எம்.ஆர்.எஃப்., டயர் தொழிற்சாலை அப்ரண்டீஸ் பயிற்சிக்கு அழைப்பு (Dinamalam)
பெரம்பலூர்: "எம்.ஆர்.எஃப்., டயர் தொழிற்சாலையில் தொழில் பழகுனராக பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்' என, பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலையில் தொழில் பழகுனராக பயிற்சி பெற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தை
சேர்ந்தவர்கள், தங்களது பெயரை பதிவு செய்ய, கலெக்டர்
அலுவலகத்தில், புது வாழ்வு திட்டத்தின் மூலம்
சிறப்பு முகாம் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.அதன்படி அக்., 9ம் தேதி முதல், அக்., 17ம் தேதி வரை, காலை, 10.30 முதல், மாலை, 4 மணி வரை, பெயர் பதிவு நடக்கிறது. பதிவு
செய்ய கல்வித்தகுதி, ஜாதி சான்றிதழ், இருப்பிடச்சான்று
மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை எடுத்து
வர வேண்டும். தகுதியான நபர்களுக்கு அக்., 20ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது.தொழில்
பழகுனராக தேர்வு பெறும் நபர்களுக்கு, இரண்டு
மாதங்களுக்கு உதவித்தொகையாக, 1,000 ரூபாய் மற்றும் இலவச பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். பயிற்சி முடிவு
பெற்றதும், எம்.ஆர்.எப்., நிறுவனத்தில் பழகுனராக மூன்றாண்டுகள் தொடரலாம். அதன் பின்
தகுதி அடிப்படையில் பணியாளராக
சேர்த்துக்கொள்ளப்படுவர்.பயிற்சிக்கு, 18 முதல், 25 வயது வரை, உள்ள ஆண்கள், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி
மற்றும் ப்ளஸ் 2 தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் மற்றும், ஓராண்டு
ஐ.டி.ஐ., படிப்பு, பட்டயப்படிப்பு படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சமாக, ஐந்தடி, ஆறு அங்குலம் உயரமும், 50 கிலோ எடை இருக்க வேண்டும். தொழில் பழகுனர் பயிற்சி காலம், மூன்றாண்டுகள் ஆகும்.பயிற்சி
காலத்தில் உதவித் தொகையாக, முதல் ஆண்டில் மாதம், 5,460 ரூபாய் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, 94450-43119 என்ற மொபைலில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக