திறக்கப்பட்ட கழிவறை... ஒரு குறிப்பு.
நமதூரில் சந்தை திடலின் ஓரமாக ஆற்றங்கரையை ஒட்டி நவீன கழிப்பிடம் திறக்கப்பட்டதை நாம் மூன்று நாட்களுக்கு முன் நமது இணையதளத்தின் மூலமாக வெளியிட்டு இருந்தோம். தற்போது அது திறந்த நிலையில் மக்கள் அதில் ஒருசிலர் வரபோக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதில் மாற்று திறநாளிகளுக்கும் தனியாக கழிவரைகட்டபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கழிவறைக்கு சென்று வர நமர் ஒன்றுக்கு ரூபாய் இரண்டு வீதம் வசூல் செய்யப் படுகின்றது. இதற்காக ஒரு ஆளையும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. சுகாதாரமும் சுத்தமும் ஒரு முஸ்லிமாகிய நாமே உணராமள் அதையும் அசுத்தம் செய்யம் விதமாக நடந்துக்கொண்டால், மற்றவர்களை குறைசொல்லி எந்த பயனும் இல்லை. எனவே அதன் சுற்றயுள்ள இடங்களில் கூட அசுத்தம் செய்யாமல் இருப்பது நமதுடைய கடமை என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக