Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 4 அக்டோபர், 2012

பந்திகளின் முறைகளை மாற்றி அமைக்கப்படுமா ?


பந்திகளின் முறைகளை மாற்றி அமைக்கப்படுமா ?
பந்திகளின் முறைகளை மாற்றி அமைக்கப்படுமா ? என்று நமதூர் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புலம்பிக்கொண்டு இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. இதற்கான நமதூர் பந்தியில் இருந்து ஓர் அலசல் ரிப்போர்ட்...
நமதூர் பாரம்பரிய பந்தியாக பந்தியானத்தை மட்டுமே கையாண்ட நாம், டீசன்ட் மற்றும் வெளியூர் காரர்களுக்கு ஒத்துவராமை காரணத்தினால். நமதூரில் சில வருடங்களாகவே பிரியாணியை மட்டுமே பார்க்க முடிந்தது. பிறகு அது ஒருசிலருக்கு பாதிப்பு வரும் காரணத்தினால், சிறிது சைவ உணவும் ஏற்பாடு செய்து அது தனியாக சிலருக்கு பரிமாறி கொண்டும் வருகின்றனர்.
இப்பொழுது பிரியாணியை கூட ஓரம் கட்டும் அளவிற்கு சைவ உணவு மிஞ்சி வருகிறது. தற்போது பார்த்தால் சைவ உணவு இடத்தில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை கூட்டம் அலைமோதிக்கொண்டுள்ளது. இந்த சைவ உணவுக்கு கூட 3 அல்லது 4 பந்தி கழித்துதான் இடம் கிடைக்கிறது.  பெண்கள் , ஆண்கள் என இருவருமே சிறியவர்களை நீங்க எல்லாம் பிரியாணி போய் சாப்பிட வேண்டியதுதானே! என்று அவர்களை பாடாய் படுத்துகின்றனர். 
இது ஒருபுறம் இருக்க அசைவம் சாப்பிடும் மக்களிடம் கேட்டால் கரி துண்டு மட்டும் இல்லன்னா, நானும் சைவதுக்குதான் போய்டுவேன், என்று கூறுகிறார்கள்.
இதற்க்கு தீர்வுதான் என்ன என்று நமது நிருபர்கள் அலசி ஆராய்ந்து பார்க்கும் பொழுது..... அசைவம் அதாவது பிரியாணியோ! அல்லது குஸ்காவோ! முதலில் இனிப்பு வைப்பதுபோல ஒரு சிறிய துண்டு கறியோடு ஒரு சிறிய கோப்பையில் வைத்துவிட்டால். பிறகு சைவத்தை கொண்டு பரிமாறலாம். தனது திருமணதிற்கு வருபவர்கள் நன்றாக சாப்பிடவேண்டும் என்றால் இதுதான் சரியான வழி என்று நமக்கு புலப்படுகிறது. இது ஏழை எளிய மக்களுக்கு பொருந்தாது.  விரும்பினால் அவர்கள் வசதிக்கு ஏற்றவாறு ( வெளியூர் வாசிகள் சிலருக்கு பந்தியானம் பிடிக்காமல் போகும் காரணத்தினால்) பந்தியானமும் ரசமும் போட்டாலே போதும்.
இப்படி காலங்கள் மாரிவருவதினால் இன்று  " எல்ல வூட்டுக்கும் எல்லாருக்கும் சொர்சொல்லிருக்கு! எல்லாம் மதியம் 1 மணிக்கு சாப்பிட வந்துருங்க! " என்ற வார்த்தையே அழிந்ததைதான் நமது கலாச்சாரம் இந்த தலைமுறைக்கு சுட்டி காட்டுகிறது. எப்படி காலங்கள் மாறிவிட்டது என்பதை பார்த்தீர்களா?
நமது நிருபர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக