேர்த்தல் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை திருத்தம் செய்து கொண்டனர். 

இதோ போல் அடுத்த வாரமும் 28.10.2012 ஞாயிற்று கிழமை இந்த பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தொரிவித்தனர்.இதில் பொது மக்கள்

சட்டி கட்டுரையின் விளக்கம்....

சட்டி கட்டுரையின் விளக்கம்
இந்த செய்தியை வெளியட முக்கிய காரணம் என்னவென்றால், மற்றவர்களை தவறாக நினைக்க கூடாது என்பதற்காக  தான். இப்படிப்பட்ட சிந்தனையில் உள்ளவர்கள், இவர்கள் இல்லாத வேறு அமைப்பில் இருப்பவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்று பார்ப்பதே பிழைப்பாக வைத்துக்கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக நோட்டிஸ்சில் பெயர் தவறாக வந்தாலும் சரி அதற்கும் இவர்கள் கிண்டல் அடிப்பதும் அதை

இயற்க்கை மருத்துவம்


இயற்க்கை மருத்துவம்
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!

சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....


பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

வேறு நாளில் கலந்தாய்வு , SDPI மற்றும் மமக கோரிக்கைக்கு பல்கலைகழக நிர்வாகம் பதில்


பக்ரித் பெருநாள் தினத்தில் பி.எட் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டு இருந்ததை தள்ளிவைக்க வலியுறுத்தி SDPI மாநில தலைவர் K K S M தெஹ்லான் பாகவி தமிழக முதல்வர் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் கோரிக்கை விடுத்தார்
இது சம்பந்தமாக SDPI தலைமையகத்தை தொடர்பு கொண்டு பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி துரையின் துணை இயக்குனர் ரவிச்சந்திரன் ,நாங்கள் கலந்தாய்வு தேதியை முடிவு செய்யும் போது காலண்டரை பார்த்து தான் முடிவு செய்தோம் ,காலண்டரில் 26 ஆம் தேதி என்று தான் போடப்பட்டு இருந்தது

சேது சமுத்திர திட்டம் தேவையில்லை - தமிழக அரசின் நிலைபாடு


"சேது சமுத்திர திட்டம் தேவையில்லை'' என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது த‌மிழக‌த்‌தி‌ல் அ‌த்‌தி‌ட்ட‌த்தை ஆத‌ரி‌க்கு‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் கடு‌ம் கோப‌த்‌‌தி‌ல் உ‌ள்ளன‌ர்.

இது தொடர்பாக தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி சார்பில் உ‌ச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து‌ள்ள மனு‌வி‌ல், ராமர் பாலத்துக்கு சேதம் விளைவிக்காமல் தனுஷ்கோடி கரையை உடைத்து சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டத்தை "4ஏ' தடத்தில் நிறைவேற்றுவது சாத்தியமற்றது என்று நிபுணர் குழு கூறியள்ளதை தமிழக அரசும் ஏற்றுக் கொள்கிறது.

நமதூரில் இன்று நான்காவது நாளாக மழை

 நான்காவது நாளாக மழை 

நமதூரில் இன்று நான்காவது நாளாக  21-10-10 மழை நீடித்தது வருகிறது. இதனால் சாலைகளிலும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சிறியவர்கள் தெருவிற்கு விளையாட போகாமல் வீட்டிலேயே அமர்ந்திருப்பது அவர்களிடத்தில் சோர்வை அதிகரிக்கிறது. இந்த சூழ்நிலையில் குழந்தைகளை கவனமாக

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்....

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்....

நமதூரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க நமதூர் ஆரம்ப சுகாதார அரசு மருத்துவமனையும் மற்றும் தமுமுக இணைந்து இளைகர்கள் விழிப்புணர்வு

மற்றவர்கள் உடைத்தால்பொன்சட்டி! தவ்ஹீத் ஜமாத் உடைத்தால் அது மண்சட்டி!!

கருப்பு ஆடுகள் செய்யும் தவறு
இன்று நமதூர் மக்களின் மட்டுமில்லாது வெளியூர் காரர்களின் முகநூலை திறந்தாள், அநியாயத்தை சுட்டிகாமிக்கிறோம் என்றபெயரில் மற்றவர்களை திட்டியே தன்னுடைய முகநூலை பிரபலபடுத்தும் சில விசமிகளை இதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
முஸ்லிமான ஒருவனோ அல்லது ஒரு முஸ்லிமான அமைப்பில் உள்ள ஒருசிலரோ தவறு செய்துவிட்டால் அவர்களுக்கு அழகிய முறையில் தவறை சுட்டிகாட்டுங்கள் மாறாக நீங்கள் அறிவாளியாக மக்களிடம் காட்டுவதற்காக அவர்களை

வெள்ளி, 19 அக்டோபர், 2012

SDPI சார்பாக பெரம்பலூரில் மது ஒழிப்பு

SDPI  சார்பாக பெரம்பலூரில் மது ஒழிப்பு....

SDPI  சார்பாக பெரம்பலூரில் மது ஒழிப்பு R.D.O. அலுவலகம்  முற்றுகை போராட்டம் 17.10.2012 ல் நடைபெற்றது.

போராட்டம் காலை 11 மணிக்கு உழவர் சந்தை அருகில் பேரணி தொடங்கியது.
மாவட்ட தலைவர் டாக்டர் முஹம்மது ரபீக் தலைமையில்  நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நமதூரில் இருந்தும் அக்கட்சி நிருவாகிகள் கலந்துக்கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவர்களையும் காவல் துறையினர் கைது செய்து மாலை 5 மணியளவில் விடுவித்தனர்.

நமதூரில் இரண்டாவது நாளாக மழை

நமதூரில் இரண்டாவது  நாளாக மழை
அல்ஹம்து லில்லாஹ் நமதூரில் இரண்டாவது  நாளாக 19-10-12 மழை பொழிந்து கொண்டுள்ளது. இதனால் நமதூர் ஊட்டி குளுறை மிஞ்சும் அளவிற்கு குளுமை அதிகமாக உள்ளது.

கடந்த சில நாட்களாக நமதூரில் வெயிலின் தாக்கம் அதிகமாகி சூடு அதிகமாக உள்ள இந்த

புதன், 17 அக்டோபர், 2012

பண்டிகைக்காலச் சலுகை அறிவிப்புகள்....


ணிகத்தில், வணிகர்களின் மக்கள் ஈர்ப்புத் தூண்டில் ஒன்று உண்டு - ‘பண்டிகைக்காலச் சிறப்புச் சலுகை தள்ளுபடிகள்’. இன, மொழி பேதமின்றி உலகமெங்கும் இது பொது. தமிழகத்தில் தலைநகர் சென்னை மாநகரிலே ஆடித் தள்ளுபடி, தீபாவளி விசேஷத் தள்ளுபடி, ரம்‘ஜா’ன் தள்ளுபடி என்று வஞ்சனையில்லாமல் ஏதாவது விசேஷம் அடிக்கடி வந்துவிடுகின்றது. இவ்வாறு சீஸனில் அறிவிக்கப்படும் தள்ளுபடி சலுகை விற்பனை விலையில் இதர நாட்களைவிட எந்தளவு மக்களுக்குச் சகாயம் உள்ளது என்பதைக் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு ஏதாவது ஒரு நிறுவனம் புள்ளிவிவரம் எடுத்துச் சொன்னால் தள்ளுபடி விலையில் அவர்களுக்கு ஒரு கைக்குட்டை பரிசளிக்கலாம்.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

HR-யை கவரும் Curriculam Vitae தயாரிக்க வேண்டுமா?


எந்தவொரு வேலைக்கு விண்ணப்பிப்பதற்கும் Curriculum Vitae மிக அவசியம்.
தற்போதைய தொழில்நுட்ப உலகில் வசீகரமான, பார்த்தவுடன் பிடிக்கின்ற Curriculum Vitae-யே வேலைவாய்ப்பை வழங்கும் எந்தவொரு நிறுவனத்தினாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில் அநேகமானவர்கள் மைக்ரோசொப்ட்டின் Word மென்பொருளின் உதவியுடன் தமக்குரிய Curriculum Vitae-யினை தயாரிக்கின்ற போதிலும், சில சமயங்களில் Curriculum Vitae-யின் வடிவம், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்பனவற்றை தெரியாத நேரத்தில் இணையத்தளங்கள் சில வழிகாட்டியாக அமைகின்றன.

இந்த நிலைமைக்கு காரணம் யார்?

மண்ணென்யை வாங்க இரண்டு நாள் வரிசையா?
நமதூரில் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய பிரச்சணையாக திகழ்வது இரண்டு விசயம். அதில் ஒன்று சிலின்டர் மற்றொன்று ரேசன் கடை வினியோகம்.
சிலின்டர் பிரச்சணைகளை நாம் அறிந்ததே! ரேசன் கடை பிரச்சணை இன்று சொல்லமுடியாமல் அளவு தலைவிரித்தாடுகிறது.

நமதூரில் இன்று 4 ரேசன் கடைகள் உள்ளன. அதில் என்று மண்னென்னய் கொடுத்தாலும் அன்று நிச்சயம் நமக்குள் ஓர் சண்டையாவது இருக்கும். காரணம் எல்லா ஊர்களிலும் உள்ளது போல், இரண்டு மூன்று காடுகள் கொடு்த்து வாங்க நினைப்பது, நடுவில் புகுந்து சாமான்கள் வாங்க நினைப்பது. போன்ற காரணங்களினால் சண்டை சர்ச்சரவு

சவூதியில் உள்ளத்தை உருக்கிய சம்பவம்!!


சவூதியில் உள்ளத்தை உருக்கிய சம்பவம்…………..!!
சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சியில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் தன் ஒரே மகனைக் கொன்ற இளைஞனை எவ்வித நிபந்தனையுமின்றி, இறைப் பொருத்தம் வேண்டி மன்னிப்பதாக அன்னையொருவர் கூறியுள்ளார்.
இத்தனைக்கும், ஏழையான அந்தத் தாய் தன்னுடைய மன்னிப்பிற்காக வழங்கப்பட முன்வந்த பல இலட்சம் ரியால்கள் + சொத்துகளை இரத்தத் தொகையாகப் பெறுவதற்கும் மறுத்துவிட்டார். 
மர்ஸூகா அல் பிலேவி என்பது அந்தத் தாயின் பெயர். விதவையான

டெங்கு காய்ச்சல் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை!


டெங்கு காய்ச்சல் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது: 


டெங்கு காய்ச்சல் தொடர்பாக பத்திரிகைகளில் பல்வேறு செய்திகள் வெளி வந்துள்ள நிலையில், இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (15.10.2012) எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

திங்கள், 15 அக்டோபர், 2012

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இரு சக்கர வாகன ஓட்டிகள் வரும் 22ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்



பெரம்பலூர் மாவட்டத்தில் இரு 
சக்கர வாகன ஓட்டிகள் வரும் 
22ம் தேதி முதல் கட்டாயம் 
ஹெல்மெட் அணிய வேண்டும் 
என்று எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

பெரம்பலூர் எஸ்பி ராஜசேகரன் 
நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:


ஞாயிறு, 14 அக்டோபர், 2012

கறிவேப்பிலை-புற்று நோய்க்கு நல்ல மருந்து


உணவில் கறிவேப்பிலையை பார்த்தாலே, பலருக்கும் வெறுப்பாக தான் இருக்கும். அதை தூக்கி எறிந்து விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்.
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி இந்தியாவில் உள்ள சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகம், கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடுயூட் ஆப் கெமிகல் பயாலஜி மற்றும் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

Labbaikudikadu + MM Gas ஏஜென்சி


நமதூரில் கடந்த வெள்ளிகிழமை 12/10/12  அன்று வழக்கம் போல் உள்ள சிலிண்டர் பிரச்சனை தலைதூக்கியது.
இதனால் நமதூரில் இருந்து தினமும் பெண்கள் உட்பட 30 முதல் 40 பேர் பெரம்பலூர் சென்று MM  Gas ஏஜென்சி அணுகி தங்களுடைய பதிவுகளை செய்து வருகின்றனர். நமதூரில் இருந்து phone செய்தால் தொடர்பு கிடைக்காத காரணத்தினாலும், சரியாக பதிவு செய்யாததாலும்  இந்த நிலை நீடித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க பதிவு செய்தால்

சிறைவாசிகள் விடுதலைக் கோரி....


அரசியல் சிறைவாசிகள் விடுதலைக் கோரிக்கையும் சிறுஎரும்பு
கடித்த அசைவுகூட இல்லாத எருமை மாட்டு அரசியலும்

தாய்த் தமிழகத்தில், தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடியதால் ஒரு பெரும் பிரிவினர் நீண்ட காலமாக சிறைக்கொட்டடிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பெரும்பான்மையான இயக்கங்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஆம் அவர்கள்தான் முஸ்லீம்கள்.
இந்து மதவெறி அமைப்புகளின் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு தமிழகத்தின் தொழில்வளங்களையும், கனிம வளங்களையும் சூறையாடிக் கொண்டிருக்கும் வடநாட்டு பார்ப்பனிய, பனியாக்களும், மார்வாடிகளும் மதக்கலவரங்களை மூட்டி இசுலாமியர்களை குறிவைத்து வேட்டையாடினர்.
இசுலாமிய மக்கள் தங்கள் உயிர்களைக் காக்க மட்டும் போராடவில்லை. தமிழ்நாட்டின் தொழில்களையும், வளங்களையும் பாதுகாக்கவும் சேர்த்துதான் போராடினார்கள். தமிழ்நாட்டைக் காக்க இம் மண்ணின் மைந்தர்களான இசுலாமியர்கள் இயல்பாக போராடினார்கள். அவர்களின் தியாகங்கள் ஈடு இணையற்றவை.

அப்ரண்டீஸ் பயிற்சிக்கு அழைப்பு



எம்.ஆர்.எஃப்., டயர் தொழிற்சாலை அப்ரண்டீஸ் பயிற்சிக்கு அழைப்பு (Dinamalam)

பெரம்பலூர்: "எம்.ஆர்.எஃப்., டயர் தொழிற்சாலையில் தொழில் பழகுனராக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்' என, பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலையில் தொழில் பழகுனராக பயிற்சி பெற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தங்களது பெயரை பதிவு செய்ய, கலெக்டர் அலுவலகத்தில், புது வாழ்வு திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி அக்., 9ம் தேதி முதல், அக்., 17ம் தேதி வரை, காலை, 10.30 முதல், மாலை, 4 மணி வரை, பெயர் பதிவு நடக்கிறது. பதிவு செய்ய கல்வித்தகுதி, ஜாதி சான்றிதழ், இருப்பிடச்சான்று மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். தகுதியான நபர்களுக்கு அக்., 20ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது.தொழில் பழகுனராக தேர்வு பெறும் நபர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு உதவித்தொகையாக, 1,000 ரூபாய் மற்றும் இலவச பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். பயிற்சி முடிவு பெற்றதும், எம்.ஆர்.எப்., நிறுவனத்தில் பழகுனராக மூன்றாண்டுகள் தொடரலாம். அதன் பின் தகுதி அடிப்படையில் பணியாளராக சேர்த்துக்கொள்ளப்படுவர்.பயிற்சிக்கு, 18 முதல், 25 வயது வரை, உள்ள ஆண்கள், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி மற்றும் ப்ளஸ் 2 தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் மற்றும், ஓராண்டு ஐ.டி.ஐ., படிப்பு, பட்டயப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சமாக, ஐந்தடி, ஆறு அங்குலம் உயரமும், 50 கிலோ எடை இருக்க வேண்டும். தொழில் பழகுனர் பயிற்சி காலம், மூன்றாண்டுகள் ஆகும்.பயிற்சி காலத்தில் உதவித் தொகையாக, முதல் ஆண்டில் மாதம், 5,460 ரூபாய் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 94450-43119 என்ற மொபைலில் தொடர்பு கொள்ளலாம்.

லப்பைகுடிக்காடா? லப்பை (மது) க்காடா?


அன்புள்ள லப்பைகுடிகாட்டு மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
நமதூரில் சில வருடங்களாக சில இளைங்கர்களிடம் குடிப்பழக்கம் அதிகரித்து அதற்க்கு அடிமையாகி வரும் நிலை நமதூரில் பரவலாக வருகிறது. இதற்க்கு ஊக்குவிக்கும் விதமாக சில அரசியல் கட்சிகளும் பார்ட்டி என்ற பெயரில் சில இளைகர்களை குடிபோதைக்கு ஆளாக்கி அவர்களை கெடுத்து வருவது தாங்கள் அறிந்ததே!

இன்று நமதூரிலே பெண்கள் மேல்நிலை பள்ளி அருகில் உள்ள ஒரு சிறிய

பிஜேபி மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும் முஸ்லீம்களுக்கு எதிரானவை தான் : நீதிபதி சச்சார் பேட்டி



முஸ்லீம்களின் பொருளாதார, சமூக மற்றும் கல்வி நிலை குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் 2005ல் தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு முஸ்லீம்களின் நிலை குறித்து தெரிவித்த ஆய்வு முடிவுகள் முஸ்லீம்களின் பின் தங்கிய நிலையை தெளிவாக சுட்டி காட்டியது.

லக்னோவில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய அக்குழுவின் தலைவரான ராஜேந்தர் சச்சார் நிமேஷ் புலனாய்வு அறிக்கையை உ.பி அரசு உடனே வெளியிட வேண்டும் என்று கூறினார். 2007 ல் உத்தரபிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஆஸம்கரிலிருந்து காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காசிமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டது சம்பந்தமான உண்மை நிலையை அறிய அமைக்கப்பட்டது தான் நிமேஷ் கமிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

தொடர்கிறது தமிழக முஸ்லிம்களின் ஒற்றுமை! சிறை வாசிகளுக்காக ஒன்றினையும் இயக்கங்கள்!



பொதுவான பிரச்சனைகளில் இந்த சமுதாயம் ஒன்றிணையாதா? என ஏங்கிக் கொண்டிருந்த மக்களின் மனக் குறைகளை போக்கும்  விதமாகவும்  சத்தியத்தில் உறுதி சமுகத்தில் நல்லிணக்கம் எனும்  இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கை முழக்கத்தை  நடைமுறைப் படுத்தும் விதமாகவும்,
முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம்
  கட்டாய திருமண சட்டம், காதியானிகள் பிரச்னை, திருமண வயது பிரச்னை, போன்ற பிரச்சனைகளில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றிணைந்து களம் கண் டன! [ TNTJ தவிர ] எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல்

வியாழன், 11 அக்டோபர், 2012

நமது இணையதளத்தின் மீளாய்வு...


அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ் )
வருகின்ற 13-10-2012 ஆம் தேதியோடு 7 ஆவது மாதத்திற்கு நமது Labbaikudikadunews இனையதளம் அடியெடுத்து வைப்பதின் காரணமாக  11-10-2012  நமது இணையதளத்தின் மீளாய்வு செய்யப்பட்டது. 
இதில் நமது தலைமை நிருபர் கிராத் ஓதி ஆரம்பம் செய்துவைத்தார். இதில்

நமதூரில் மின்வாரியம் முற்றுக்கை போராட்டம்.


நமதூரில் மின்வாரியம் முற்றுக்கை போராட்டம்.

வரலாறு காணாத மின்வெட்டை மற்றும்  சில கோரிக்கைகளையும் வலியுறுத்தி நமதூரில் மின்வாரியம் முற்றுக்கை போராட்டம் நடந்தது. இதில் சுமார் 50 போ் கலந்துக்கொண்டனர்.
இது போக ஊர் பொதுமக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில இளைஞர்கள்  தெரு தெருவாக சென்று போராட்டதிற்கு அழைப்பு விடுத்து வந்தனர். இதை காவல்துறைக்கு சிலர் தெரியப்படுத்தினர். பின்பு

மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்


மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில் மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம்.

மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.

ஆர்த்தி ராவ்வுக்கு நமது இணையதளத்தின் மூலம் அழைப்பு பணி


ஆர்த்தி ராவ்வுக்கு நமது இணையதளத்தின் மூலம் இஸ்லாமிய அழைப்பு பணி


இவர் யார் என்றால் நித்யானந்தா என்ற  சாமியார் வேடத்தில் போலியாக இந்த உலகத்தில் உலாவிவரும் காம அரக்கனால் சீரழிக்கப்பட்ட பெண்களில் இருவும் ஒருவர். இவர்தான் அந்த அயோக்கியனின் முத்திரையை கிழிக்கும் வண்ணம் அவனுடைய அறையில் ரகசிய பதிவு கேமரா வைத்தவர்.
மண அமைதி வேண்டும் என்று சென்ற இவரை கடவுள் பெயரை சொல்லி சீரழித்துவிட்டான். இறுதியாக செய்தியாளர்களிடம் இவர் பேசுகையில் கடவுளை மட்டுமே நம்ப வேண்டும்.' என்று கூறிய ஆர்த்தி ராவுக்கு நமது Labbaikudikadunews இணையதளத்தின் மூலம் ஓர் இறைவனை அறிமுகம் செய்கிறோம்.