Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 1 அக்டோபர், 2012

பாஸ்போர்ட் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!


Hike In Indian Passport Fee
டெல்லி: நிர்வாகம், முதலீட்டு செலவு, கருவிகள் வாங்குதல், போலீசாருக்கு வழங்கப்படும் ஈட்டுத் தொகை, தபால் துறைக்கான கட்டணம், அச்சக செலவு, தகவல் தொழில்நுட்ப செலவு போன்றவை பெருமளவு அதிகரித்ததால், பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.  இதன்படி அப்புதிய விண்ணப் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதிய கட்டண விபரம்

பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் முறையில் விண்ணப்பம் செய்வதற்கான கட்டணம் 2500 ரூபாயில் இருந்து 3500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, கடைசியாக பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணம் 40 அமெரிக்க டாலர்களில் இருந்து 75 அமெரிக்க டாலர்களாகவும், 48 யுரோவில் இருந்து 60 யுரோக்களாகவும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக