Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 22 அக்டோபர், 2012

சட்டி கட்டுரையின் விளக்கம்....

சட்டி கட்டுரையின் விளக்கம்
இந்த செய்தியை வெளியட முக்கிய காரணம் என்னவென்றால், மற்றவர்களை தவறாக நினைக்க கூடாது என்பதற்காக  தான். இப்படிப்பட்ட சிந்தனையில் உள்ளவர்கள், இவர்கள் இல்லாத வேறு அமைப்பில் இருப்பவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்று பார்ப்பதே பிழைப்பாக வைத்துக்கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக நோட்டிஸ்சில் பெயர் தவறாக வந்தாலும் சரி அதற்கும் இவர்கள் கிண்டல் அடிப்பதும் அதை
பலர் விரும்புவதாக Like கொடுப்பதும் அந்த புகழ்ச்சிக்கு இவர்கள் ஆளாகிறார்கள். மற்றவர்கள் எப்படி தவருசெய்கிராகளோ! அதுபோல நீங்களும் தவறு செய்கிறீர்கள் ஏன் ஒருபடி மேல்கூட சொல்லலாம். ஆதாரம் நீங்கள் நோட்டிஸ்சில் தவறாக அடித்தது எங்களிடம் இருக்கிறது. இது அனைத்து உலகம் படைத்த அல்லாஹ்விற்கு தெரியும்.  இது தெரியாமல் செய்த தவறுதான், அதற்காக நாங்கள் இதை வெளியில் விட்டால் நம்முடைய சமுதாயத்தின் நிலைஎன்ன? இதைதான் இறைவன் நம்மிடம் எதிர்பார்கிரானா?
தவ்ஹீத் ஜமாத்தில் உள்ளவர்கள்  தாருஸ்ஸலாம் பழைய இமாம் போன்ற  ஒரு சில இமாம்களுக்கு இது சரியென்று பட்டது என்றால்! அதற்க்கு முழு உலகமும் தலையாட்ட வேண்டும் என்ற அவசியல் இல்லை ! ஏன் அந்த ஜமாத்தில் உள்ள தலைவராகட்டும், அதில் உள்ள மக்களாகட்டும் இதை ஒப்பு கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை! குறிப்பாக சொல்லபோனால் எங்களுடைய இந்த கருத்தைக்கூட இப்படிப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிருபந்தம் இல்லை!
இப்பொழுதும் கூறுகின்றோம் நாம் தவ்ஹீத் ஜமாத்தை குறைசொல்லவில்லை. அதில் உள்ள ஒருசிலர் செய்யும் தவறைத்தான் தவறு என்கின்றோம்.
நாம் தனிமனிதன் செய்யும் தவறை இதில் நாம் குறிப்பிடுவது தவறு. பலமுறை தனிமனிதர் செயும் தவறை நாம் மறைமுகமாக வெளீட்டு இருந்தோம். மாறாக அவர் சமுதாயதிற்கு தீங்கு விளைவிப்பாரேயானால்? அதனை சுட்டிக்காட்ட தயங்கியது இல்லை! தயங்க போவதும் இல்லை! ஏன் எங்கள் நிருபர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் யார்  செய்தாலும் சரி. சரியான நீதியை தான் இஸ்லாம் எங்களிடம் எதிர்பார்கிறது!.
நமது நிருபர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக