பெரம்பலூர் மாவட்டத்தில் இரு
சக்கர வாகன ஓட்டிகள் வரும்
22ம் தேதி முதல் கட்டாயம்
ஹெல்மெட் அணிய வேண்டும்
என்று எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் எஸ்பி ராஜசேகரன்
நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
குறைத்து விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரு சக்கர வாகன விபத்துக்களில்
பலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவில் உயிரிழப்பு
ஏற்பட்டு வருகிறது.
நேற்று ஒரு நாள் மாவட்டம் முழுவதும் கால்துறையினர் திடீர் வாகன
தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் குடிபோதையில் வாகனம் ஒட்டிய
8 பேர், அதிக வேகத்தில் வந்த ஒருவர், முகப்பு விளக்கில் அதிக ஒளியுடன்
கூடிய பல்பு பொருத்தி இருந்த 79 வாகனங்கள், முகப்பு விளக்கு
இல்லாத 12 வாகனங்கள், ஹெல்மெட் அணியாமல் வந்த 12 பேர்,
சீருடை அணியாமல் வந்த 14 பேர், பர்மிட் இல்லாத வாகனம் ஓட்டிய
15 பேர், இதர பிரிவுகளில் 52 பேர் என மொத்தம் 250 பேர் மீது
வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனத்தை
இயக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்துக்களை
தடுத்து உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள்
அனை வரும் வரும் 22ம் தேதி முதல் ஹெல்மெட் அணி வது
கட்டாயமாக்கப்பட உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு அனைத்து
இரு சக்கர வாகன ஓட்டிகளும் கட் டாயம் ஹெல்மெட் அணிய
வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன
ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து, உடனடியாக அபராதம்
வசூலிக்கப்படுவதோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு எஸ்பி தெரிவித்தார்.