Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 11 அக்டோபர், 2012

நமது இணையதளத்தின் மீளாய்வு...


அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ் )
வருகின்ற 13-10-2012 ஆம் தேதியோடு 7 ஆவது மாதத்திற்கு நமது Labbaikudikadunews இனையதளம் அடியெடுத்து வைப்பதின் காரணமாக  11-10-2012  நமது இணையதளத்தின் மீளாய்வு செய்யப்பட்டது. 
இதில் நமது தலைமை நிருபர் கிராத் ஓதி ஆரம்பம் செய்துவைத்தார். இதில் இணை ஆசிரியர்கள், ஒருங்கிணப்பாளர், ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள நமது நிருபர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
கடந்த ஆறு மாத காலமாக நாம் பணியாற்றி வந்த நிகழ்வுகளையும், நிறை குறைகளையும் பற்றியும் மற்றும் வாசகர்களின் கருத்துக்களையும் இதில் கலந்தாய்வு செய்யப்பட்டது.
இந்த அமர்வு சுமார்  1 மணிநேரம் ஆலோசிக்கப்பட்டு, மேலும் இந்த பணியை இனிமேல் வரும் காலங்களில் எப்படி எடுத்து செல்வது என்பதை பற்றி நமது அமீரக நிருபர் விளக்கம் அளித்தார்.
இறுதியாக துஆ வோடு இந்த அமர்வு இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
இப்படிக்கு 
ஆசிரியர் குழுமம் 

2 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    7 வது மாதத்தில் அடி எடுத்து வைக்கும் நமதூர் செய்திக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதனுடைய வெற்றியே உங்களுடை நடுநிலையான (உள்ளதை உள்ளபடி ) செய்திகள் தான். இன்ஷா அல்லாஹ் உங்களுடைய இந்த பணி இன்னும் அணைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைய தூவா செய்வேமாக ஆமீன்....

    பதிலளிநீக்கு
  2. asalamu alaikum

    keep it up

    be bold to publish the news against anybody

    welldone

    zazakumuillah kahir

    பதிலளிநீக்கு