நமதூரில் தொடர்ச்சியான மழை!
வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், நமதூரில் நேற்று காலை 10 மணி முதல் பரவலாக மழை பொலிந்து கொண்டிருக்கிறது. இந்த மழை இரவு முழுவதும் தூறிக்கொண்டே இருந்ததோடு, இன்றும் மழை தொடர்ச்சியாக பொலிந்துகொண்டுள்ளது.. இது புயல் சின்னமாக உருவெடுத்து மழை தீவிரம் அடைவதால், இன்று பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடு உட்பட அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.
இதனால் நமதூர் சாலைகளிலும், தெருக்களிலும், பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டுள்ளது. நமதூர் ஆற்றிலும், வாய்க்காலிலும் தண்ணீர் வரப்பை எதிர்நோக்கியவர்களாக பொதுமக்களோடு நமது நிருபர்.
சிறுவர் சிறுமியர்களுக்கு பள்ளிகள் விடுமுறை காரணமாக தெருக்களில் அவர்கள் விளையாட முடியவில்லை என்றாலும், ஆங்காங்கே திண்ணைகளில் அவர்கள் விளையாடி கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது கடந்த காலத்திற்கு கொண்டுசெல்கிறது நம்முடைய நினைவுகள்....
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக