Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 24 அக்டோபர், 2012

நமதூரில் இணைகற்பிக்கும் ஆயுத பூஜை!

நமதூரில் இணைகற்பிக்கும் ஆயுத பூஜை!
நமதூரில் கடந்த சில வருடங்களாகவே ஆயுத பூஜை என்றபெயரில் இஸ்லாமியர்களுக்கு உட்பட்ட இடத்திலும், பொருளிலும் இது மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஊடுருவி வருகிறதை யாராலும் மறுக்கமுடியாது! இதில் வயதான ஒருவர் கூறுகையில் புது வீட்ல நட மவுலோது கூட ஓதல இவனோல அதுக்குள்ளோ பூஜா பண்றாங்க!  இவர்கூரியது தவறாக இருந்தாலும்  நமக்கும், காபிர்களுக்கும் ஒத்துவராது என்றுதான் அவர்களுக்கும் புலப்படுகிறது.  அதற்காக இவர் கூறியது சரியென்று கூறவில்லை.

நமதூரில் ஒரு முஸ்லிம் வாகனம் வைத்திருந்து அதை ஒரு காபிர் ஓட்டுனராக இருந்தால், அந்த வாகனத்திற்கு பூஜை செய்வது அந்த ஓட்டுனருக்கு வழக்கமாகி விட்டது. இதை அந்த வாக உரிமையாளர் சிறிதும் கண்ண்டிப்பதில்லை. என்னுடைய வாகனம் என்னை படைத்த இறைவன் எனக்கு கொடுத்தது, இதை ஒருபோதும் நான் இணை கர்பித்தலாக ஆக்கமாட்டேன்! என்று கூறியிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வாகனத்தில் இது என் இறைவனின் அருட்கொடை என்று விளம்பரமாக மட்டும் எழுதி உள்ளது இறைவன் ஒருபோதும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டான்.
அதுபோல் நமதூர் மக்கள் கட்டும் வீடுகளிலும் இது ஊடுருவி வருகிறது. அப்படி பட்ட கொத்தனார், மேஸ்திரி இடம் கூறிவிடவேண்டும். இது என்னுடைய வீடு என்னுடைய ரப்பு எனக்கு அருட்கொடையாக வழங்கியது. இதில் என்னுடைய இறைவனின் திருநாமம்தான் ஒலிக்கவேண்டும். அவனுக்கு இணையாக எந்த ஒரு காரியத்தையும் நான் இதில் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிடவேண்டும்.
அல்லாஹ் அனைத்து பாவங்களையும் தாம் நாடியோருக்கு மண்ணிபை வழங்குகின்றான். ஆனால் அவனுக்கு இணைகர்பிப்போரை ஒருபோதும் மண்ணிக்கமாட்டான். என்பதை உணர்த்தல் மட்டுமே நாம் காலத்தை வென்றவர்களாக வாழமுடியும்.
நமது நிருபர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக